Monday, 19 November 2018

NFTE மற்றும் TMTCLU இணைந்த ஆர்ப்பாட்டம்


அருமைத் தோழர்களே...! நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு., மாதா மாதம் சம்பளம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. நாமும்., நிர்வாகத்தை சந்திப்பது., கோரிக்கையை வலியுறுத்துவது பின்னர் காலதாமதமாக சம்பளம் வழங்குவது என்பது தொடர் கதை., ஆகிவிட்டது.

இந்த அவல நிலையை கண்டித்தும்., 2018 அக்டோபர் மாதச் சம்பளம் (19-11-2018 இன்று வரை) இன்னும் வழங்காததிணை கண்டித்தும்., போராட்ட களம் காண்பது என்று., NFTE மற்றும் TMTCLU ஆகிய இரண்டு மாவட்டச் சங்கங்களும்., இணைந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்...!

NFTE மற்றும் TMTCLU இணைந்த கோரிக்கை முழக்க மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் 20-11-2018 செவ்வாய்கிழமை மதியம் 12-30 மணிக்கு., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் (PGM Office., Salem)., சேலம்-7 முன்பாக நடைபெறும்.

எனவே தோழர்களே...!
நாளை (20-11-2018) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் NFTE மற்றும் TMTCLU ஆகிய சங்கங்களை சார்ந்த தோழர்., தோழியர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு...! ஒவ்வொரு மாதமும்...!
கால தாமதமின்றி...! ஊதியம் பெற்றிட...! போராடுவோம்...!
திரள்வீர்......! தோழர்களே......!

தோழமையுடன்...!
NFTE - BSNL & TMTCLU, மாவட்டச் சங்கங்கள்.,
சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்.

No comments:

Post a Comment