Thursday 21 February 2019

பிப்ரவரி 18, 19, 20 - 2019 - வேலை நிறுத்தம்
சேலம் மாவட்டம் - ஓர் பார்வை


நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!

நமது BSNL ஊழியர்களுக்கு 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க (ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL) கூட்டமைப்பின் போராட்ட அறைகூவல் படி., நாடு முழுவதும் 2019 பிப்ரவரி 18., 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்:
2019 பிப்ரவரி 18: முதல் நாள் வேலை நிறுத்தம் - ஓர் பார்வை
மொத்த ஊழியர்கள் (Group A, B, C & D): 1041
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 555 (53.31%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 325 (31.21%)
பணி புரிந்த ஊழியர்கள்: 161 (15.46%)

அதிகாரிகள் தனியாக:
மொத்த அதிகாரிகள் (Group A & B): 230
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அதிகாரிகள்: 98 (42.60%)
விடுப்பு எடுத்த அதிகாரிகள்: 77 (33.47%)
பணி புரிந்த அதிகாரிகள்: 55 (23.91%)

ஊழியர்கள் தனியாக:
மொத்த ஊழியர்கள் (Group C & D): 811
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 457 (56.35%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 248 (30.57%)
பணி புரிந்த ஊழியர்கள்: 106 (13.07%)

வேலை நிறுத்தம்: 555 (53.31%) மற்றும் விடுப்பு : 325 (31.21%) எடுத்து
பணிக்கு வராத ஊழியர்களின் எண்ணிக்கை: 880 (84.52%)

2019 பிப்ரவரி 19: 2-வது நாள் வேலை நிறுத்தம் - ஓர் பார்வை
மொத்த ஊழியர்கள் (Group A, B, C & D): 1041
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 527 (50.62%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 296 (28.43%)
பணி புரிந்த ஊழியர்கள்: 218 (20.94%)

அதிகாரிகள் தனியாக:
மொத்த அதிகாரிகள் (Group A & B): 230
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அதிகாரிகள்: 81 (35.21%)
விடுப்பு எடுத்த அதிகாரிகள்: 66 (28.69%)
பணி புரிந்த அதிகாரிகள்: 83 (36.08%)

ஊழியர்கள் தனியாக:
மொத்த ஊழியர்கள் (Group C & D): 811
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 446 (54.99%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 230 (28.36%)
பணி புரிந்த ஊழியர்கள்: 135 (16.64%)

வேலை நிறுத்தம்: 527 (50.62%) மற்றும் விடுப்பு : 296 (28.43%) எடுத்து
பணிக்கு வராத ஊழியர்களின் எண்ணிக்கை: 823 (79.05%)

2019 பிப்ரவரி 20: 3-வது நாள் வேலை நிறுத்தம் - ஓர் பார்வை
மொத்த ஊழியர்கள் (Group A, B, C & D): 1041
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 523 (50.24%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 319 (30.64%)
பணி புரிந்த ஊழியர்கள்: 199 (19.11%)

அதிகாரிகள் தனியாக:
மொத்த அதிகாரிகள் (Group A & B): 230
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அதிகாரிகள்: 84 (36.52%)
விடுப்பு எடுத்த அதிகாரிகள்: 80 (34.78%)
பணி புரிந்த அதிகாரிகள்: 66 (28.69%)

ஊழியர்கள் தனியாக:
மொத்த ஊழியர்கள் (Group C & D): 811
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 439 (54.13%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 239 (29.46%)
பணி புரிந்த ஊழியர்கள்: 133 (16.39%)

வேலை நிறுத்தம்: 523 (50.24%) மற்றும் விடுப்பு : 319 (30.64%) எடுத்து
பணிக்கு வராத ஊழியர்களின் எண்ணிக்கை: 842 (80.88%)

நமது சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.

கடந்த 15 நாட்களாக., வேலை நிறுத்த போராட்டத்திற்காக தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்கள்., அனைத்து சங்க மாவட்ட செயலர்கள்., மாநில சங்க நிர்வாகிகள்., மாவட்ட சங்க நிர்வாகிகள்., கிளை செயலர்கள்., கிளை சங்க நிர்வாகிகள்., முன்னணி தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் சேலம் மாவட்ட AUAB (NFTE - TEPU - TMTCLU) கூட்டமைப்பின் நல் வாழ்த்துக்கள்.

மகத்தான வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற., அனைத்து வீரர்களுக்கும்., சேலம் மாவட்ட AUAB சார்பான வீர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி., பாராட்டுக்கள்.

2019 பிப்ரவரி 18., 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களின் வேலை நிறுத்தப் போராட்டம் என்பது நமக்கு வாழ்வா...? சாவா...? போராட்டம் என்றாலும்., நமது சேலம் மாவட்டத்தில் விடுப்பு எடுக்கும் மற்றும் பணிக்கு வரும் 
கலாச்சாரம் மாறவில்லை என்பதையே., இந்த மூன்று நாட்களின் வேலை நிறுத்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

இந்த மூன்று நாட்களில் ஒட்டு மொத்தமாக பணி புறக்கணிப்பு என்பது 84.52%., 79.05% மற்றும் 80.88% சதவீதமாக இருந்தாலும்., நேரடி வேலை நிறுத்தம் என்பது 53.31%., 50.62% மற்றும் 50.24% சதவீதம் தான் என்பது மிகுந்த வேதனைக்குரியது.

தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.

No comments:

Post a Comment