AUAB கூட்டமைப்பின் கூட்டமும்...!
காலவரையற்ற...! வேலை நிறுத்தமும்...!


BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (AUAB) கூட்டம் 14-11-2018 அன்று காலை 10-00 மணிக்கு., டெல்லியில்., NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., NFTE பொதுச் செயலரும் AUAB கூட்டமைப்பின் தலைவருமான தோழர். C.சந்தேஷ்வர் சிங் தலைமை தாங்கினார். AUAB ஒருங்கிணைப்பாளர் தோழர். P. அபிமன்யூ அனைவரையும் வரவேற்றார். இக் கூட்டத்தில்., NFTE சார்பாக., பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., BSNLEU சார்பாக., பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ மற்றும் BSNLEU துணைப் பொதுச் செயலர் தோழர். சுவபன் சக்கரவர்த்தி., SNEA சார்பாக., மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர். G.L. ஜோகி., SNEA பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின் மற்றும் SNEA அகில இந்திய தலைவர் தோழர். A.A.கான்., AIBSNLEA சார்பாக பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய் மற்றும் AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர். A.சிவகுமார்., AIGETOA அகில இந்திய உதவி பொதுச் செயலர் தோழர். பதக்., BSNL MS பொதுச் செயலர் தோழர். சுரேஷ்குமார் BSNL ATM அகில இந்திய உதவி பொதுச் செயலர் தோழர். ரேவதி பிரசாத்., TEPU அகில இந்திய உதவி பொதுச் செயலர் தோழர். அப்துல் சமது., BSNLOA பொதுச் செயலர் தோழர். கபீர் தாஸ் மற்றும் BSNLOA துணைப் பொதுச் செயலர் தோழர். H.P.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில்., மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்கள் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றக் கோரி., நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போராட்டங்கள் தொடர்பாகவும்., நமது முக்கியமான கோரிக்கைகளான., 3-வது ஊதிய மாற்றம்., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு., ஓய்வூதிய பங்கீடு ஆகிய கோரிக்கைகளை முற்றிலும் நிராகரிக்கும் வகையில் 06-11-2018 அன்று தொலைத்தொடர்பு துறை., BSNL-க்கு எழுதி உள்ள கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும்., 02-11-2018 அன்று தொலைத்தொடர்பு துறையின் செயலாளர் கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
BSNL நிறுவனத்திற்கு Affordablity பிரிவிலிருந்து விலக்கு அளிக்க., மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கான கால அவகாசம் மிக குறைவாக உள்ளதை இக் கூட்டம் மிகக் கவலை உடன் பரிசீலித்தது. இந் நிலையில்., இதனை கருத்தில் கொண்டு., BSNL ஊழியர்களுக்கு 3-வது ஊதிய மாற்றத்தை பெறுவதற்கான ஒப்புதலை., மத்திய அமைச்சரவைக்கு அனுப்பாமல் தொலைத்தொடர்பு துறை (DOT)-யே., வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது என இக் கூட்டம் முடிவு செய்துள்ளது.
01-01-2007 அன்று., 2-வது ஊதிய மாற்றத்தில் இருந்த Affordablity பிரிவின் காரணமாக MTNL நிறுவனத்திற்கு 2-வது ஊதிய மாற்றம் கிடைத்து இருக்காது. ஆனால்., அந்த நேரத்தில்., மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் தொலைத்தொடர்பு துறை (DOT)-யே., MTNL ஊழியர்களுக்கு 30% சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்தை அமுல்படுத்தியது. எனவே., இதே நடைமுறையை பயன்படுத்தி BSNL ஊழியர்களுக்கும் தற்போது 3-வது ஊதிய மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் DOT-யே ஒப்புதல் வழங்க வேண்டும் என இக் கூட்டம் முடிவு எடுத்துள்ளது. மேலும்., பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் 2019 பிப்ரவரி / மார்ச் மாதங்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால்., BSNL ஊழியர்களுக்கான 3-வது ஊதிய மாற்றத்திற்கான அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும்., நமது கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளையும்., அதே நேரத்தில் இன்றைய சூழ்நிலைகளையும் மிக விரிவாக விவாதித்த நமது AUAB தலைவர்கள் கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளனர்.
AUAB கூட்டமைப்பின் முடிவுகள் மற்றும் போராட்ட இயக்கங்கள்:
- 3-வது ஊதிய மாற்றத்திற்கான., மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லாததைக் கணக்கில் கொண்டு., இந்த பிரச்சனையை தொலைத்தொடர்பு துறை (DOT)-யே., BSNL ஊழியர்களுக்கான 3-வது ஊதிய மாற்றத்திற்கு தீர்வு காண வேண்டும்.
- 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு., மத்திய அரசு உத்திரவுப்படி ஓய்வூதிய பங்கீடு மற்றும் 2-வது ஊதிய மாற்றத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஆகியவற்றை தீர்வு கண்டிட 03-12-2018 முதல் அனைத்து ஊழியர்களும் மற்றும் அதிகாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- NOFN (National Optical Fibre Network)., NFS OFC (Network for Spectrum Optical Fiber Cable) மற்றும் LWE (Left Wing Extremism) போன்ற அரசு திட்டங்களின் பணிகளை ஊழியர்களும்., அதிகாரிகளும் புறக்கணிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- AUAB கூட்டமைப்பில் இல்லாத சங்கங்களும் 03-12-2018 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தோழர்களே...!
நமது நியாயமான கோரிக்கைகளை., தொலைத்தொடர்பு துறை (DOT) நிராகரிக்கும் வகையில் கடிதம் கொடுத்துள்ளது. மத்திய அமைச்சர் உறுதிமொழி கொடுத்து 8 மாத கால உறக்கத்திற்கு பின் இது போன்ற கடிதம் கொடுப்பது என்பது BSNL ஊழியர்களின் நியாயமான ஊதிய மாற்றத்தை மறுப்பதோடு., BSNL-இன் வளர்ச்சிக்கும் தடையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. நாம்., ஏற்கனவே., இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் உள்பட பலகட்ட போராட்டங்களை நடத்திய நிலையில்., இந்த காலவரையற்ற வேலை நிறுத்தமே., நமது கோரிக்கைகளை வென்றடையைச் செய்யும்., எனவே போராட்ட களம் காண தயாராவோம்.
தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.
No comments:
Post a Comment