Wednesday, 31 October 2018

ஹரித்துவார் மத்திய செயற்குழு மற்றும் முடிவுகள்

Image may contain: 5 people, people smiling


நமது NFTE மத்திய செயற்குழு கூட்டம் உத்தர்கண்ட் மாநிலம்., ஹரித்துவார் மாவட்டத்தில் 24-10-2018 மற்றும் 25-10-2018 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  • ஊதிய மாற்றம்: செயற்குழுவின் நீண்ட விவாதத்திற்கு பிறகு ஊழியர்களுக்கு கிடைக்க கூடிய 3-வது ஊதிய மாற்றம் உடனடியாக பெறப்பட வேண்டும்., ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் ஓய்வு பெறுகின்றனர். எனவே., ஊழியர்களிடையே கடுமையான எதிர்ப்பு உள்ளது. இருதரப்பு ஊதிய மாற்றக்குழுவில் ஊதிய நிலையை இறுதி செய்ததில் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு முயற்சி வரவேற்கத்தக்கது. 2018 நவம்பர் மாத இறுதிக்குள் ஊதிய மாற்றம் வழங்கப்படாமல் இருந்தால் காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்ட அறிவிப்பை வெளியிடுவதற்கு இந்த செயற்குழு ஒப்புதல் அளிக்கிறது.
  • புதிய பதவி உயர்வு கொள்கை: நமது மத்திய சங்கம்., அதிகாரிகளுக்கு இணையான புதிய பதவி உயர்வு கொள்கையை உருவாக்க தொடர்ந்து முயற்சிப்பதையும்., பழைய பதவி உயர்வு கொள்கை (NEPP)-இல் இருக்கும் முரண்பாடுகளை களைவதற்கும்., SC மற்றும் ST ஊழியர்களுக்கான சலுகைகளை பின்பற்றிடவும் எடுத்துக் கொண்டு வரும் முயற்சிகளை இச் செயற்குழு மனதார பாராட்டுகிறது. மேலும்., பொதுத்துறை நிறுவனங்களில் இந்த மாறுப்பட்ட சூழ்நிலையில் இது மிக அவசியம் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • Multitasking (பல்பணி) பலப்பணி தன்மை கொண்ட ஊழியர்கள் உருவாக்கம்: Multitasking (பல்பணி) பலப்பணி தன்மை கொண்ட ஊழியர்களை விரைவில் உருவாக்க இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • இலாக்காத்தேர்வு: அனைத்து இலாக்காத்தேர்வுகளும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். எதிர்மறை மதிப்பெண் முறை விலக்கப்பட வேண்டும். Offline தேர்வு முறையை நடைமுறை படுத்தப்பட வேண்டும்.
  • PLI போனஸ்: PLI போனஸ் என்பது தொழிலாளர்களுடைய உரிமை. PLI போனஸ் குழுக்கூட்டத்தை பல்வேறு போலி காரணங்களால் நிர்வாகம் நடத்தாமல் தள்ளிப்போடுகிறது. இந்த 2018 தீபாவளிக்கு முன்பாக Adhoc போனஸ் பெறுவதற்கு முயற்சி செய்யப்படும்.
  • செல் கோபுரங்கள் பராமரிப்பு மற்றும் SIM விற்பனை ஆகிய பணிகளை தனியாருக்கு வழங்குவது: செல் கோபுரங்கள் பராமரிப்பு மற்றும் SIM விற்பனை ஆகிய பணிகளை தனியாருக்கு தாரைவார்த்துள்ள செயலை இச் செயற்குழு கண்டிக்கின்றது. தற்போது பணியில் உள்ள ஊழியர்களே திறம்பட செல் கோபுரங்களை பராமரிக்க முடியும். எனவே., Outsourcing என்னும் தனியார் நுழைவு நிறுத்தப்பட வேண்டும்.
  • Sr. Accountant (மூத்த கணக்காளர்களை) மேல்நிலை படுத்துதல்: நமது BSNL நிறுவனத்தில் இருக்கும் Sr. Accountant (மூத்த கணக்காளர்)-களை உடனடியாக குரூப் பி (Group B) அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்தப் படவேண்டும் என்பது நீண்ட நாட்களாக தேக்கநிலையில் உள்ளது. எனவே., இக் கோரிக்கையின் மீது உடனடியாக தீர்வு கண்டிட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • கல்வித்தகுதி தளர்வு: இலாக்காத்தேர்வு எழுதும் ஊழியர்களுக்கு உயர் கல்வித்தகுதியை நிர்ணயம் செய்துள்ள நிலை மாற்றப்பட வேண்டும். அவர்களது அனுபவத்தைக் கணக்கில் கொண்டு அவர்களது கல்வித்தகுதி தளர்த்தப்பட வேண்டும்.
  • வீண் செலவினங்களை நிறுத்துவது தொடர்பாக: BSNL நிறுவனத்தின் நிதிநிலையைக் கணக்கில் கொண்டு வீண் மற்றும் ஊதாரிச் செலவினங்களை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திட இச் செயற்குழு நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
  • மருத்துவ ரசீதுக்கான பணப் பட்டுவாடா: உட்புற மற்றும் வெளிப்புற மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட ஊழியர்களின் மருத்துவ ரசீதுக்கான பணம் அனைத்து பகுதிகளிலும் நீண்ட நாட்களாக பட்டுவாடா நடைபெறாமல் இருக்கிறது. இதனால் ஊழியர்கள் கடுமையான நிதிச்சுமைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே உடனடியாக மருத்துவ ரசீதுக்கான பணத்தை பட்டுவாடா செய்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • விடுபட்ட கேசுவல் மற்றும் TSM ஊழியர்களை நிரந்தரப்படுத்துதல்: கேசுவல் மற்றும் TSM ஊழியர்கள் இன்றும் கணிசமான அளவில் நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ளனர். இவ் ஊழியர்கள் தொழில்நுட்ப செயல்பாட்டு பராமரிப்பு மற்றும் விற்பனை மற்றும் சந்தைப் படுத்தும் பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். எனவே., உடனடியாக இந்த கேசுவல் மற்றும் TSM ஊழியர்களை நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • Term Insurance Scheme (கால காப்புறுதி திட்டம்): ஒரு சில மாநிலங்களில் Term Insurance Scheme (கால காப்புறுதி திட்டம்) என்ற ஆயுள் காப்பீடு திட்டத்தை அதிகாரிகளுக்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தை அனைத்து ஊழியர்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் DOT காலத்தில் பணியில் சேர்ந்த RTP ஊழியர்களின் சேவைக்காலத்தை பணிக்காலமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என இச் செயற்குழு நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
  • BSNL-லில் பணியமர்த்தப்பட்ட நேரடி ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களுக்காக வழங்கப்படும் ஓய்வூதியப் பங்களிப்பு உயர்த்தப்பட வேண்டும் என இச் செயற்குழு நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
  • ஒப்பந்த ஊழியர்களின் மாத ஊதியம் குறிப்பிட்ட தேதியில் முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும்., மேலும் ஒப்பந்த ஊழியர்களிடம் BSNL நிறுவனத்தின் அனைத்து வேலைகளை-ம் வாங்கிக்கொண்டு ஊதியம் தராமல் காலம் தாழ்த்துவதை இச் செயற்குழு வண்மையாக கண்டிக்கிறது என்றும்., மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் அடிப்படையில் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும்., உரிமைகளும் தவறாமல் அளிக்கப்பட வேண்டும் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment