Friday 5 October 2018

BSNL கோபுரங்கள் குத்தகைக்கு...! நடந்தது என்ன...?
சிதறடிக்கப்படும் செல் கோபுரங்கள்...!
சீரழிக்கப்படும் வர்த்தகம்...!


BSNL செல் கோபுரங்கள் குத்தகைக்கு விடப்பட்டது...?

கடந்த 2018 ஆகஸ்ட் மாதம்., உத்தரப்பிரதேசம் (கிழக்கு)., உத்தரப்பிரதேசம் (மேற்கு)., உத்தர்காண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள BSNL நிறுவனத்தின் 6945 செல் கோபுரங்களை நிர்வகித்து பராமரிக்கும் பணியை ITI நிறுவனத்திற்கு 10 ஆண்டுகளுக்கு AWO முறையில் வழங்கி (AWO - Advance Work Order) BSNL நிர்வாகம் உத்திரவு வெளியிட்டுள்ளது. இப் பணிக்கு., BSNL நிறுவனம்., ITI நிறுவனத்திற்கு 6633.56/- கோடி ரூபாய்-ஐ வழங்கியது.

இந்த தகவல்., ITI நிறுவனத்தின் செயலர் திருமதி. S. சண்முக பிரியா அவர்கள் 30-08-2018 அன்று மும்பை பங்கு சந்தை நிறுவனத்தின் செயலாளர் அவர்களுக்கும்., தேசிய பங்கு சந்தை நிறுவனத்தின் மேலாளர் அவர்களுக்கும் எழுதிய கடிதத்தின் மூலமாக நாம் அறிந்த நிலையில் உடனடியாக., BSNL அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நமது BSNL நிறுவனத்தின் CMD திரு. அனுபம் ஸ்ரீ  வஸ்தவா அவர்கள்., BSNL செல் கோபுரங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் BSNL நிறுவனத்திற்கு ரூபாய். 1000/- கோடி வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார். இருப்பினும்., நமது தொழிற்சங்க தலைவர்கள் இந்த நடவடிக்கை நமது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என தங்களது கருத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில்., தற்போது., நமது கடும் எதிர்ப்பையும் மீறி இந்தியா முழுவதும் நமது BSNL நிறுவனத்திற்கு சொந்தமான 30287 செல் கோபுரங்களை நிர்வகித்து பராமரிக்க., 20 மாநிலங்களை 10 மண்டலங்களாகப் (Clusters) பிரிக்கப்பட்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ITI நிறுவனம் மற்றும் 3 தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதற்கான உத்திரவை BSNL கார்ப்பரேட் அலுவலகம் 03-10-2018 அன்று வெளியிட்டுள்ளது. (உத்திரவு எண்: 61-11/2018/CMTS Infra/O&M/ Post AWO/ 16 dated 03-10-2018)

இதன் மூலம்., எந்த ஒரு ஒப்பந்தத்திலும் (Tender) ஒரு பகுதி அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற விதியை., ஏற்கனவே., ITI நிறுவனத்திற்கு 4 மாநிலங்களில் நிறைவேற்றி விட்டதின் மூலம் மீதி மாநிலங்களில் உள்ள கோபுரங்களை தனியாருக்கு தாராளமாக குத்தகைக்கு விட முடியும் என்ற., நமது சந்தேகம் தற்போது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி:

BSNL நிறுவனத்தின் 30287 செல் கோபுரங்களை நிர்வகித்து பராமரிக்க., இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ITI மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் என 4 நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

குத்தகைக்கு விடப்பட்ட நிறுவனங்களின் விபரம்:

1. M/s. ITI Ltd நிறுவனத்திற்கு: 6945 செல் கோபுரங்கள்.
2. M/s. Mahendra & Mahendra Ltd நிறுவனத்திற்கு: 6129 செல் கோபுரங்கள்.
3. M/s. AST Telecom Solar Pvt Ltd நிறுவனத்திற்கு: 4808 செல் கோபுரங்கள்.
4. M/s. Pace Power System Pvt Ltd நிறுவனத்திற்கு: 12405 செல் கோபுரங்கள்.

இந்த குத்தகைக்கு Adance Work Order கார்ப்பரேட் அலுவலகம் MM பிரிவு-ஆல் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

எனவே., அந்தந்த மாநில தலைமை பொது மேலாளர்கள் (CGM) உடனடியாக ஒப்பந்தத்தில் (Agreement) கையெழுத்து இட்டு., BSNL செல் கோபுரங்களை அந்தந்த நிறுவனத்தின் வசம் As is Where is Basis அடிப்படையில் ஒப்படைக்க வேண்டும்.

இந்நிலையில் தற்போது., கோபுர பராமரிப்பு மற்றும் அதன் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுள்ள நமது ஊழியர்களின் நிலை மற்றும் எதிர்காலம் என்ன...?

பராமரிப்பு பணி என்பது கூட ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. Sales and Marketing of Passive Infrastructure என்றால் நமது கோபுரங்களை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் உரிமை-ஐ ITI உள்பட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதின் உள் நோக்கம் என்ன...?

BTCL (BSNL Tower Corporation Limited) என்ற தனி Tower Corporation-ஐ எதிர்த்து நாம் போராடி வரும் நிலையில்., ஒட்டுமொத்த கோபுரத்தையும் குத்தகைக்கு விடுவதின் மூலம் மறைமுகமாக தனது நோக்கத்தை ஆளும் பாஜக அரசாங்கம் நிறைவேற்றி விட்டது.

Tower Corporation செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே., நமது கோபுரங்கள் அனைத்தும் தனியார் கையில்...?

நாம் Role Back Tower Corporation தனி செல் கோபுர நிறுவனத்தை திரும்பப் பெறு என தொடர்ந்து போராடுவோம்.

No comments:

Post a Comment