மனநிறைவான மாவட்ட செயற்குழு - செவ்வை

எதிர்காலப் பணிகளை திட்டமிட்ட...
மாவட்ட செயற்குழு...


எதிர்காலப் பணிகளை திட்டமிட்ட...
மாவட்ட செயற்குழு...
நமது மாவட்ட செயற்குழு மற்றும் சேவைக் கருத்தரங்கம்., சேலம்., செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில் 24-12-2018 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மிக எழுச்சியுடன் தொடங்கியது. வேலூர் கிளைச் செயலர் தோழர். S.வேணுகோபால் தேசியக்கொடியை ஏற்றி வைக்க., K.N. பட்டி கிளைச் செயலர் தோழர். C.அய்யந்துரை நமது சங்க கொடியை ஏற்றி வைக்க., 250-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் பங்கேற்க செயற்குழு முறையாக துவங்கியது.
கொடி ஏற்று நிகழ்வுகளை தொடர்ந்து., மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி தலைமையேற்று., தலைமை உரை ஆற்ற., சேலம்., செவ்வை கிளைச் செயலர் தோழர். A.கருணாகரன் வரவேற்புரை ஆற்ற., மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். R.மணி அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
ஆய்படுபொருள் ஏற்புக்கு பின்., மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் விவாதத்திற்கான ஆய்படுபொருளை அறிமுகம் செய்து வைத்து., மாவட்ட சங்க செய்லபாடுகள்., இன்றைய சூழ்நிலை., நடந்து முடிந்த போராட்டங்கள்., காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு மற்றும் தீர்வு., ஹரித்துவார் மத்திய செயற்குழு., கோவை மாநில செயற்குழு., ஜனவரி 8, 9 வேலை நிறுத்தம்., மாற்றல் கொள்கை., ஊழியர் பிரச்சனைகள்., AUAB-ன் முடிவுகள் மற்றும் அமுலாக்கம் பற்றி அறிமுக உரை ஆற்றினார்.
மாவட்ட செயற்குழுவை வாழ்த்தி., TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம் மற்றும் TMTCLU சேலம்., மாவட்டச் செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட செயற்குழுவின் ஒரு பகுதியாக., வாடிக்கையாளர் வாசல் நோக்கி - நமது சேவை என்ற தலைப்பில் நடைபெற்ற., சேவைக் கருத்தரங்கில்., மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்., மாவட்ட உதவிச் செயலர் தோழர். K.தேவராஜன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் தோழர். P.தேவா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் தனது சிறப்புரையில்., BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை., நடந்து முடிந்த போராட்டங்கள்., காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு மற்றும் தீர்வு., ஊதிய மாற்றம்., டவர் பராமரிப்பு., ஜனவரி 8, 9 வேலை நிறுத்தம்., AUAB-ன் முடிவுகள் மற்றும் அமுலாக்கம்., எதிர்கால கடமைகள் பற்றி தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.
செயற்குழுவை செழுமைப்படுத்திட., மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். S.R.செல்வராஜ் அமைப்பு நிலை விவாதத்தை துவக்கி வைக்க., கிளைச் செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள்., ஆய்படு பொருள் விவாதங்களுடன் தங்கள் பகுதி பிரச்சனைகளை., எவ்வித பிரச்சனையும் இன்றி எடுத்துரைத்தனர்.
நமது NFTE பேரியக்கத்தில் உறுப்பினராக இருந்து (ஜனவரி 2018 முதல் நவம்பர் 2018 வரை) ஓய்வு பெற்ற 37 தோழர்., தோழியர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி கௌரவிக்கப்பட்டனர்.
அதே போல்., BSNLEU சங்கத்தில் இருந்து விலகி., நமது தாய் சங்கமான NFTE பேரியக்கத்தில் இணைந்த தோழர். C.முருகானந்தம், TT., மெய்யனூர்., வாழ்த்தி., வரவேற்கப்பட்டு., கௌரவிக்கப்பட்டார்.
நிறைவாக., மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் விவாதங்களுக்கு பதில் அளிக்க., தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக., மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூற., இரவு 08-00 மணிக்கு செயற்குழு இனிதே முடிவுற்றது.
தோழமையான உபசரிப்பு., அறுசுவை உணவு., அற்புதமான விருந்தோம்பல்., செவ்வை தொலைபேசி நிலையமெங்கும் செங்கொடி மற்றும் தோரணம் என சிறப்பான ஏற்பாடுகளை செய்த சேலம்., செவ்வை தோழர்கள் உள்ளிட்ட மெயின்., மெய்யனூர் மற்றும் ஏற்காடு கிளைத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாவட்ட சங்கத்தின் நன்றி பாராட்டுக்கள்.
மாவட்ட செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முடிவுகள்:
- மிக குறுகிய காலத்தில் மாவட்ட செயற்குழு மற்றும் சேவைக் கருத்தரங்கம் நடத்திட நிதி உதவி செய்த., மெயின்., செவ்வை., மெய்யனூர் மற்றும் ஏற்காடு கிளைத் தோழர்களை., இம் மாவட்ட செயற்குழு தனது பாராட்டுக்களை., நன்றியை உரித்தாக்குகிறது.
