Wednesday 3 April 2019

ஒப்பந்த ஊழியர்களின்...! ஊதியத் தாமதத்தை...!
கண்டித்து...! NFTE மற்றும் TMTCLU சார்பாக...!
நடைபெற்ற...! கண்டன ஆர்ப்பாட்டம்...!


நமது BSNL தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் (Tamilnadu Telecom Circle) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2018 நவம்பர் முதல் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும்., உடனடியாக., ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும்., NFTE - BSNL மற்றும் TMTCLU (ஒப்பந்த ஊழியர் சங்கம் - TMTCLU) மாநில சங்கங்கள்., தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 26-03-2019 செவ்வாய்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.

இந்நிலையில்., இந்த அறைகூவலின் படி., நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களில் பெரும்பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு 2019 ஜனவரி மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்ட நிலையில்., Housekeeping பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மட்டும் 2019 ஜனவரி மாத ஊதியம் உள்ளிட்ட., அனைத்து பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கும் 2019 பிப்ரவரி மாத ஊதியம் வழங்கிட வலியுறுத்தி., நமது NFTE மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்கள் 26-03-2019 அன்று சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் (PGM அலுவலகத்தில்)., மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிட்டு இருந்தது.

இந்த திட்டமிடல் படி., நமது கண்டன ஆர்ப்பாட்டம் 26-03-2019 செவ்வாய் கிழமை அன்று மதியம் 01-00 மணிக்கு சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு., NFTE மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ் மற்றும் TMTCLU மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். L.அசோக்குமார் ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம் துவக்கி வைத்து., துவக்க உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கை முழக்கத்தை NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். S.கண்ணையன் எழுப்பினார்.

கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் TMTCLU மாவட்டச் செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர் கண்டன சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக., TMTCLU மாவட்டப் பொருளர் தோழர். G.செல்வராஜ் நன்றி கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்., 100-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









 













































இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்., 100-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment