Wednesday 10 October 2018

இருதரப்பு ஊதியக்குழு - ஏழாவது கூட்டம்

Image result for committee meeting

நமது BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு ஊதியக்குழுவின் ஏழாவது கூட்டம் 09-10-2018 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் (தலைமை பொது மேலாளர் - சட்டம்) - CGM - Legal) அவர்கள் தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில்., இருதரப்பு ஊதியக்குழுவின் நிர்வாக தரப்பு மற்றும் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இருதரப்பு ஊதியக்குழுவின் இன்றையக் கூட்டத்தில்., 3-வது ஊதிய மாற்றத்திற்கான ஊதிய விகிதங்கள் இறுதிப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பு., ஊதிய நிலைகளில் NE-4 மற்றும் NE-5 ஆகிய ஊதிய விகிதங்களின் இறுதிநிலையை உயர்த்த வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே., நிர்வாக தரப்பு முன்மொழிந்த ஊதிய விகிதங்கள் மீது உடன்பாடு ஏற்பட்டது.

இவ் விவாதத்தை தொடர்ந்து படிகள் (Perks and Allowances) மீதான விவாதம் துவங்கியது. படிகள் மாற்றத்தின் முதல் ஆய்படு பொருளாக வீட்டு வாடகைப்படி (HRA) மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இவ் விவாதத்தில் நிர்வாக தரப்பு., BSNL அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றம் தொடர்பாக BSNL இயக்குனர் குழு., DOT (தொலைத்தொடர்பு துறை)-க்கு அனுப்பிய முன்மொழிவில் வீட்டு வாடகைப்படி (HRA) 31-12-2016-ல் இருந்த அளவில்-ஆன வீட்டு வாடகைப்படியே தொடரும் என்றும்., இதே அடிப்படையில் தான் ஊழியர்களுக்கும் வீட்டு வாடகைப்படி (HRA) அமுலாக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

BSNL நிறுவனத்தின் நிதி நிலைமையை காரணம் காட்டி நிர்வாக தரப்பு இதனை நியாயப்படுத்தியது. மேலும்., வீட்டு வாடகைப்படி (HRA) மாற்றப்பட்டது என்றால் கூடுதலாக ரூபாய். 570/- கோடி செலவாகும் என்றும்., இந்த படிகள் மாற்றத்தால் ஏற்படக்கூடிய கூடுதல் செலவுகள் பற்றிய குறிப்பையும் ஊதிய உடன்பாட்டிற்கான ஒப்பந்த கோப்புடன் இணைத்து DOT-க்கு அனுப்பப்பட்டது என்றால் ஊதிய மாற்றத்திற்கு DOT ஒப்புதல் வழங்காது என்றும் தெரிவித்தனர்.

நிர்வாக தரப்பின் இந்த முன்மொழிவை ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். வீட்டு வாடகைப்படி (HRA) ஊதியத்தின் ஒரு பகுதி என்றும்., அதனை விட்டுத் தர முடியாது என்றும் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் ஒற்றைக் குரலில் தெரிவித்தனர். மேலும்., புதிய ஊதியத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி (HRA) மாற்றியமைக்கப்பட வேண்டும் என உறுதியுடன் ஊழியர் தரப்பு கோரிக்கை வைத்தனர். இக் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும்., அடுத்த இருதரப்பு ஊதியக்குழுவின் கூட்டத்தில்., இப் பிரச்சனை குறித்து விவாதிப்பதாகவும் நிர்வாக தரப்பு தெரிவித்தது.

No comments:

Post a Comment