Saturday 12 January 2019

Institutional Mechanism குழு கூட்டம்


தொடர் நடவடிக்கைக்குழு கூட்டம்
Committee for Periodic Interaction
Institutional Mechanism

நமது AUAB-ன்., தொடர் போராட்ட கோரிக்கைகள் மீதான நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட Institutional Mechanism (Committee for Periodic Interaction - தொடர் நடவடிக்கைக்குழு)-வின் கூட்டம் 10-01-2019 அன்று டெல்லி., சஞ்சார் பவனில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் AUAB சார்பாக., NFTE பொதுச் செயலர் மற்றும் AUAB தலைவர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., BSNLEU பொதுச் செயலர் மற்றும் AUAB ஒருங்கிணைப்பாளர் தோழர். P.அபிமன்யூ., SNEA பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின் மற்றும் AIBSNLEA பொதுச் செயலர் தோழர். பிரகலாத்ராய் ஆகியோரும்., DOT சார்பாக Joint Secretary (Admn) திரு. R.K.காண்டேல் வால்., DDG (Estt) திரு. S.K.ஜெயின்., DDG (Budget) திரு. ராஜீவ் குமார்., இயக்குனர் (Estt) திரு. சஞ்சய் அகர்வால் மற்றும் இயக்குனர் (PSU) திரு. பவன் குப்தா ஆகியோரும் பங்கேற்றனர். Advisor (Finance) திரு. P.K.சின்ஹா பங்கேற்கவில்லை. BSNL சார்பாக இயக்குனர் (மனிதவளம்) திருமதி. T.சுஜாதா ராய் மற்றும் பொது மேலாளர் (ஊழியர் உறவு) திரு. A.M.குப்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

இக் குழுவிற்கு தலைவராக., DOT-ன் கூடுதல் செயலர் (Additional Secretary) அவர்களை நியமிக்க வேண்டும் என அனைத்து சங்க கூட்டமைப்பு (AUAB) கடுமையாக வலியுறுத்தி வந்தது. இணை செயலர் (Joint Secretary) தலைமையில் கூட்டம் நடைபெற்றால்., இக்குழுவால் பயன் ஏதும் கிடைக்காது என்றும்., மேலும்., இக்குழுவால் எந்தவித முடிவினையும் எட்ட முடியாது என., AUAB கூட்டமைப்பு கருதியது., சரி என., நிரூபிக்கப்பட்டது. 3-வது ஊதிய மாற்றம்., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு., வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு வழங்குவது மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவற்றின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்கள் எதனையும்., Joint Secretary (Admn) திரு. R.K.காண்டேல் வால் மற்றும் DDG (Estt) திரு. S.K.ஜெயின் ஆகியோரால் தர இயலவில்லை மேலும்., நமது கோரிக்கைகளுக்கு எதிராகவே கருத்து தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தினால் எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை.

எனவே., இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர் தொலைத்தொடர்பு துறையின் கூடுதல் செயலர் திரு. அன்ஷு பிரகாஷ் அவர்களை., AUAB தலைவர்கள் சந்தித்து., இணை செயலருடன் நடைபெற்ற கூட்டம் தொடர்பான தங்களின் ஒட்டு மொத்த அதிருப்தியை தெரிவித்தனர். அதற்கு பின்னர் DOT-யின் கூடுதல் செயலரோடு நமது கோரிக்கைகள் தொடர்பான முழு விவாதம் நடைபெற்றது. இவ் விவாதத்தின் போது., Joint Secretary (Admn) திரு. R.K.காண்டேல் வால்., இயக்குனர் (PSU) திரு. பவன் குப்தா., இயக்குனர் (மனிதவளம்) திருமதி. T.சுஜாதா ராய் மற்றும் பொது மேலாளர் (ஊழியர் உறவு) திரு. A.M.குப்தா ஆகியோரும் உடன் இருந்தனர்.

3-வது ஊதிய மாற்றம்:

இது தொடர்பான விரிவான விவாதம் நடைபெற்றது. 3-வது ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண DOT விரும்புவதாக கூடுதல் செயலர் தெரிவித்தார். ஆனால் மிகப் பெரிய அளவிலான ஊதிய உயர்வை வழங்க BSNL-ன் நிதி நிலைமை அனுமதிக்காது என்பதால்., 15% சதவீத ஊதிய நிர்ணய பலனுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவது DOT-க்கு மிகவும் சிரமமான விஷயம் என அவர் உறுதிபட தெரிவித்தார். இது தொடர்பாக AUAB தலைவர்களும்., BSNL நிர்வாகமும் விவாதித்து மற்ற அமைச்சரகங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க முன்மொழிவோடு அடுத்த வாரம் தன்னை வந்து சந்திக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

BSNL-க்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு:

BSNL-க்கு 4G அலைக்கற்றை வழங்குவதற்கு., மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கு.,  DOT அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என கூடுதல் செயலர் உறுதியுடன் தெரிவித்தார். பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ள டெலிகாம் கமிஷன் கூட்டத்தில் தேவையான ஒப்புதலை பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். அதன் பின் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இந்த முன்மொழிவு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு:

வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு தொடர்பான விஷயத்தில்., செலவினங்களுக்கான துறை (Department of Expenditure) சில விவரங்களை கேட்டுள்ளதாகவும்., அதற்கான கடிதத்தை DOT., BSNL-க்கு எழுதியுள்ளதாகவும் கூடுதல் செயலர் தெரிவித்தார். அதற்கு., ஓரிரு தினங்களுக்குள் அந்த கடிதத்திற்கு பதில் அனுப்பப்படும் என இயக்குனர் (மனிதவளம்) தெரிவித்தார். அதற்கு பின் DPE-யின் ஒப்புதலை பெறுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூடுதல் செயலர் உறுதி அளித்தார்.

ஓய்வூதிய மாற்றம்:

ஓய்வூதிய மாற்றம் தொடர்பான பிரச்சனையில் உள்ள சுணக்கம் குறித்து., தங்களின் அதிருப்தியை உறுதியாக தெரிவித்த AUAB தலைவர்கள்., உரிய நடவடிக்கைகளை DOT உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அதன் பின்னர் ஓய்வூதிய நிர்ணயப் பலன்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியாக BSNL உருவாகும் போது., BSNL ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசு வெளியிட்ட உத்திரவு உள்ளிட்ட ஆவணங்களை தனக்கு வழங்குமாறு கூடுதல் செயலர்., இயக்குனர் (மனிதவளம்) அவர்களை கேட்டுக் கொண்டார்.

AUAB தலைவர்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் கூடுதல் செயலர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறும்.

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment