Tuesday, 4 September 2018

NFTE பேரியக்கத்தின் தொடர் முயற்சிக்கு வெற்றி
JE இலாக்கா தேர்வில் - மதிப்பெண் தளர்வு


28-01-2018 அன்று நடைபெற்ற JE (TTA) இலாக்கா தேர்வில் (LICE 50% - Recruitment Year 2016)., கேள்வித்தாள்கள் மிக கடுமையான உயர் தகுதியில் கேட்கப்பட்டு இருந்தது., இந்திய முழுவதும் 9145 காலியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 1800 தோழர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இத் தேர்வின் முடிவுகள் 23-04-2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தால் வெளியிடப்பட்டது. கேள்வித்தாள்கள் மிக கடுமையாக இருந்த காரணத்தால்., நாடு முழுக்க 95 தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றனர்.

இதை தொடர்ந்து., நமது NFTE பேரியக்கம் இந்த பிரச்சனையை கையில் எடுத்து., இந்த தேர்வில் பங்கேற்ற ஊழியர்களுக்கு தேர்ச்சி பெற தகுதியான மதிப்பெண்களில் தளர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஒரு நிலையில் BSNL நிர்வாகம் மறுத்த போது., 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற நேரடி நியமன JE (TTA) கேடருக்கான தேர்வில் வழங்கிய மதிப்பெண் தளர்வை சுட்டிக்காட்டி., இது போன்ற தளர்வை 28-01-2018 அன்று நடைபெற்ற இந்த தேர்விற்கும் வழங்க வேண்டும் என கடுமையாக வாதாடி வந்தது. இந் நிலையில்., நமது கடும் முயற்சியின் பலனாக 31-08-2018 அன்று நமது கார்ப்பரேட் அலுவலகம் மதிப்பெண் தளர்விற்கான உத்திரவை வெளியிட்டுள்ளது.

உத்திரவின் அடிப்படையில் மதிப்பெண் தளர்வு:
  • பொது (General) மற்றும் OBC பிரிவு ஊழியர்களுக்கு தனிப்பட்ட ஒரு பாடத்தில் குறைந்தபட்சம் 20% சதவீதம் (தளர்விற்கு முன்பாக 30% சதவீதம்) மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண்களில் (Aggregate) 30% சதவீதம் (தளர்விற்கு முன்பாக 37% சதவீதம்) என்ற அடிப்படையில் மதிப்பெண் தளர்வு இருக்கும்.
  • SC மற்றும் ST பிரிவு ஊழியர்களுக்கு தனிப்பட்ட ஒரு பாடத்தில் குறைந்தபட்சம் 15% சதவீதம் (தளர்விற்கு முன்பாக 20% சதவீதம்) மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண்களில் (Aggregate) 23% சதவீதம் (தளர்விற்கு முன்பாக 30% சதவீதம்) என்ற அடிப்படையில் மதிப்பெண் தளர்வு இருக்கும்.
  • Aggregate எனப்படும் மொத்த மதிப்பெண்களில் 7 மதிப்பெண்களை அனைத்து (பொது., OBC., SC மற்றும் ST) பிரிவு ஊழியர்களுக்கும் நிர்வாகம் தளர்த்தி உள்ளது.
  • இந்த மதிப்பெண் தளர்வு ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • மதிப்பெண் தவிர., வயது வரம்பு., சேவைக்காலம் ஆகியவற்றில் தளர்வு கிடையாது.
BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த உத்திரவின் அடிப்படையில்., புதிய தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும். NFTE பேரியக்கத்தின் இந்த கடும் முயற்சியால் பலனடைந்து JE (TTA)-க்களாக பதவி உயர்வு பெற உள்ள அனைத்து ஊழியர்களுக்கும்., நமது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட நிர்வாகத்திற்கும்., இந்த உத்திரவினை பெற்றுத்தந்த., நமது மத்திய., மாநில சங்கத்திற்கும்., நமது சேலம் மாவட்ட சங்கத்தின் நன்றி பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment