Thursday, 22 November 2018

BSNL ஊழியர்களின் சேமநல வாரியக்குழு கூட்டம்




BSNL ஊழியர்களின் சேமநல வாரியக்குழு (BSNL Staff Welfare Board)-வின்., 12-வது கூட்டம்., டெல்லி., கார்ப்பரேட் அலுவலகத்தில் 03-08-2018 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்தின் குறிப்பை 19-11-2018 அன்று BSNL கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

BSNL ஊழியர்களின் சேமநல வாரியக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
  • தொழில்நுட்ப உதவித்தொகை வழங்குவதற்கு., இனி தொழில்நுட்ப படிப்புகளுடன் (Technical Courses) முதுகலை படிப்புகளும் (Post Graduate Courses) இணைக்கப்படும்.
  • நமது BSNL ஊழியர்களின் குழந்தைகள்., நமது BSNL நிறுவனத்தின் உதவித்தொகையை (Scholarship) தவிர., எந்த ஒரு நிறுவனத்திலும் உதவித்தொகை பெறக்கூடாது. இதை தவிர்த்து., எங்காவது உதவித் தொகை பெற்றால் அவர்களுக்கு., நமது நிறுவனத்தில் BSNL ஊழியர்களின் சேமநல வாரியக்குழுவின் நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித்தொகை இனி வழங்கப்படமாட்டாது.
  • BSNL ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூபாய். 15,000/-இல் இருந்து ரூபாய். 20,000/- ஆக உயர்த்தப்படும். 
  • மாநில சேமநலநிதிக்குழுக்களுக்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடு (Annual Grant) ரூபாய். 15,000/- ஆக இருந்தது. தற்போது அந்தந்த மாநிலங்களின் பரப்பளவிற்கு ஏற்ப சிறியது (Small)., நடுத்தரம் (Medium) மற்றும் பெரியது (Large) என வகைப்படுத்தப்பட்டு ரூபாய். 15,000/-., ரூபாய். 20,000/- மற்றும் ரூபாய். 25,000/- என உயர்த்தி வழங்கப்படும். மேலும்., சேமநலநிதிக்குழுக்களின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு இத் தொகை உயர்த்தப்படும். BSNL சேவைகளை விளம்பரப்படுத்த., இனி., சேமநலநிதிக்குழு., கூட்டங்கள் மற்றும் விழாக்கள் நடத்தலாம்.
  • ஊழியர்களின் உடல்திறன் மற்றும் மனநல குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை A மற்றும் B நகரங்களில் ஒரு குழந்தைக்கு ரூபாய். 150/-இல் இருந்து ரூபாய். 200/- ஆகவும்., மற்ற நகரங்களில் ரூபாய். 100/- இல் இருந்து ரூபாய். 150/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த உதவித்தொகையை இனி குரூப் டி ஊழியர்களில் இருந்து E4 ஊதிய நிலையில் உள்ள அதிகாரிகள் வரை பெறலாம்.
  • சேமநலநிதிக்குழுவின் காசாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்க ஊதியம்., இனி., மத்திய சேமநலநிதிக்குழு காசாளர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய். 5000/- ஆகவும்., மாநில சேமநலநிதிக்குழு காசாளர்களுக்கு ரூபாய். 4000/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

No comments:

Post a Comment