3-வது ஊதிய மாற்றமும்...! DOT-ன் விளக்கங்களும்...!

ஊதிய மாற்றம் - கூடுதல் விளக்கங்கள் கோரி...
தொலைத்தொடர்பு துறை - BSNL-க்கு எழுதிய கடிதம்...
நமது BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 3-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துவது குறித்து விளக்கம் அளிப்பது தொடர்பாக., BSNL நிர்வாகம் 26-11-2018 அன்று தொலைத்தொடர்பு துறை (DOT)-க்கு எழுதிய கடிதத்தின் மீது., தொலைத்தொடர்பு துறை (DOT) மேலும்., கூடுதல் விளக்கங்களை கோரி 19-12-2018 அன்று கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.
அதன் சாரம்சம் என்னவெனில்.,
தங்களது அறிக்கையை தீராக ஆராய்ந்ததாகவும்., அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட குறிப்புகளின் மீது தங்களது விளக்கங்களை அளிக்க வேண்டுகிறோம்.
தொலைத்தொடர்பு துறை (DOT) எழுப்பி உள்ள கூடுதல் விளக்கங்கள் குறித்த விபரங்கள்:
- BSNL நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில்., தொடர்ந்து வருவாய் குறைந்து வரும் சூழ்நிலையில்., 3-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துவதினால் ஏற்படக்கூடிய கூடுதல் நிதிச்சுமையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.
- அதிகமாக செலுத்திய ஓய்வூதிய பங்களிப்பை திரும்ப செலுத்துவதற்கான அரசு வழிகாட்டுதல் ஏதும் இல்லாத சூழ்நிலையில்., BSNL ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 58-ஆக குறைத்தால் ரூ. 2980/- கோடி கூடுதலாக நிதி கிடைக்கும் என கற்பிதமாக கூறப்பட்டுள்ளது. எனவே., நிகழ்கால மதிப்பீடுகளின் அடிப்படையில் கணக்கிட வேண்டுகிறோம்.
- 31-03-2018 அன்று BSNL நிறுவனத்தின் கடன் சுமை ரூ. 15,366/- கோடியாக உள்ளது. இதனால்., 3-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்தினால்., அதன் பொருளாதார நலன் மேலும் பாதிக்கப்படும். இருப்பினும் கூடுதல் பணியாட்களுடன் BSNL தன்னை நிலைநிறுத்திக் கொண்டு போட்டியை எதிர் கொண்டு வருகிறது.
- BSNL வருவாய்க்கான மாற்று ஆதாரமாக எதிர்கால திட்டங்களின் மூலம் ஈட்டப்போகிற வருமானத்தை கணக்கு காட்டுகிறது. BSNL உடனடி வருவாய்க்கான ஆதாரத்தை திட்டமிட வேண்டும்.
- BSNL நிறுவனம் 2025-2026-ஆம் நிதி ஆண்டில் அதன் வருவாய் ரூ. 26,095/- கோடியாக உயரும் என கூறி உள்ளது. அது தற்போதைய போட்டிச் சூழ்நிலையில் காலத்தை மீறிய மதிப்பீடு.
- BSNL நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கை முற்றிலும் அதிகாரிகள் ஊதிய மாற்றத்திற்கான குறிப்புகள்., ஊழியர்களின் ஊதிய மாற்றம் சம்பந்தமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் நடப்பு நிலையை தெரிவிக்க வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment