Friday, 31 August 2018

பாசத்தலைவா...! பல்லாண்டு வாழ்க...!
தொடரட்டும்...! தொண்டறம்...!


தமிழ் மாநில சங்கத்தின்...! பெருமைமிகு தலைவரே...!
பெருந்தலைவரே...! எங்கள் காமராஜரே...!
வாழ்க பல்லாண்டு...!

பட்டுக்கோட்டையில் பிறந்தவனே...!
பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலனே...!

மதுராந்தகத்தில் துவங்கியது இயக்குனர் பணி...!
மானுடப் பயணத்திற்கு நீ ஏற்றது...!
இயக்கப் பணி...!

இயக்கத்தை.,
இயக்கத் தலைவர்களை., தன் பால் நேசித்தவனே...!
இயக்கத் தோழர்களால் நேசிக்கப்பட்டவனே...!

கொள்கை என்றால் குன்று...!
குணம் என்றால் நன்று...!

சிந்தனை என்றால் சிவப்பு...!
சீற்றம் என்றால் நெருப்பு...!

கருத்து என்றால் தென்றல்...!
களம் என்றால் புயல்...!

தோழமை நெருக்கம் தந்தவனே...!
தொண்டர்கள் மீது உருக்கம்
கொண்டவனே...!

போராட்டக் களத்தின் போராளியே...!
மாநாட்டு களப் பிரச்சனையின் தீர்வாளியே...!

பன்முக தலைமை பண்பின் சிகரமே...!
பாட்டாளி வர்க்கத்தின் வசீகரமே...!

சாதனைகளின் சரித்திரமே...!
எங்கள் சங்கத்தின் நிறைகுடமே...!

வரலாற்றின் வழித்தடமே...!
எங்கள் வர்க்க குணத்தின் செயல் தடமே...!

பகுத்தறிவின் பிறப்பிடமே...!
எங்கள் பண்பாட்டின் உறைவிடமே...!

தொழிற்சங்க நதிக்கரையில் கிடைத்த திரவியமே...!
விமர்சன அமிலங்களால் வரைந்த ஓவியமே...!

சுதந்திரத் தினத்தன்று சுவாசம் பெற்றவனே...!
சுயமரியாதைக்கு சுவாசம் தந்தவனே...!

சாணக்கிய தந்திரம் கற்றவனே...!
சங்கத்தில் ஞானம்
பெற்றவனே...!

பேச்சு ஆற்றல் கொண்டவனே...!
பேசும் ஆற்றல் தந்தவனே...!

RTI சட்டத்திற்கு அடையாளம் தந்தவனே...!
அறிந்திட முடியாத அறிய பல...!
தகவல்களை தந்தவனே...!

சட்டவிதிகள் அறிந்தவனே...!
சங்கத் தோழர்களின் சங்கடங்கள்
தவிர்த்தவனே...!

NFTE என்கின்ற பல்கலைக்கழகத்தில்...!
முனைவர் பட்டம் பெற்ற., முதல்
நிலை மாணவனே...!

உழைப்பால் உயரத்தை தொட்டவனே...!
கிளை தொடங்கி சம்மேளனம் வரை
வளர்ந்தவனே...!

மாநிலச் செயலர் நோக்கிய.,
உன் பயணத்தில் மாநிலத் தலைவரானாய்...!
மாண்பு காத்திட மறுக்காமல் ஏற்றுக் கொண்டாய்...!

தன்னை விட இயக்கம் பெரிது என நடந்தவனே...!
தலைமை பண்பின் முடிவை ஏற்று
நடப்பவனே...!

வாழ்வு தந்த பாசறையில் வரவேற்பு விழா கண்டவனே...!
வாழ்க்கை அறம்., வர்க்க அறம் இரண்டும்
இணை என நினைத்து நடந்தவனே...!

இயக்கத்தின் இணைப் பணி ஏற்றிட.,
இணைந்து பணி ஆற்றிட.,
ஜெகன் இல்லத்தில் தஞ்சம்
கொண்டவனே...!

புலனம் குழுவில் செய்திகளை முந்தித் தந்தவனே...!
இணையதளத்தில் முதிர்ந்த செய்திகளை
தந்தவனே...!

ஒலிக்கதிர் ஆசிரியர் பணியில்
அச்சுப் பணியில் பெரும் பணி சுமந்தவனே...!
காசாளர் பணியை களங்கம் இல்லாமல்
பகிர்ந்தவனே...!

அவைகளில்.,
அமைப்பு விதிகளில்.,
கண்ணியம் காத்தவனே...!
ஆர்ப்பாட்ட வீதிகளில் கம்பீரம்
காத்தவனே...!

உன் சீற்றத்தால் வீழ்ந்தவர்கள் உண்டோ...?
உன் சிரிப்பால் விழுந்தவர்கள் உண்டு...!

விவாதத் திறன் கொண்டவனே...!
விவாதமே., உன் விவாத திறன் கண்டு
வியக்க நடப்பவனே...!

எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாத வீரம்...!
அடிமட்ட ஊழியர்கள் மீது
நீ கொண்ட ஈரம்...!

திருவனந்தபுர மாநாட்டின் தாக்கத்தில் உருவானது ஒரு சங்கம்...!
அந்த தாக்கத்தில் இருந்து புதுவையை மீட்டது
எங்களது சிங்கம்...!

உன் மீது எறியப்பட்ட தீக்கணைகளை.,
பூக் கணைகளாய் மாற்றிய புதுமை வீரன் நீ...!
எங்கள் புதுவைக்கு என்றும் வீரன் நீ...!

நிறைவான...! பணி செய்து...!
நிறைவு பெறும்...! எங்கள் தலைவனே...!
இனி...! இணையில்லா...! இயக்கப் பணி செய்திடும்...!
எங்கள் பாசத் தலைவனே...! தொடரட்டும் உன் தொண்டறம்...!

இன்று 2018 ஆகஸ்ட் 31...!
பாசத்தலைவன்...! காமராஜ்-க்கு...!
பணி ஓய்வா...! காற்றுக்கு ஏது ஓய்வு...!
கடல் அலைக்கு ஏது ஓய்வு...! காமராஜ்-க்கு ஏது ஓய்வு...!

அறுபது...!
உன் தொடர் பணியால்...!
பண் நூறு காண...!
பல்லாண்டு...! பல்லாண்டு...!
பல......! நூறாண்டு வாழ்ந்திட...!
NFTE., சேலம் மாவட்ட சங்கத்தின்...!
நல் வாழ்த்துக்கள்...!

வாழ்த்துக்களுடன்...! தோழமையுள்ள...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment