Saturday, 5 January 2019

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் 
செயல்திறன் அறிக்கை - 2017-2018


பொதுத்துறை நிறுவனங்கள் (Public Sector Enterprises) அரசின் சமூக கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும்., உற்பத்தியின் தன்னிறைவை எட்டும் நோக்கத்தோடும் ரூபாய் 29/- கோடி முதலீட்டுடன் 5 நிறுவனங்கள் முதலாம் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் உருவாக்கப்பட்டன. 

தற்போது 31-03-2018 அன்றைய தேதியில் 339 பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போதைய அதன் முதலீட்டு மதிப்பு ரூ. 13,73,412/- கோடியாக உள்ளது.

339 பொதுத்துறை நிறுவனங்களின் செலுத்தப்பட்ட மூலதனம் 31-03-2018 அன்று ரூ. 2,49,988/- கோடியாக உள்ளது. இது., 31-03-2017 அன்றைய மதிப்பை விட 7.68% சதவீதம் அதிகம்.

31-03-2018 அன்றைய தேதியில் ரூ. 13,74,412/- கோடி பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பு 2017-ஆம் ஆண்டை விட 10.24% சதவீதம் அதிகம்.

2017-2018 ஆம் ஆண்டு காலத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இணைந்து ரூ. 21,55,948/- கோடி செயல்பாட்டு வருவாயை ஈட்டியுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10.24% சதவீதம் அதிகம்.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த வருமானம் 2017-2018 ஆம் ஆண்டில் ரூ. 20,33,732/- கோடியாக உள்ளது.

184 லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து 2017-2018 ஆம் ஆண்டு காலத்தில் ரூ. 1,59,635/- கோடி லாபத்தை ஈட்டியுள்ளன.

71 நட்டமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் 2017-2018 ஆம் ஆண்டின் மொத்த நட்டம் ரூ. 31,261/- கோடி.

257 பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து 2017-2018 ஆம் ஆண்டில் ரூ. 1,28,374/- கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளன.

2017-2018 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் அரசுக்கு செலுத்திய ஈவுத் தொகை ரூ. 76,578/- கோடி.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 10.88 லட்சமாக உள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில் ஊதியமாக ரூ. 1,57,621/- கோடி வழங்கப்பட்டுள்ளது.

339 பொதுத்துறை நிறுவனங்களில் (Public Sector Enterprises) விவசாயத் துறையில் 3 நிறுவனங்களும்., சுரங்கத்துறையில் 24 நிறுவனங்களும்., உற்பத்தி துறையில் 100 நிறுவனங்களும்., சேவைத் துறையில் 130 நிறுவனங்களும்., தொலைத்தொடர்பு துறையில் 8 நிறுவனங்களும் மற்றும் கட்டுமானத் துறையில் 82 நிறுவனங்களும் செயல்படுகின்றன.

லாபம் ஈட்டும் முதல் 10 நிறுவனங்களில் ரூ. 21,346/- கோடி லாபத்துடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதலிடத்திலும்., ரூ. 19,945/- கோடி லாபத்துடன் ஆயில் & நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் இரண்டாவது இடத்திலும்., ரூ. 10,343/- கோடி லாபத்துடன் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

நட்டமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில் ரூ. 7993/ கோடி நட்டத்துடன் நமது BSNL நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ரூ. 5338/- கோடி நட்டத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் இரண்டாவது இடத்திலும்., ரூ. 2973/- கோடி நட்டத்துடன் MTNL நிறுவனம் மூன்றவாது இடத்திலும் உள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.18 பில்லியனாக உள்ளது. அதன்., பொருளாதார மதிப்பு 2020 ஆம் ஆண்டில் 14 டிரில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு துறையில் 10.74% சதவீதத்தை பொதுத்துறை நிறுவனங்களும்., 89.26% சதவீதத்தை தனியார் நிறுவனங்களும் அங்கம் வகிக்கின்றன.

தொலைபேசி இணைப்புகளின் அடர்த்தி 91.64% சதவீதமாக உள்ளது. தொலைத் தொடர்பு துறையில் 1.74 லட்சம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக நமது BSNL நிறுவனம் உள்ளது. மொத்த வருவாயில் 60% சதவீதத்திற்கும் அதிகமான தொகையை ஊழியர்களுக்கு அது ஊதியமாக வழங்கி வருகிறது. ஆனால்., தனியார் நிறுவனங்கள் அதன் வருவாயில் வெறும் 10% சதவீதம் மட்டுமே ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்குகின்றன. தொலைத்தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்களின் கடன் தொகை 8 லட்சம் கோடி எட்டியுள்ளது. ஆனால்., பொதுத்துறை நிறுவனமான BSNL-க்கு வெறும் ரூ. 15,000/- கோடி மட்டுமே கடன் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது.

அரசின் தனியார் ஆதரவு கொள்கைகள் தொலைத்தொடர்பு துறையில் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளன. இருப்பினும்., தனியார் நிறுவனங்களின் போட்டியை அவை திறமையாக எதிர்கொண்டு வருகின்றன.

No comments:

Post a Comment