Sunday 4 November 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கு திறனுக்கேற்ற ஊதியம்...!
NFTE மற்றும் TMTCLU-வின் தொடர் முயற்சிக்கு...!
கிடைத்த......! மாபெரும் வெற்றி......!


Image result for contract labour images
Image result for semi skilled workers images

நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் திறனற்றவர்கள் (Unskilled Labours) என்று வகைப்படுத்தி., BSNL நிர்வாகம் திறனற்ற ஊதியத்தை வழங்கி வருகிறது. இது ஒப்பந்த ஊழியர்களின் உழைப்பை சுரண்டும் செயல்., தற்போது., ஒப்பந்த ஊழியர்கள் கேபிள் பராமரிப்பு பணி., கோபுர பராமரிப்பு பணி., எழுத்தர் பணி., காவலர் பணி மற்றும் ஓட்டுநர் பணி என பல்வேறு அரைத்திறன் மற்றும் (Semiskilled) திறன்மிக்கப் (Skilled) பணிகளில் பயன்படுத்தப்படுகின்றார்கள் எனவே., அவர்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள உரிய ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என மிகக் கடுமையாக நமது NFTE மற்றும் TMTCLU சங்கங்கள் தொடர்ந்து வாதிட்டு வந்தன.

இந்நிலையில்., நமது NFTE கேரள மாநில சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக., கேரள மாநில நிர்வாகம் கார்ப்பரேட் அலுவலகத்தின் வழிகாட்டுதல் பெற்று., 2016 ஜூன் 6 முதல் கேரள தொலைத்தொடர்பு வட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணித்தன்மையின் அடிப்படையில் மறுவகைப்படுத்தப்பட்டு (Re-Categorization) திறனுக்கேற்ற ஊதியம் வழங்குவதற்கான உத்திரவை (உத்திரவு எண்: No.Genl/200-1/2014/I/26 dated 06 June 2016) வெளியிட்டு., இந்த உத்திரவை ஒப்பந்த ஊழியர்களுக்கு அமுல்படுத்தி உள்ளது.

இந்த உத்திரவை மேற்கோள்காட்டி., நமது NFTE மற்றும் TMTCLU தமிழ் மாநிலச் சங்கங்கள்., நமது தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் (Contract Labour's) அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் மறுவகைப்படுத்தப்பட்டு (Re-Categorization) திறனுக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி 30-01-2017 அன்று மாநில நிர்வாகத்திற்கும்., NFTE மத்திய சங்கத்திற்கும் கடிதம் எழுதியது. இதன் அடிப்படையில் தமிழ் மாநில நிர்வாகம் 03-01-2017 மற்றும் 06-02-2017 ஆகிய தேதிகளில் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. நமது NFTE மத்திய சங்கமும் இதன் மீது உரிய கவனம் செலுத்தி 02-03-2017 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (Restg) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கடிதம் எழுதியது.

மேலும்., தமிழ் மாநில தொலைத்தொடர்பு வட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு திறனுக்கேற்ற ஊதியம் வழங்கிட வலியுறுத்தி., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் (26-09-2017)., தர்ணா போராட்டம் (04-10-2017) மற்றும் துணைத் தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை உள்ளிட்ட எண்ணற்ற போராட்ட இயக்கங்களை நடத்தியத்தின் விளைவாக., நமது தமிழ் மாநில நிர்வாகம் கார்ப்பரேட் அலுவலகத்தின் வழிகாட்டுதல் பெற்று., தமிழ் மாநில தொலைத்தொடர்பு வட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற ஊதியத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்துவதற்கான வழிகாட்டும் உத்திரவை 24-07-2017 அன்று வெளியிட்டது. (உத்திரவு எண்: (No. ADMN/100-03/CL-Issues/2017-18/28 dt 24-07-2017)

இந்நிலையில்., நமது தமிழ் மாநில நிர்வாகத்தின் 24-07-2017 தேதியிட்ட உத்திரவை மேற்கோள் காட்டி., இந்த உத்திரவை நமது சேலம் மாவட்டத்தில் அமுல்படுத்திட வலியுறுத்தி., NFTE மாவட்ட சங்கத்தின் சார்பாக 13-10-2017 அன்று கடிதம் மற்றும் அதற்கான ஆவணங்களை வழங்கினோம். நமது கோரிக்கையின் நியாயம் உணர்ந்த., நமது முதன்மை பொது மேலாளர் திரு. S.சபீஷ், ITS., அவர்கள் உரிய வழிகாட்டுதல் பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும்., 18-09-2018 அன்று மீண்டும் நமது முதன்மை பொது மேலாளர் அவர்களை சந்தித்து இது குறித்து விவாதித்தோம். இவ் விவாதத்தின் போது., நமது முதன்மை பொது மேலாளர் அவர்கள் நமது சேலம் மாவட்டத்தில் ஒப்பந்தம் கால நீட்டிப்பில் உள்ளது என்றும்., புதிய ஒப்பந்தத்திற்கான அறிவிப்பு மற்றும் இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும்., இந்த புதிய ஒப்பந்தத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு திறனுக்கேற்ற ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். (குறிப்பு: இந்த தகவல்களை NFTE மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்களின் 19-09-2018 தேதியிட்ட சுற்றறிக்கையில் முதன் முதலாக நாம் தான் வெளியிட்டோம். ஒரே பெயரில்., ஒரே கொடியில்., ஒரே கொள்கையில் இயங்கிக் கொண்டு இருக்கின்றோம் என்று சொல்லிக் கொள்கின்றவர்களுக்கு இந்த தகவல் தெரியாது.)

நமது முதன்மை பொது மேலாளர் அளித்த உத்திரவாதத்தின்படி., நமது சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் மறுவகைப்படுத்தப்பட்டு (Re-Categorization) திறனுக்கேற்ற ஊதியத்திற்கான உத்திரவு 31-10-2018 அன்றும்., புதிய ஒப்பந்தத்திற்கான உத்திரவு 30-10-2018 மற்றும் 31-10-2018 அன்றும் உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்திரவுகளின் படி:-
  • 01-11-2018 முதல் நமது சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு (கேபிள் பராமரிப்பு பணி: 91 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணி: 79 ஒப்பந்த ஊழியர்கள் என 170 ஒப்பந்த ஊழியர்கள்) திறனுக்கேற்ற ஊதியத்திற்கான உத்திரவு அமுல்படுத்தப்படும்.
  • புதிய சம்பளம் (அரைத்திறனுக்கேற்ற ஊதியம் - Semiskilled Wages) 01-11-2018 முதல் வழங்கப்படும்.
  • சேலம் நகர பகுதிகளில் கேபிள் பராமரிப்பு பணிகளை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 466/- இல் இருந்து ரூ. 527/- ஆக நாள் ஒன்றுக்கு ரூ. 61/- வீதம் ஒரு மாதத்திற்கு (26 நாட்களுக்கு) ரூ. 1586/- ஊதிய உயர்வு கிடைக்கும்.
  • சேலம் ஊரகப் பகுதிகளில் கேபிள் பராமரிப்பு பணிகளை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 373/- இல் இருந்து ரூ. 437/- ஆக நாள் ஒன்றுக்கு ரூ. 64/- வீதம் ஒரு மாதத்திற்கு (26 நாட்களுக்கு) ரூ. 1664/- ஊதிய உயர்வு கிடைக்கும்.
  • சேலம் நகர பகுதிகளில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகளை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 466/- இல் இருந்து ரூ. 522/- ஆக நாள் ஒன்றுக்கு ரூ. 56/- வீதம் ஒரு மாதத்திற்கு (26 நாட்களுக்கு) ரூ. 1456/- ஊதிய உயர்வு கிடைக்கும்.
  • சேலம் ஊரகப் பகுதிகளில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகளை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 373/- இல் இருந்து ரூ. 433/- ஆக நாள் ஒன்றுக்கு ரூ. 60/- வீதம் ஒரு மாதத்திற்கு (26 நாட்களுக்கு) ரூ. 1560/- ஊதிய உயர்வு கிடைக்கும்.
புதிய ஒப்பந்ததாரர்கள் விபரம்: 
  • மல்லி பாதுகாப்பு மற்றும் துப்பறிவு சேவை நிறுவனம் (M/s. Malli Security and Deductive Services., Chennai): ஆத்தூர்., ராசிபுரம்., நாமக்கல் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளுக்கு கேபிள் பராமரிப்பு பணிகளுக்கு 01-11-2018 முதல் 31-10-2019 வரை 31 ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.       
  • ராஜா நிறுவனம் (M/s. Rajaa & Co., சேலம்): திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளுக்கு கேபிள் பராமரிப்பு பணிகளுக்கு 01-11-2018 முதல் 31-10-2019 வரை 17 ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
  • ஸ்ரீ வாரி நிறுவனம் (M/s. Sri Vari & Co., Omalur., Salem): மேட்டூர் மற்றும் ஓமலூர் ஆகிய பகுதிகளுக்கு கேபிள் பராமரிப்பு பணிகளுக்கு 01-11-2018 முதல் 31-10-2019 வரை 10 ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
  • முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு சேவை நிறுவனம் (Ex-Servicemen Security Services., Chennai): சேலம் நகரம்., சேலம் ஊரகம்., ஆத்தூர்., ராசிபுரம்., மேட்டூர்., சங்ககிரி., ஓமலூர்., நாமக்கல்., திருச்செங்கோடு மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகளுக்கு 01-11-2018 முதல் 31-10-2019 வரை 79 ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்., குடந்தை மற்றும் தஞ்சை-ஐ தொடர்ந்து 3-வது மாவட்டமாக., நமது சேலம் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணித்தன்மைக்கேற்ப அரைத்திறன் ஊதியம் (Semiskilled Wages) பெற்றிட நாம் தான் வழிவகை செய்தோம். ஆனால்., சிலர் தம்பட்டம் அடித்துக்கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்கள். நமது அடுத்த இலக்கு சம வேலைக்கு சம ஊதியம்., போராட நாம் தயாராக  வேண்டும்.

தோழமையுள்ள..!
NFTE - BSNL & TMTCLU, மாவட்ட சங்கங்கள்.,
சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்.

1 comment:

  1. அருமையான பதிவு, உண்ணமையான பதிவு. தொடர்ந்து போராடுவோம். வெற்றி நமதே.

    ReplyDelete