ஒப்பந்த ஊழியர்களின்...! ஊதியத் தாமதத்தை...!
கண்டித்து...! NFTE மற்றும் TMTCLU சார்பாக...!
நடைபெற்ற...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு., 2018 அக்டோபர் மாத ஊதியம் (2018 நவம்பர் மாதம் 19-ஆம் தேதி கடந்தும் கூட...!)., வழங்கப்படாத அவலநிலையை கண்டித்து., NFTE மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பாக 20-11-2018 செவ்வாய்கிழமை அன்று மதியம் 01-00 மணிக்கு சேலம்., PGM அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு., NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மற்றும் TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். N.சிவமோகன் ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம் துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கை முழக்கத்தை NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். S.கண்ணையன் மற்றும் TMTCLU செவ்வை கிளைச் செயலர் தோழர். S.சக்திவேல் ஆகியோர் எழுப்பினர்.
NFTE மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்., TMTCLU மெயின் கிளைச் செயலர் தோழர். S.V.சுரேஷ் பாபு., TMTCLU செவ்வை கிளைச் செயலர் தோழர். S.சக்திவேல் மற்றும் TMTCLU மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். L.அசோக்குமார் ஆகியோர் கோரிக்கை விளக்க உரை ஆற்றினர்.
கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் TMTCLU மாவட்டச் செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர் கண்டன சிறப்புரை ஆற்றினர்.
இறுதியாக., TMTCLU மாவட்டப் பொருளர் தோழர். G.செல்வராஜ் நன்றி கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்., 100-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பு: நமது NFTE மற்றும் TMTCLU பேரியக்கங்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து., ராஜா ஒப்பந்த நிறுவனம் தன்னிடம் பணிபுரியம் 86 ஒப்பந்த ஊழியர்களுக்கு., 2018 அக்டோபர் மாத ஊதியத்தினை (முழுமையாக - ஒரே தவணையாக) வழங்கி உள்ளார். அதே போல்., ஸ்ரீ வாரி ஒப்பந்த நிறுவனம் தன்னிடம் பணிபுரியும் 38 ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான நிதியை., 20-11-2018 அன்று தாமதமாக வங்கியில் செலுத்திய காரணத்தினால்., மேலும்., 21-11-2018 அன்று விடுமுறை தினம் என்பதால் 22-11-2018 அன்று அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் கிடைத்து விடும் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்த., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும் NFTE மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பாக., நெஞ்சு நிறை., நன்றி பாராட்டுக்கள்.























































No comments:
Post a Comment