Wednesday 10 October 2018

AUAB கூட்டமைப்பின் கூட்டமும்...!
தொடர் போராட்டமும்...!



BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL - AUAB) கூட்டம் 08-10-2018 அன்று புது டெல்லியில்., நமது NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்., NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, AIGETOA, BSNLMS, BSNL ATM மற்றும் BSNLOA ஆகிய சங்கங்களின் பொதுச் செயலர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் 24-02-2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா., அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம், 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் ஓய்வூதிய பங்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால்., இதுவரை அமைச்சர் அளித்த உறுதிமொழிகளின் மீது எந்தவித முன்னேற்றங்களும் இல்லை. எனவே., அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

AUAB கூட்டமைப்பின் முடிவுகள் மற்றும் போராட்ட இயக்கங்கள்:
  • 29-10-2018 அன்று நமது கோரிக்கைகளை-ம்., அரசாங்கத்தின் BSNL விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை-ம் விளக்கி மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவது.
  • 30-10-2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம்., மாநில தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகர்களில் முழு நேர தர்ணா போராட்டம் நடத்துவது.
  • 14-11-2018 அன்று மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பேரணி நடத்தி., மாநில முதன்மை பொது மேலாளர் (CGM) மற்றும் மாவட்ட பொது மேலாளர் (GM) அவர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது.
  • நமது கோரிக்கைகள் தீரவில்லை எனில் வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஊழியர்களை திரட்டுவது.

AUAB கூட்டமைப்பின் கோரிக்கைகள்:
  • BSNL நிறுவனத்தின் செல் கோபுரங்களைத் தனியார் பராமரிப்பிற்கு அனுமதிக்காதே. இதன் மூலம் ஆண்டிற்கு 1800/- கோடி வீண் செலவு செய்ததே.
  • டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ITS அதிகாரிகளை DOT-க்கு திருப்பி அனுப்பு.
  • 3-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்து.
  • ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து.
  • ஓய்வூதியப் பங்களிப்பை முறைப்படுத்து.
  • 4-G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்கீடு செய்.

தோழர்களே...!
ஓயாது கத்தும் கடலில்...!
ஒருபோதும் அலைகள் ஓய்வதில்லை...!
அதுபோல...! மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக...!
ஓயாது கத்தும் ஊழியர்களின்...! 
போராட்டங்களும் ஓய்வதில்லை...!
தொடர்ந்து நாம் போராடுவோம்...! 
நம் உரிமைகளை வென்றெடுப்போம்...!

No comments:

Post a Comment