Friday 16 November 2018

உணர்வாய்...! உணர்ச்சி பெருக்காய்...!
உற்சாகமாய்...! நடைபெற்ற...! உரிமை பேரணி...!


நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) முடிவின்படி., நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்  படுத்திடக் கோரி., அகில இந்திய அளவில் நடக்கும் உரிமைப் பேரணியின் ஒரு பகுதியாக., நமது சேலம் மாவட்டத்தில்., சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA) சார்பில்., 14-11-2018 அன்று காலை 10-30 மணிக்கு., சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு இருந்து எழுச்சிமிகு உரிமைப் பேரணி துவங்கியது.

வரலாற்று சிறப்பு மிக்க., இப் பேரணிக்கு NFTE மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி தலைமை வகித்தார். NFTE மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் முன்னிலை வகிக்க., சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் தோழர். A.மோகன் துவக்க உரை ஆற்றி., நமது உரிமைப் பேரணியை., செங்கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு இருந்து துவங்கிய பேரணி., மாவட்ட ஆட்சியர் அலுவலகம்., பெரியார் சிலை., வள்ளுவர் சிலை., கோட்டை மாரியம்மன் கோவில்., சத்தியம் முனை வழியாக பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மெயின் தொலைபேசி நிலையம் வந்தடைந்தது.

இப் பேரணியில் பங்கேற்ற அனைத்து தோழர்., தோழியர்களும்., நமது இயக்கத்தின் செங்கொடி மற்றும் நமது கோரிக்கை பதாகைகள் ஏந்தி., கோரிக்கை முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

இப் பேரணியின் நிறைவில்., மெயின் தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில்., வாடிக்கையாளர் சேவை மையம் (CSC) முன்பாக., நடைபெற்ற பேரணி மற்றும் கோரிக்கை விளக்க கூட்டத்திற்கு., NFTE மாவட்டத் தலைவர் தோழர். S. சின்னசாமி தலைமை தாங்கினார். 

கோரிக்கை முழக்கத்தை NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். S.கண்ணையன் எழுப்பினார்.

இக் கோரிக்கை விளக்கக் கூட்டத்தில்., NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் NFTE மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கை சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக., NFTE மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூறி உரிமைப் பேரணி மற்றும் கோரிக்கை விளக்கக் கூட்டத்தை முடித்து வைத்தார்.

தோழர்களே...! நமது சேலம் மாவட்டம் எத்தனையோ., போராட்டக் களம் கண்ட மாவட்டம்., அந்த வகையில் மீண்டும் ஒரு வரலாற்று களம் கண்ட போராட்டமாக., நம்முடைய அலுவலகத்தை விட்டு வெளியே வந்து., நமது NFTE மற்றும் TMTCLU பேரியக்கங்கள் மட்டும் தனியாக., (சூழ்நிலைகளின் காரணமாக TEPU மற்றும் SEWA-BSNL மாவட்ட சங்கங்கள்  இப் பேரணியில் பங்கேற்க முடியவில்லை) நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு முதல் மெயின் தொலைபேசி நிலையம் வரை நம் சக்தி அறியாமல்., நாம் பேரணியை நடத்தினோம். அறிந்து கொண்டோம்., நம் சக்தியை நாம் மட்டும் அல்லாமல்., அனைவரும் அறிந்திட செய்தோம்., புதிய வரலாற்றை., புதிய சகாப்தத்தை படைத்தோம்.

சேலம் மாவட்டம் முழுவதும் நம் பேரணி பேசப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு என்பதால்., சுமார்-20-க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் நம் பேரணியை பதிவு மற்றும் நேர்காணல் செய்தனர். பல ஊடக நிறுவனங்கள் செய்தியை பிரசுரித்தும்., செய்தி மற்றும் நேர்காணலை ஒளி பரப்பியும்., நமக்கு உதவினர்., அவர்களுக்கும்., நமது பேரணிக்கு அனுமதி தந்து முழு பாதுகாப்பை நல்கிய காவல் ஆய்வாளர் திரு. சரவணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும்., நமது நன்றி பாராட்டுக்கள்.

2018 நவம்பர் 14 அன்று முக்கிய முகூர்த்த நாள் நிறைய தோழர்களின் இல்லங்களில்., உறவினர் மற்றும் நண்பர்களின் இல்லங்களில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள்., இருந்தாலும்., எனக்கு முக்கிய நிகழ்வு., என் வாழ்வின் அடிநாதமான., அங்கமான., BSNL துறை காக்கும் நிகழ்வான., NFTE மற்றும் TMTCLU பேரியக்கங்களின் அறைகூவலான பேரணியில் பங்கேற்பது முக்கியம்., அதைவிட முக்கியம்., என்னை காத்த., என் குடும்பத்தை காத்த., என் குடும்ப உறுப்பினர்களை காத்த., என்னுடைய NFTE பேரியக்கம் தனித்து பேரணி நடத்துகிறது., என் குல இயக்கத்தின் தன்மானம் காப்பது முக்கியம் என கருதி.,

சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து., உணர்வாய்., உணர்ச்சி பெருக்காய்., உற்சாகமாய்., சுமார் 400-க்கும் மேற்பட்ட (50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 75-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் உட்பட) தோழர்., தோழியர்கள் இந்த உரிமைப் பேரணியில் கலந்து கொண்டது என்பது., சேலம் மாவட்ட NFTE மற்றும் TMTCLU பேரியக்கங்கள் படைத்த புதிய வரலாறு., புதிய சகாப்தம் என்றால் அது மிகையாகாது.

வரலாற்று சிறப்பு மிக்க., இந்த உரிமைப் பேரணியில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., NFTE., TMTCLU மற்றும் AUAB கூட்டமைப்பு சார்பாக., நெஞ்சு நிறை., நன்றி பாராட்டுக்கள்.





























































































































வரலாற்று சிறப்பு மிக்க., இந்த உரிமைப் பேரணியில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., NFTE., TMTCLU மற்றும் AUAB கூட்டமைப்பு சார்பாக., நெஞ்சு நிறை., நன்றி பாராட்டுக்கள்.

1 comment: