ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ்...!
தமிழ் மாநில அளவில் உயர்வான தொகை...!
நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான போனஸ்., போனஸ் விதிப்படி 8.33 என்ற அடிப்படையில் ஒரு மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ரூ. 7000/- போனஸ் வழங்கிட வலியுறுத்தி., நமது NFTE மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்கள் கடந்த ஒரு மாத காலமாக நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்-உடன் தொடர்ந்து பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியத்தின் விளைவாக., நமது கோரிக்கை ஏற்கப்பட்டு., நமது பேச்சுவார்த்தையின் அடிப்படையில்., நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் (கேபிள் பராமரிப்பு., உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு., கோபுர பராமரிப்பு., Transmission., NWP - CFA மற்றும் CM பகுதிகளில்) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு., ஸ்ரீ வாரி நிறுவனம் மற்றும் மல்லி பாதுகாப்பு மற்றும் துப்பறிவு சேவை நிறுவனம் ஆகிய ஒப்பந்ததாரர்கள் நிறுவனம் 29-10-2018 அன்றும்., ராஜா நிறுவனம் (Rajaa & Co) 30-10-2018 அன்றும் போனஸ் தொகையை வங்கிக்கு அனுப்பி உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உத்திரவாதத்தின் அடிப்படையில் போனஸ் பட்டுவாடா விபரம்:
1. ஸ்ரீ வாரி நிறுவனம் (M/s. Sri Vari & Co., Omalur., Salem):
ஸ்ரீ வாரி ஒப்பந்ததாரர் வசம் பணிபுரியும் சேலம் நகர ஒப்பந்த ஊழியர்களுக்கு (செவ்வை., மெய்யனூர் மற்றும் மெய்யனூர் - NWOP) ஆகஸ்ட் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 15 மாதங்களுக்கு 8.33 அடிப்படையில் அதிகபட்சம் ரூ. 12,544/- வரை போனஸ் பட்டுவாடாவும்., சேலம் ஊரக ஒப்பந்த ஊழியர்களுக்கு (நாமக்கல் - NWOP) நவம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 12 மாதங்களுக்கு 8.33 அடிப்படையில் அதிகபட்சம் ரூ. 7772/- வரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
உதாரணம்:
(I). சேலம் நகரப் பகுதி:
சேலம்., மெய்யனூர் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் தோழர். G.அய்யந்துரை., ஆகஸ்ட் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 15 மாதங்களுக்கு பெற்ற மொத்த ஊதியம் ரூ. 150592/-ன் அடிப்படையில் 8.33 போனஸ்-ஆக அதிகபட்சம் ரூ. 12544/- (இதில் சராசரியாக 12 மாதத்திற்கு ரூ. 10035/- மற்றும் 3 மாதத்திற்கு ரூ. 2509/- சேர்த்து 15 மாதத்திற்கு ரூ. 12544/-) பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
(II). சேலம் ஊரகப் பகுதி:
நாமக்கல் NWOP பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் தோழர். G.பூபதி., நவம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 12 மாதங்களுக்கு பெற்ற மொத்த ஊதியம் ரூ. 93299/-ன் அடிப்படையில் 8.33 போனஸ்-ஆக அதிகபட்சம் ரூ. 7772/- பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
2. மல்லி பாதுகாப்பு மற்றும் துப்பறிவு சேவை நிறுவனம் (M/s. Malli Security and Deductive Services., Chennai):
மல்லி ஒப்பந்ததாரர் வசம் பணிபுரியும் சேலம் நகர ஒப்பந்த ஊழியர்களுக்கு (Transmission) மற்றும் ஊரக ஒப்பந்த ஊழியர்களுக்கு (திருச்செங்கோடு., சங்ககிரி., ஓமலூர் மற்றும் மேட்டூர்) நவம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 12 மாதங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் ரூ. 7000/- அடிப்படையில் (ஒரு மாதத்திற்கு சராசரியாக 25 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு 300 நாட்கள் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 23.33/- அடிப்படையில்) குறைந்த பட்ச போனஸ் ரூ. 7000/- பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
உதாரணம்:
(I). சேலம் நகர மற்றும் ஊரகப் பகுதி (இணைத்து):
சங்ககிரி பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் தோழர். B.சஞ்சய் காந்தி., நவம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 12 மாதங்களுக்கு 291 நாட்கள் பணியாற்றியதின் அடிப்படையில் 291 நாட்களுக்கு ரூ. 23.33 அடிப்படையில் போனஸ்-ஆக அதிகபட்சம் ரூ. 6790-இல் வங்கி தரகு தொகை (Bank Commission) போக ரூ. 6775/- பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
3. ராஜா நிறுவனம் (M/s. Rajaa & Co., சேலம்):
ராஜா ஒப்பந்ததாரர் வசம் பணிபுரியும் சேலம் நகர ஒப்பந்த ஊழியர்களுக்கு (சேலம் மெயின்., NWP-CFA மற்றும் CM) ஆகஸ்ட் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 15 மாதங்களுக்கு 8.33 அடிப்படையில் அதிகபட்சம் ரூ. 12610/- வரை போனஸ் பட்டுவாடாவும்., சேலம் ஊரக ஒப்பந்த ஊழியர்களுக்கு (ஆத்தூர்., ராசிபுரம்., நாமக்கல் மற்றும் வேலூர்) அக்டோபர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 13 மாதங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் ரூ. 7000/- அடிப்படையில் (ஒரு மாதத்திற்கு சராசரியாக 25 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு 300 நாட்கள் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 23.33/- அடிப்படையில் குறைந்தபட்ச போனஸ் ரூ. 7000/- வீதம்) அதிகபட்சம் ரூ. 7699/- வரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
உதாரணம்:
(I). சேலம் நகரப் பகுதி:
சேலம் மெயின் கோட்டம்., ஏற்காடு பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் தோழர். K.கணேசன்., ஆகஸ்ட் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 15 மாதங்களுக்கு பெற்ற மொத்த ஊதியம் ரூ. 151377/-ன் அடிப்படையில் 8.33 போனஸ்-ஆக அதிகபட்சம் ரூ. 12610/- (இதில் சராசரியாக 12 மாதத்திற்கு ரூ. 10088/- மற்றும் 3 மாதத்திற்கு ரூ. 2522/- சேர்த்து 15 மாதத்திற்கு ரூ. 12610/-) பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
(II). சேலம் ஊரகப் பகுதி:
நாமக்கல் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் தோழர். N.சக்திவேல்., அக்டோபர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை 13 மாதங்களுக்கு 330 நாட்கள் பணியாற்றியதின் அடிப்படையில் 330 நாட்களுக்கு ரூ. 23.33 அடிப்படையில் போனஸ்-ஆக அதிகபட்சம் ரூ. 7699/- (இதில் சராசரியாக 12 மாதத்திற்கு ரூ. 7107/- மற்றும் 1 மாதத்திற்கு ரூ. 592/- சேர்த்து 13 மாதத்திற்கு ரூ. 7699/-) பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
இதே போல்., நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் House Keeping பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள., ஒப்பந்த நிறுவனமான புதுக்கோட்டை பாதுகாப்பு சேவை நிறுவனம் (M/s. Pudukkottai Security Service., Pudukkottai) தன்னிடம் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 03-11-2018-க்குள் போனஸ் பட்டுவாடா செய்வதாக உறுதியளித்துள்ளார்.
போனஸ் பட்டுவாடா நடைபெற்று உள்ள ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் போனஸ் தொகையை சரிபார்த்துக் கொள்ளவும்., போனஸ் தொகை கிடைக்காத தோழர்கள் NFTE மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்களை தொடர்பு கொள்ளவும்.
தமிழகத்தில் இந்த ஆண்டும் அதிகபட்ச போனஸ் ரூ. 12600/-ஐ 15 மாதத்திற்கு (12 மாதத்திற்கு ரூ. 10088/-ஐ) ஒரே தவணையாகப் பெற்றுத்தந்த NFTE மாவட்ட சங்கத்திற்கும் மற்றும் TMTCLU மாவட்ட., மாநில சங்கத்திற்கும் நன்கொடையாக ரூ. 250/- வழங்கிடுமாறு தோழமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பு: இந்த மகிழ்ச்சியை நமது TMTCLU தோழர்கள் உற்சாகத்தோடு இனிப்பு வழங்கி (இனிப்பு எடு., கொண்டாடு என்ற முறையில்) கொண்டாடி வருகின்றனர். வாழ்த்துக்களுடன்.,
தோழமையுள்ள..!
NFTE - BSNL & TMTCLU, மாவட்ட சங்கங்கள்.,
சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்.

No comments:
Post a Comment