ஜனவரி 8, 9 - 2019 - பொது வேலை நிறுத்தம்
வாயிற் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோத., மக்கள் விரோத., தேச விரோதக் கொள்கைகளைக் கண்டித்து., 12-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி., 2019 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு., AITUC., CITU., INTUC., HMS மற்றும் LPF உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
இந்த அறைகூவலைத் தொடர்ந்து., நமது BSNL நிறுவனத்தில் NFTE., BSNLEU., BSNLMS மற்றும் TEPU ஆகிய மத்திய சங்கங்கள்., இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்து., வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை 24-12-2018 அன்று நமது BSNL CMD., DOT செயலர் மற்றும் மத்திய முதன்மை தொழிலாளர் நல ஆணையர் ஆகியோருக்கு அளித்துள்ளன.
இந்நிலையில்., 2019 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்., தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை., நமது BSNL அரங்கில் வெற்றி பெறச் செய்திட., வேலை நிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை ஊழியர்களிடம் விளக்கும் விதமாக., நாடு முழுவதும்., 05-01-2019 அன்று மதிய உணவு இடைவேளையில்., வாயிற் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திட., NFTE., BSNLEU., BSNLMS மற்றும் TEPU ஆகிய மத்திய சங்கங்கள் 02-01-2019 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்த போராட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து., நமது சேலம் தொலைத் தொடர்பு மாவட்டத்தில்., NFTE., TEPU மற்றும் TMTCLU சார்பாக., 05-01-2019 சனிக்கிழமை மதியம் 01-00 மணிக்கு., சேலம் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மாபெரும் வாயிற் கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழர்களே... அணி திரள்வீர்...
தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBUA.,
சேலம் - SSA.
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBUA.,
சேலம் - SSA.
No comments:
Post a Comment