வேலை நிறுத்தத்திற்கு...! தயாராவோம்...!

நமது மத்திய AUAB தலைவர்களுக்கும்., தொலைத்தொடர்பு துறை (DOT) செயலாளருக்கும் இடையே கடந்த நவம்பர் 2-ஆம் தேதி (02-11-2018) நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்., தொலைத்தொடர்பு துறை (DOT - Department of Telecommunications)-இல் இருந்து BSNL-க்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக் கடிதத்தில்., 3-வது ஊதிய மாற்றம்., BSNL-க்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவது மற்றும் வாங்கும் உண்மை சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீடு ஆகிய நமது கோரிக்கைகளை நிராகரிக்கும் வகையில் மறைமுகமாக அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே., காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. எனவே., 14-11-2018 நாளை நடைபெறும் நமது உரிமைப் பேரணியில் அதிகப்படியான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை திரட்டி., அவர்களிடம் இப் பிரச்சனையை விளக்கி அவர்களை வேலை நிறுத்தத்திற்கு தயாராக்குவோம்., நாமும் தயாராவோம்.
தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.
No comments:
Post a Comment