- கோவை மாநிலச் செயற்குழு முடிவின் அடிப்படையில்., நமது மாவட்ட சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று., கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரிப் படுகை விவசாய பெருமக்களுக்கு, நிதி உதவி அளித்த அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., ஒப்பந்த ஊழியர்கள்., ஓய்வூதியர்கள்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இம் மாவட்ட செயற்குழு தனது நன்றியை உரித்தாக்குகிறது.
- AUAB கூட்டமைப்பின் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று வெற்றி பெறச் செய்த., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும் அதற்காக கடுமையாக உழைத்திட்ட கிளைச் செயலர்கள்., மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவருக்கும் செயற்குழு தனது புரட்சிகர வாழ்த்துக்களை., நன்றியை உரித்தாக்குகிறது.
- 3-வது ஊதிய மாற்றம் உடனடியாக பெறப்பட வேண்டும்., ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் ஓய்வு பெறுகின்றனர். இதனால்., ஊழியர்களிடையே கடுமையான எதிர்ப்பு உள்ளது. எனவே., 3-வது ஊதிய மாற்றத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விரைந்து முடித்திட., நமது NFTE மத்திய சங்கம் மற்றும் AUAB கூட்டமைப்பை., இம் மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.
- BSNL நிறுவனத்தின் இன்றைய நிதிநிலையைக் கணக்கில் கொண்டு வீண் மற்றும் ஊதாரிச் செலவினங்களை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திட இச் செயற்குழு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
- 2018 மாற்றல் கொள்கையில் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில்., மாற்றல் கொள்கையை., மாற்றல் கொள்கை விதிப்படி எந்த ஒரு ஊழியருக்கும் சாதக., பாதகங்கள் இல்லாமல் விரைந்து முடித்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது (அ) வழிகாட்டுகிறது. மேலும்., மாற்றல் கொள்கையை., சுமூகமாக முடித்திட., மாவட்ட சங்கத்திற்கு., இச் செயற்குழு கூடுதல் அதிகாரம் அளிக்கிறது.
- நமது சேலம் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை நடத்தி பெறப்பட்ட., புதிய உறுப்பினருக்கான விண்ணப்பங்களை 2019 ஜனவரி 10-ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் சேர்த்திட இம் மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.
- 6-வது மாவட்ட மாநாட்டினை மிகச் சிறப்பாக., 8-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு பிறகு., 2019 ஜூன் (அல்லது) ஜூலை மாதத்தில் நடத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது. அதற்கு முன்பாக., அனைத்து கிளைகளின் மாநாடுகளையும் 2019 மார்ச் 31-க்குள் நடத்திட இச் செயற்குழு வழிகாட்டுகிறது.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும்., காலதாமதமின்றி உரிய தேதியில்., ஊதிய பட்டியலுடன்., ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்திட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது.
- ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு கருதி., காப்பீடு திட்டத்தை (தனி காப்பீடு திட்டத்தை) அமுல்படுத்திட., மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒப்பந்தக்காரர்களை வலியுறுத்துவது.
- TMTCLU மாவட்ட மாநாட்டை 2019 பிப்ரவரி மாத இறுதிக்குள் மிகச் சிறப்பாக நடத்துவது.
- AUAB கூட்டமைப்பு முடிவின்படி., நமது சேலம் மாவட்டத்தில்., BSNL வாடிக்கையாளர் இல்லம் நோக்கி நமது சேவை என்கின்ற இயக்கத்தை வெற்றிகரமாக்கிட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
- 2019 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தை., நமது சேலம் மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்வது.
- நமது மாவட்ட சங்கத்தின் ஒரு சில பிரச்சனைகளை மற்றும் கோரிக்கைகளை மனித நேயத்துடன் தீர்த்து வைத்த., நமது மாவட்ட பொது மேலாளர் அவர்களுக்கு., இம் மாவட்ட செயற்குழு தனது நன்றியை உரித்தாக்குகிறது.
- அடுத்த மாவட்ட செயற்குழு கூட்டம் 2019 மார்ச் (அல்லது) ஏப்ரல் மாதத்தில் ராசிபுரத்தில் நடைபெறும்.

தோழமையான உபசரிப்பு., அறுசுவை உணவு., அற்புதமான விருந்தோம்பல்., செவ்வை தொலைபேசி நிலையமெங்கும் செங்கொடி மற்றும் தோரணம் என சிறப்பான ஏற்பாடுகளை செய்த சேலம்., செவ்வை தோழர்கள் உள்ளிட்ட மெயின்., மெய்யனூர் மற்றும் ஏற்காடு கிளைத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாவட்ட சங்கத்தின் நன்றி பாராட்டுக்கள்.







































































































































No comments:
Post a Comment