Monday 14 January 2019

NFTE பேரியக்கத்தின் தொடர் முயற்சிக்கு...
கிடைத்த மாபெரும் வெற்றி...


TT ஊழியர்களுக்கு தவறாக வழங்கப்பட்ட
ஊதியத்திற்கான - ஊதிய நிலுவை
பிடித்தம் - நிறுத்தம்


நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 1981., 1992., 1993., 1994., 1995 ஆகிய ஆண்டுகளில் RM மற்றும் குரூப் D பதவிக்கு பணி நியமனம் பெற்று., 1998-ம் ஆண்டு TM பதவி உயர்வுக்கான தேர்வு எழுதி., தேர்ச்சிப் பெற்ற தோழர்களுக்கு நமது சேலம் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் TM பதவிகள் (Post) இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக (1998 முதல் 2000 வரை) இரண்டு ஆண்டுகளுக்கு LM ஊதியம் மற்றும் LM மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டது.

அன்றைய ஊதிய நிலை...
  • RM ஊதியம்: 2550-55-2660-60-3200
  • LM ஊதியம்: 2750-70-3800-75-4400
  • LM மேம்படுத்தப்பட்ட ஊதியம்: 3050-75-3950-80-4500
  • TM ஊதியம்: 3200-85-4900

தற்காலிகமாக., LM ஊதியம் மற்றும் LM மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்ட., TM தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு., 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி., ஜூன்., ஜூலை., ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் TM பதவிகள் (Post) உருவாக்கப்பட்டு., TM பதவி உயர்வு வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் பொருத்தும் (Pay fixation) போது., RM ஊதியத்தில் இருந்து TM ஊதியம் பொருத்துவதற்கு பதிலாக., தவறுதலாக., தற்காலிகமாக தந்த LM ஊதியத்தில் இருந்து TM ஊதியம் பொருத்தியது தவறு என., சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு., தொலைத் தொடர்பு துறை CCA பிரிவால் கண்டறியப்பட்டு., இதை சரி செய்திட., மாவட்ட நிர்வாகங்களுக்கு வழிகாட்டுதல் உத்திரவு வெளியிடப்பட்டது.

இந்த தவறான., ஊதியம் பொருத்தியத்தின் (Pay fixation) காரணமாக 197 (தற்போது பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை: 178 மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை: 19) தோழர்., தோழியர்களுக்கு 2000 முதல் 2016 ஜனவரி வரை லட்ச ரூபாய்க்கு மேல் நிலுவை பிடித்தமும் மற்றும் 2016 பிப்ரவரி மாதத்தில் இருந்து சரியான ஊதியம் பொருத்தியதால் (Actual Pay fixation) ஊதியக் குறைப்பும் வந்தது.

மேலும்., DOT வழிகாட்டுதல் படி., 2016 பிப்ரவரி மாத ஊதியத்தில் இருந்து தவணை முறையில்., ஊதிய நிலுவை பிடித்தம் செய்திட., சேலம்., மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்திருந்தது.

இந்த நிலையில்., இப் பிரச்சனை 06-02-2016 அன்று வேலூரில் நடைபெற்ற., நமது தமிழ் மாநில செயற்குழுவில்., நமது மாவட்ட சங்கத்தால் எழுப்பப்பட்டு., விவாதிக்கப்பட்டு., மாநில சங்கத்தின் வழிகாட்டுதல் படி., மாவட்ட சங்கத்தின் சார்பாக 08-02-2016 அன்று நமது மாவட்ட பொது மேலாளர் திரு. S.சபீஷ்., ITS., மற்றும் மாவட்ட துணைப் பொது மேலாளர் (நிதி) திரு. P.மணி ஆகியோரை சந்தித்து., நிர்வாகத்தின் தவறான ஊதிய பொருத்துதளினால் (Pay fixation) ஏற்பட்ட நிலுவை பிடித்தத்தை ஏற்க முடியாது என்றும்., மேலும்., இப் பிரச்சனையை மாநில சங்கத்தின் மூலமாக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றும்., இப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு மற்றும் வழிகாட்டுதல் வரும் வரை நிலுவை பிடித்தம் செய்திட வேண்டாம் என்ற நமது கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கப்பட்டு நிலுவை பிடித்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும்., TT தோழர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் அவர்களது விடுப்புச் சம்பளத்தில் ஒரே தவணையாக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து நமது மாநில சங்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் DoP&T வெளியிட்ட உத்திரவை (உத்திரவு எண்: F.No. 18/03/2015-Estt. (Pay-I) dated 02-03-2016)  மேற்கோள் காட்டி., நமது மத்திய சங்கத்தின் மூலமாக மத்திய நிர்வாகத்தின் கவனத்திற்கு இப் பிரச்சனையை கொண்டு சென்றது. மேலும்., BSNL நிர்வாகம் தவறுதலாக., ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தினை பிடித்தம் செய்யக்கூடாது என்று 11-05-2017 அன்று நடைபெற்ற 35-வது தேசியக்குழுவில் இப்பிரச்சனையை எழுப்பி உரிய வழிகாட்டுதல் பெற்றது.

இந்த வழிகாட்டும் உத்திரவைத் தொடர்ந்து., நமது மாநில சங்கம் 06-06-2017 அன்று நடைபெற்ற 23-வது மாநிலக்குழுவில் இப் பிரச்சனையை எழுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஊழியர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில்., தஞ்சை., திருச்சி., மதுரை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் இப் பிரச்சனையின் காரணமாக தோழர்கள் பாதிக்கப்பட., 06-10-2017 அன்று தஞ்சையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவிலும் மற்றும் 14-05-2018 அன்று கரூரில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவிலும் இப் பிரச்சனை விவாதிக்கப்பட்டு., 09-10-2018 அன்று நடைபெற்ற 24-வது மாநிலக்குழுவில் (RJCM)., மீண்டும்., இப் பிரச்சனை வலியுறுத்தப்பட்டு., நீண்ட விவாதத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டு., இதற்கான உத்திரவை 27-11-2018 அன்று மாநில நிர்வாகம் வெளியிட்டது. 

உத்திரவு எண்: No. AO (D)/Genl-Corr./2018-19/66 dated 04-01-2019       
இந்த உத்திரவின் அடிப்படையில்...

தமிழகம் முழுவதும் சேலம்., தஞ்சை., திருச்சி., மதுரை மற்றும் வேலூர் ஆகிய தொலைத்தொடர்பு மாவட்டங்களில் 403-க்கும் மேற்பட்ட TT ஊழியர்களின் ஊதிய நிலுவைத் தொகை ரூபாய். 2,77,10,219/-க்கு விலக்கு அளிக்கப்படும் (அ) தள்ளுபடி செய்யப்படும்.

இதில்...
  • சேலம்: ரூபாய். 1,82,78,786/-
  • தஞ்சாவூர்: ரூபாய். 58,71,403/-
  • திருச்சி: ரூபாய். 18,51,271/-
  • மதுரை: ரூபாய். 15,86,250/-
  • வேலூர்: ரூபாய். 1,22,509/-   

இந்நிலையில்., நமது தமிழ் மாநில நிர்வாகத்தின் 27-11-2018 தேதியிட்ட உத்திரவை மேற்கோள் காட்டி., இந்த உத்திரவை நமது சேலம் மாவட்டத்தில் அமுல்படுத்திட வலியுறுத்தி., NFTE மாவட்ட சங்கத்தின் சார்பாக., 12-12-2018 அன்று நமது முதன்மை பொது மேலாளர் திரு. S.சபீஷ் அவர்களை சந்தித்து கடிதம் மற்றும் அதற்கான ஆவணங்களை வழங்கினோம். நமது கோரிக்கையின் நியாயம் உணர்ந்த., நமது முதன்மை பொது மேலாளர் திரு. S.சபீஷ், ITS., அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

நமது முதன்மை பொது மேலாளர் அளித்த உத்திரவாதத்தின் படி., நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் TT ஊழியர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதியத்திற்கான நிலுவை தொகையை தள்ளுபடி (waived off) செய்வதற்கான உத்திரவு 04-01-2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

உத்திரவு எண்: TAC/Pen & Spl.Cell/67-226/2017-18/35 dated 27-11-2018
இந்த உத்திரவின் படி...
  • நமது சேலம் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் தற்போது பணியில் உள்ள 178 தோழர்கள் பயன் பெறுவார்கள். இதில் குறைந்தபட்சமாக ரூபாய். 67,026/-ம் அதிகபட்சமாக ரூபாய். 1,35,315/-ம் பயன் பெறுவார்கள்.

அதே போல்., பணி ஓய்வு பெற்ற / இறந்து போன 19 தோழர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூபாய். 16,57,031/-க்கு விலக்கு அளித்து., விரைந்து பட்டுவாடா செய்யப்படும். இதற்கான உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதில் குறைந்தபட்சமாக ரூபாய். 28,478/-ம் அதிகபட்சமாக ரூபாய். 1,77,408/-ம் பயன் பெறுவார்கள்.

நமது மாவட்ட சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று., தொடர்ந்து முயற்சி செய்து., இந்த உத்திரவுகளை பெற்றுத்தந்த மத்திய., மாநில சங்கத்திற்கும் மற்றும் ஊழியர்களின் நியாயம் உணர்ந்து இந்த உத்திரவுகளை வெளியிட்ட மத்திய., மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு., நமது நன்றி பாராட்டுக்கள்.

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment