பெரு வெள்ளத்தில்...! கடவுளின் தேசம்...!
பெருகட்டும் கைகொடுக்கும் நேசம்...!
நமது BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (AUAB) சார்பாக., கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிடும் வகையில் நிவாரண நிதியாக., BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒரு நாள் அடிப்படை ஊதியத்தை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்திட., 24-08-2018 அன்று நமது CMD அவர்களை சந்தித்து AUAB தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில்., BSNL நிர்வாகம் கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு., BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும்., தாமாக முன்வந்து தங்களின் ஒரு நாள் அடிப்படை ஊதியத்தை தந்து உதவ வேண்டும் என தனது 29-08-2018 தேதியிட்ட கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும்., ஆகஸ்ட் 2018., மாத ஊதியத்தின் அடிப்படையில் ஒரு நாள் அடிப்படை ஊதியம் பிடித்தம் செய்து கேரள மாநில முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
BSNL நிர்வாகத்தின் வேண்டுகோள் படி:
தன்னார்வ ஆதரவு (Voluntary Support) இருந்தாலும்., BSNL ஊழியர்கள் தங்களுக்கு நிதி வழங்க விருப்பம் இல்லை என்றால்., தங்களது விருப்பமின்மை கடிதத்தை சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி-கள் வசம் தர (தந்திட) வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கணக்கு அதிகாரிகள் விருப்பமின்மை ஊழியர்களை தவிர்த்து., மீதமுள்ள (விருப்பம் உள்ள) ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு நாள் அடிப்படை ஊதியத்தை அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கணக்கில் பிடித்தம் செய்யப்பட வேண்டும். (குறிப்பு: இது நிர்வாகத்தின் சட்ட விதிக்கான பதிவு., நமது விருப்பம் ஒன்றாக இருக்க வேண்டும்., உதவிடும் நோக்கமாக இருக்க வேண்டும் இதுவே NFTE மாவட்ட சங்கத்தின் வேண்டுகோள்)
மேலும்., மாவட்ட மற்றும் மாநில மட்டங்களில் BSNL ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்பை., இந்த நிதியை., தாங்கள் நேரடியாக அனுப்பிடக்கூடாது., அதற்கான அங்கீகாரம் இல்லை. கார்ப்பரேட் அலுவலகத்தின் வழியாகத்தான் அனுப்பப்பட வேண்டும். எனவே., ஊழியர்களிடம் பிடித்தம் செய்த நிதியை கணக்கிட்டு., அதற்கான தொகையின் மதிப்பை 15-09-2018-க்குள்., டெல்லி., கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள BFCI பிரிவுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
கேரள வெள்ளத்திற்கு நிவாரண நிதி வழங்கும் ஊழியர்கள்., வருமானவரி சட்டம் 1961 பிரிவு 80G-ன் படி வரி விலக்கு பெறலாம்.
கேரள மாநிலத்தில் பணிபுரியும் BSNL ஊழியர்களும் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் வெள்ள நிவாரண நிதி வழங்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
கேரள மக்களுக்கு நாம் இருக்கின்றோம் என உரக்கச் சொல்லும் நேரம் இது. பெரு வெள்ளத்தில் கடவுளின் தேசம்., பெருகட்டும் கைகொடுக்கும் நேசம்., முன்னின்று நிதி வழங்குவோம்., முற்றும் இழந்த நம் கேரள மக்களுக்கு., துயர் துடைப்பில் முன் நிற்போம்...! மனிதம் காப்போம்...!
நேசப் பெருக்குடன்...! கைகொடுக்கும் கரனாக...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:
Post a Comment