Tuesday 13 November 2018

3-வது ஊதிய மாற்றமும்...! DOT-ன் விளக்கங்களும்...!


நமது BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 3-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துவது குறித்து விளக்கம் அளிப்பது தொடர்பாக., நமது BSNL நிர்வாகம் தொலைத்தொடர்பு துறை (DOT)-க்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருந்தது. அந்த அறிக்கையின் மீது பல்வேறு விளக்கங்களைக் கேட்டு., தொலைத்தொடர்பு துறை (DOT) மீண்டும் BSNL நிர்வாகத்திடம் ஊதிய மாற்றம் குறித்த கோப்பை திருப்பி அனுப்பி உள்ளதாக., SNEA மத்திய சங்கத்தின் இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை (DOT) எழுப்பி உள்ள கூடுதல் விளக்கங்கள் குறித்த விபரங்கள்:
  • BSNL நிறுவனத்தின் வருமானம் பெரிதும் குறைந்துள்ளது எனவும்., 2016-2017 மற்றும் 2017-2018-ஆம் நிதி ஆண்டுகளை ஒப்பிடுகையில் 20% சதவீதம் வருமானம் குறைந்து உள்ளதாகவும்., 2018-2019-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு வரையிலான காலத்தில் அது மேலும் உயர்ந்து 27.8% சதவீதம் வருமானம் குறைந்துள்ளது.
  • 2017-2018-ஆம் ஆண்டில் BSNL நிறுவனத்தின் வளர்ச்சி 4.8% சதவீத அளவிற்கு இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால்., அதற்கு மாறாக அதன் வளர்ச்சி 14.8% சதவீதம் குறைந்துள்ளது.
  • BSNL ஊழியர்களின் ஊதியச் செலவை நிறுவனத்தின் வருவாய் உடன் ஒப்பிடுகையில் ஊதியச் செலவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும்., 2017-2018-ஆம் நிதி ஆண்டில் ஊதியச் செலவு BSNL நிறுவனத்தின் வருவாயில் 65.7% சதவீதமாக இருந்தது. 2018-2019-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு வரையிலான காலத்தில் அது மேலும் உயர்ந்து 89% சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • 15% சதவீத ஊதிய நிர்ணயத்துடன் கூடிய ஊதிய மாற்றத்திற்கு ஆண்டிற்கு ரூ. 4303/- கோடி அதிக செலவாகும் (ஓய்வூதியப் பங்களிப்பு அதிகபட்ச ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப் பட்டுள்ளது) மேலும்., BSNL நிறுவனத்தின் செயல்பாடுகளினால் கிடைக்கும் வருவாய்க்கும் மேலாக செலவீனங்கள் அதிகரிக்கலாம். (ஓய்வூதியப் பங்களிப்பு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டால் கூட ரூ. 2760/- கோடி செலவு ஆகும்)
  • BSNL 4G சேவையை துவக்க., கூடுதல் வருவாயை எதிர்பார்த்து கடன் வாங்க உள்ளது. எதிர்பார்த்தவாறு கூடுதல் வருவாய் கிடைக்கும் பட்சத்தில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
  • BSNL செலுத்திய அதிகப்படியான ஓய்வூதியப் பங்களிப்பு ரூபாய். 2000/- கோடி உள்ளது. ஆனால்., ஊழியர்களின் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியப் பங்களிப்பு செலுத்திட வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.   
  • FTTH சேவை மூலம் கூடுதல் வருவாயைப் பெற BSNL நிறுவனம் உத்தேசித்து வருகிறது.

மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் ஊதிய மாற்றத்திற்கான சாதகமான அறிக்கையை கூடுதல் விபரங்களுடன் அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை., BSNL நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment