மாவட்ட துணைப் பொது மேலாளர்
பணி நிறைவு - கௌரவிப்பு
நமது மாவட்ட துணைப் பொது மேலாளர் (மனிதவளம் மற்றும் நிர்வாகம்)., திரு. K.பொன்னுசாமி அவர்கள் 31-03-2019 அன்று இலாக்கா பணி நிறைவு பெறுவதையொட்டி., நமது NFTE மாவட்ட சங்கம் சார்பாக 28-03-2019 அன்று நேரில் சந்தித்து வாழ்த்தி., கௌரவித்தோம்.
நமது வாழ்த்துக்களையும்., பாராட்டுக்களையும்., ஏற்றுக்கொண்ட துணைப் பொது மேலாளர் நன்றி தெரிவித்தார். மேலும்., அவரது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு., சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில்., மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்., மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி., மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்., மாவட்ட துணைத் தலைவர் தோழர். P.தேவா., மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.இறைமணி., மாவட்ட தணிக்கையாளர் தோழர். P.நாகேந்திரன்., மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். R.ராஜசேகரன்., GM அலுவலக உதவி கிளைச் செயலர் தோழர். G.ஜெய்குமார் மற்றும் மாவட்ட., கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நமது மாவட்ட துணைப் பொது மேலாளர் (மனிதவளம் மற்றும் நிர்வாகம்)., திரு. K.பொன்னுசாமி அவர்களின் பணி நிறைவுக் காலம் சிறப்புடன் விளங்க மனமார வாழ்த்துகின்றோம்.





























No comments:
Post a Comment