மன நிறைவை...! தந்த...!
கோவை மாநிலச் செயற்குழு...!
நமது NFTE தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம்., கோவை., நகரத்தார் திருமண மண்டபத்தில் 19-11-2018 திங்கட்கிழமை அன்று காலை 09-30 மணிக்கு., சம்மேளனச் செயலர் தோழர். P.காமராஜ் தேசிய கொடியை ஏற்றி வைக்க., மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன் விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே நமது சங்க கொடியை ஏற்றி வைக்க., மாநில துணைத் தலைவர் தோழர். P.சென்னகேசவன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் பங்கேற்க எழுச்சியுடன் துவங்கியது.
கோவை மாவட்ட பொறுப்புச் செயலர் தோழர். K.பாலசுப்ரமணியன் வரவேற்புக்குழுவின் சார்பாக வரவேற்புரை ஆற்ற., மாநில அமைப்புச் செயலர் தோழர். K.அல்லிராஜா மாநில சங்கத்தின் சார்பாக வரவேற்புரை நிகழ்த்த., மாநில உதவிச் செயலர் தோழர். D.ரமேஷ் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
சம்மேளனச் செயலர் தோழர். P.காமராஜ் செயற்குழுவை துவக்கி வைத்து., தன் துவக்க உரையில்., 3-வது ஊதிய மாற்றம் குறித்து நமது சங்கத்தின் செயல்பாடுகளை விவரித்தார். ஊதிய மாற்றத்திற்கான DPE வழிகாட்டல் வெளியீடு., பிரதமர் அலுவலகத்தை அணுகியது., தேக்கநிலையற்ற ஊதிய நிலைகளை பரிந்துரைத்தது என நமது சங்கத்தின் தனித்தன்மையான செயல்பாட்டினை எடுத்துரைத்தார். ஊதிய மாற்றத்தில் ஒருமுகத்தன்மையை வெளிக்கொணர்வதையே நோக்கமாக கொண்டு நாம் செயல்படுவதாக கூறினார். மேலும்., 2019 உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் மற்றும் அதன் வழிமுறைகள்., நமது திட்டங்கள் மற்றும் டவர் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி அருமையான சிந்தனைகளை., செய்திகளை தெளிவுபட திறம்பட எடுத்துரைத்தார்.
மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன் விவாதத்திற்கான ஆய்படு பொருளை அறிமுகம் செய்து வைத்து தன் அறிமுக உரையில்., ஊதிய மாற்றம்., டவர் பராமரிப்பு தனியார்மயம்., 2019 உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்., ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்., அமைப்பு நிலை மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர். A.செம்மல் அமுதம் ஹரித்துவார் மத்திய செயற்குழு மற்றும் தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
செயற்குழுவை செழுமைப்படுத்திட., மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை எடுத்துரைத்து., விவாதத்தில் பங்கேற்றனர். இவ் விவாதத்தில்., ஊதிய மாற்றம் உள்ளிட்ட 5-அம்ச கோரிக்கைகளுக்காக அறிவிக்கப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் தேவை., டவர் பராமரிப்பு., 2019 உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்., ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் பெற்றுத்தந்ததில் நமது சங்கத்தின் செயல்பாடு., நமது நிறுவனத்தின் நிதி மேம்பாட்டிற்காக USO நிதியிலிருந்து கடன் பெறுவது மற்றும் கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிதி திரட்டுவது உள்ளிட்ட ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்தனர். நமது சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் விவாதத்தில் பங்கேற்று சிறப்பித்தார்.
மாநில செயற்குழுவின் ஒரு பகுதியாக., சஞ்சார் விசிஷ்ட் விருது பெற்ற., நமது தோழர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இப் பாராட்டு விழாவில்., தோழர்கள். S.லக்ஷ்மண பெருமாள், NFTE மாவட்டச் செயலர்., நாகர்கோவில்., S.கலிய பெருமாள்., TT., திருச்சி., M.வடிவேல்., OS., விருதுநகர்., மற்றும் U.மகேந்திரன்., SOA (G)., மதுரை ஆகிய தோழர்களுக்கு நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக பதக்கமும்., பொன்னாடை-ம் அணிவித்து கௌரவிக்கப் பட்டனர்.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்., கோவை மாவட்ட முதன்மை பொது மேலாளர் திரு. G.முரளீதரன்., ITS., அவர்கள் நமது செயற்குழுவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது வாழ்த்து உரையில்., BSNL நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்கள்., வருவாய் பெருக்கத்திற்கான நம் முன் உள்ள பல்வேறு வாய்ப்புகள்., மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் நமது தோழர்களின் பங்களிப்பு உள்ளிட்ட கருத்துக்களை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.
NFTE முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர். S.S.கோபாலகிருஷ்ணன் மற்றும் TMTCLU தமிழ் மாநில பொதுச் செயலர் தோழர். R.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கோவை மாவட்டச் செயலர் தோழர். A.ராபர்ட்ஸ் தனது துணைவியாரின் அறுவைச் சிகிச்சை காரணமாக., செயற்குழுவில் தான் பங்கேற்க முடியாத நிலையிலும்., மதிய உணவு இடைவேளையில் தோழர்களை சந்தித்து அனைவரையும் வரவேற்று தனது நிலை மற்றும் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
நிறைவாக மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன் விவாதங்களுக்கு பதில் அளித்து., செயற்குழு உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்களை தொகுத்து உரையாற்றினார்.
கோவை., தமிழ் மாநிலச் செயற்குழுவின் நெகிழ்ச்சியான நிகழ்வாக., நமது சேலம் மாவட்டச் சங்கத்தின் சார்பாக., ஒப்பந்த ஊழியர்கள் அளித்த போனஸ் நன்கொடை ரூபாய். 5000/-த்தை., TMTCLU தமிழ் மாநில பொதுச் செயலர் தோழர். R. செல்வம் அவர்களிடம் உற்சாக கரவொலிகளுக்கு இடையே வழங்க., கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய். 10,000/- வழங்குவதாக கடலூர்., கும்பகோணம் மாவட்டச் செயலர்கள் அறிவித்தனர். அதே போல்., அனைத்து மாவட்டச் செயலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை அளிப்பதாக உறுதி அளித்தனர்.
மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் தீர்மானங்களை முன்மொழிய., தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக., கோவை மாவட்ட உதவிச் செயலர் தோழர். K.பாலசுப்ரமணியன் நன்றி கூற இரவு 08-30 மணிக்கு நமது மாநிலச் செயற்குழு பல்வேறு பிரச்சனைகளை விவாதித்து., பாங்குடன்., பயனுடன் மனநிறைவை தந்த செயற்குழுவாக இனிதே முடிவுற்றது.
தோழமையான உபசரிப்பு., அறுசுவை உணவு., அற்புதமான விருந்தோம்பல்., தெருவெங்கும் செங்கொடி தோரணம் என சிறப்பான ஏற்பாடுகளை செய்த கோவை தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்., அவர்களுக்கும்., அதே போல்., கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலர்கள்., மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் தங்களது சொந்த பாதிப்புகளை பொருட்படுத்தாமல் செயற்குழுவில் பங்கேற்றனர் அவர்களுக்கும் NFTE சேலம் மாவட்டச் சங்கத்தின் நன்றி பாராட்டுக்கள்.
தோழமையான உபசரிப்பு., அறுசுவை உணவு., அற்புதமான விருந்தோம்பல்., தெருவெங்கும் செங்கொடி தோரணம் என சிறப்பான ஏற்பாடுகளை செய்த கோவை தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்., அவர்களுக்கும்., அதே போல்., கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலர்கள்., மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் தங்களது சொந்த பாதிப்புகளை பொருட்படுத்தாமல் செயற்குழுவில் பங்கேற்றனர் அவர்களுக்கும் NFTE சேலம் மாவட்டச் சங்கத்தின் நன்றி பாராட்டுக்கள்.



















No comments:
Post a Comment