Saturday 3 November 2018

சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு...! சார்பில்...!
நடைபெற்ற...! தர்ணா போராட்டம்...!


நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) முடிவின்படி., நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்  படுத்திடக் கோரி., அகில இந்திய அளவில் நடக்கும் தர்ணா போராட்டத்தின் ஒரு பகுதியாக., நமது சேலம் மாவட்டத்தில்., சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA) சார்பில்., மாபெரும் தர்ணா போராட்டம் 30-10-2018 செவ்வாய்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு., சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இத் தர்ணா போராட்டத்திற்கு NFTE-BSNL மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி தலைமை தாங்கினார். தர்ணா போராட்டத்திற்கான கோரிக்கை முழக்கத்தை NFTE-BSNL மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். S.கண்ணையன் எழுப்பினார்.

மிக எழுச்சியாக துவங்கிய தர்ணா போராட்டத்தை., NFTE-BSNL மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் துவக்கி வைத்து துவக்க உரை ஆற்றினார்.

TMTCLU மாவட்டச் செயலர் தோழர். M.இசையரசன் மற்றும் TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். N.சிவமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

NFTE-BSNL மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். R.மணி., மாவட்ட உதவிச் செயலர்கள்-ஆன தோழர்கள். K.அம்மையப்பன் மற்றும் G.இறைமணி., மாவட்ட துணைத் தலைவர்கள்-ஆன தோழர்கள். P.தேவா மற்றும் B.ராஜமாணிக்கம் மற்றும் TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

NFTE-BSNL மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் கண்டன சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக., NFTE-BSNL மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூறி தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த தர்ணா போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


























































































இந்த தர்ணா போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment