தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத., மக்கள் விரோத., தேச விரோதக் கொள்கைகளைக் கண்டித்து., அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில்., 2019 ஜனவரி 8., 9 ஆகிய இரண்டு நாட்கள் தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தம் செய்திட., இந்தியத் தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறைகூவல் விடுத்திருந்தது.
இந்த அறைகூவலைத் தொடர்ந்து.,
நமது BSNL நிறுவனத்தில்., NFTE., BSNLEU., TEPU மற்றும் BSNLMS ஆகிய மத்திய சங்கங்களும்., இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்து., வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை., 24-12-2018 அன்று நமது CMD., தொலைத்தொடர்பு செயலர் மற்றும் மத்திய முதன்மை தொழிலாளர் ஆணையர் ஆகியோருக்கு கொடுத்துள்ளனர்.
பொது கோரிக்கைகள்:
மத்திய அரசே...!
- விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து., பொது விநியோக முறையை பலப்படுத்து.
- வேலை வாய்ப்புக்களை உருவாக்கு.
- தொழிலாளர் நல சட்டங்களை கறாராக அமுல்படுத்து., இச் சட்டங்களை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கு.
- அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்டங்களை அமுல்படுத்து.
- குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18,000/- வழங்கு.
- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3,000/- வழங்கு.
- மத்திய., மாநில பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்து.
- ஒப்பந்த ஊழியர் முறையை ரத்து செய்., சம வேலைக்கு சம ஊதியம் வழங்கு.
- போனஸ் மற்றும் தொழிலாளர் வைப்புநிதி (EPF) உச்சவரம்பை நீக்கு., தொழிலாளர் பணிக்கொடை அளவை உயர்த்து.
- தொழிற்சங்கப் பதிவு உரிமைகளை நடைமுறைப்படுத்து., சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிகளை அமுல்படுத்து.
- தொழிலாளர் விரோத சட்டங்களை உருவாக்காதே.
- இரயில்வே., ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவ துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே.
தோழர்களே...
தேசத்தை சீரழிக்கும்... மத்திய பாஜக அரசின்...
மக்கள் விரோத... தொழிலாளர் விரோத...
கொள்கைகளுக்கு எதிராய்...
களம் காண்போம்... நம் உரிமை வெல்வோம்...
தயாராவீர்... தோழர்களே...
தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:
Post a Comment