Sunday 4 November 2018

தொலைத்தொடர்பு செயலாளர் உடன்...!
AUAB தலைவர்கள் சந்திப்பு...!


நமது தொலைத்தொடர்பு துறை (DOT) செயலாளர் திருமதி. அருணா சுந்தர்ராஜன் அவர்களை BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (AUAB) தலைவர்கள் 02-11-2018 அன்று மாலை 05-00 மணிக்கு சந்தித்து., நமது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப் பேச்சுவார்த்தையில்., தொலைத்தொடர்பு துறை (DOT)-ன் சார்பாக., DOT செயலாளர் திருமதி. அருணா சுந்தர்ராஜன்., Member Finance திருமதி. அனுராதா மித்ரா., Member Services திரு. ரவி காந்த்., DOT சிறப்பு செயலர் திரு. N.சிவசைலம் மற்றும் DOT இணை செயலர் (நிர்வாகம்) திரு. காண்டேல்வால் ஆகியோரும்., BSNL சார்பாக., CMD திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவா., இயக்குனர் (HR) திருமதி. சுஜாதா ராய்., முதுநிலை பொது மேலாளர் (Estt) திரு. சௌரப் தியாகி., பொது மேலாளர் (ஊழியர் உறவு - SR) திரு. A.M.குப்தா மற்றும் துணைப் பொது மேலாளர் (Estt) திரு. சிவசங்கர் பிரசாத் ஆகியோரும் பங்கேற்றனர்.

AUAB சார்பாக NFTE பொதுச்செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., BSNLEU பொதுச்செயலர் தோழர். P.அபிமன்யூ., SNEA பொதுச்செயலர் தோழர். K.செபாஸ்டியன்., AIBSNLEA பொதுச்செயலர் தோழர். பிரகலாத்ராய்., AIGETOA பொதுச்செயலர் தோழர். ரவி ஷில் வர்மா., BSNLMS பொதுச்செயலர் தோழர். சுரேஷ்குமார்., BSNL ATM உதவி பொதுச் செயலர் தோழர். ரேவதி பிரசாத்., TEPU உதவி பொதுச் செயலர் தோழர். ரஷீத் கான் மற்றும் BSNLOA துணைப் பொது செயலர் தோழர். H.P.சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

இப் பேச்சுவார்த்தையில் AUAB தலைவர்கள்., 24-02-2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அளித்த உறுதிமொழிகளின் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க தொலைத்தொடர்பு துறை தவறியதை துவக்கத்திலேயே அழுத்தமாக சுட்டிக்காட்டினர். மேலும்., இதன் காரணமாகத் தான்., தாங்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதையும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நமது கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முடிவுகள்:
  • 3-வது ஊதிய மாற்றம்: 3-வது ஊதிய மாற்றம் தொடர்பான இப் பிரச்சனையில்., மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கான அமைச்சரவைக் குறிப்பை தொலைத்தொடர்பு துறை விரைவில் அனுப்பும் என தொலைத்தொடர்பு துறை-ன் செயலாளர் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன்பாக ஊதிய மாற்ற பிரச்சனையை தீர்வு காண வேண்டும் என AUAB தலைவர்கள் சுட்டிக்காட்டினர். ஊதிய மாற்றம் தொடர்பாக சில கேள்விகளை BSNL நிர்வாகத்திடம் DOT எழுப்பி உள்ளதாகவும் உரிய பதில் வந்தடைந்த உடன்., ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது தொடர்பான அமைச்சரவை குறிப்பை இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்படும் என DOT செயலர் உறுதி அளித்துள்ளார்.
  • BSNL-க்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு: BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான அமைச்சரவை குறிப்பு தயார் செய்யப்பட்டு., அமைச்சரங்களுக்கு இடையேயான ஆலோசனைக்கு (Inter Ministerial Consultaions) அனுப்பப்பட்டு உள்ளதாகவும்., விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
  • ஓய்வூதிய பங்களிப்பு: வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு என்னும் நமது நீண்ட நாள் கோரிக்கை சாதகமாக பரிந்துரைக்கப்பட்டு DOE (Department of Expenditure) என்னும் செலவின இலாக்காவின் பரிசீலனைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும் என உறுதி அளித்தார்.
  • ஓய்வூதிய மாற்றம்: BSNL ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய மாற்றம் தொடர்பாக பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தோடு ஓய்வூதிய மாற்றத்தை இணைக்கக்கூடாது என்கின்ற நமது கோரிக்கை ஏற்பதாகவும்., இது தொடர்பாக தன்னுடன் விவாதிக்க வேண்டும் என Member Services-ஐ DOT செயலாளர் உத்திரவிட்டார்.
  • நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள்: BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் பிரச்சனையில் BSNL தான் தீர்வு காண வேண்டும் என தொலைத்தொடர்பு துறையின் செயலாளர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து., நமது CMD அவர்கள் கூடுதலாக 2 சதம் ஓய்வூதியப் பங்களிப்பை உயரத்துவதாக உறுதி அளித்தார்.

தொலைத்தொடர்பு துறை (DOT) செயலாளர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்., AUAB கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில்., தொலைத்தொடர்பு செயலாளர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பரிசீலனை செய்யப்பட்டது. இப் பரிசீலனையில்., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு., ஓய்வூதிய பங்கீடு மற்றும் ஓய்வூதிய மாற்றம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களின் மீது தங்களது திருப்தியை AUAB தலைவர்கள் தெரிவித்தனர். மேலும்., இந்தக் கூட்டத்தில் DOT செயலாளரின் அணுகுமுறை சாதகமாக இருந்த போதும்., 3-வது ஊதிய மாற்றம் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை., எனவே 14-11-2018 அன்று மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பேரணி நடத்துவது என்கின்ற நமது இயக்கத்தை வெற்றிகரமாக்குவது என்றும்., அதற்காக ஊழியர்களை பெருமளவில் திரட்ட வேண்டும் என்றும்., 
AUAB கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் 14-11-2018 அன்று நடத்துவது என்றும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment