Saturday 3 November 2018

AUAB கூட்டமைப்பு சார்பில்...! நடைபெற்ற...!
பத்திரிக்கையாளர் சந்திப்பு...!


நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) முடிவின்படி., நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்  படுத்திடக் கோரி., அகில இந்திய அளவில்., மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் நடைபெற இருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஒரு பகுதியாக., நமது சேலம் மாவட்டத்தில்., சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA BSNL) சார்பில்., பத்திரிக்கையாளர் சந்திப்பு 29-10-2018 திங்கட்கிழமை அன்று காலை 11-30 மணிக்கு., நமது NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்., NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்., NFTE மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்., மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்., மாவட்ட துணைத் தலைவர் தோழர். P.தேவா., மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.இறைமணி., மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். R. மணி மற்றும் TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நகர கிளைச் செயலர்கள்., மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும்., இந்த பத்திரிகையாளர் மற்றும் ஊடகச் சந்திப்பில்., 15-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் பங்கேற்று., நமது கோரிக்கைகளை-ம்., அரசாங்கத்தின் BSNL விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை-ம்., தங்களது  பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி-இல் செய்தியாக வெளியிட்டு ஆதரவு அளித்தனர்.






























இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற., அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடக நிருபர்களுக்கும்., நகர கிளைச் செயலர்கள்., மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்., தோழியர்கள் அனைவருக்கும் AUAB (NFTE - TEPU - SEWA) கூட்டமைப்பு சார்பாக., நமது நன்றி பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment