இருதரப்பு ஊதியக்குழு - மூன்றாவது கூட்டம்


நமது BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு ஊதியக்குழுவின் மூன்றாவது கூட்டம் 27-08-2018 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் (தலைமை பொது மேலாளர் - சட்டம்) - CGM - Legal) அவர்கள் தலைமை தாங்கினார்.
இக் கூட்டத்தில்., இருதரப்பு ஊதியக்குழுவின் நிர்வாக தரப்பு மற்றும் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஊழியர் தரப்பு ஏற்கனவே., 09-08-2018 அன்று நடைபெற்ற இருதரப்பு ஊதியக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில்., ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் தொடர்பாக., தங்களின் முன் மொழிவை நிர்வாக தரப்பிடம் வழங்கி இருந்தது. இந் நிலையில்., 27-08-2018 அன்று நடைபெற்ற., இந்தக் கூட்டத்தில் (இருதரப்பு ஊதியக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில்) நிர்வாக தரப்பு., தங்களின் முன் மொழிவை முன் வைத்தது.
இந்த முன் மொழிவின் படி., நிர்வாக தரப்பு., புதிய ஊதிய விகிதத்தின் குறைந்தபட்ச ஊதியத்திற்கு., பழைய ஊதிய விகிதத்தின் குறைந்தபட்ச ஊதியத்தை 2.4 ஆல் பெருக்கினால் வரும் தொகையை., உதாரணமாக NE-1 (RM மற்றும் குரூப் டி ஊழியர்கள்)-இன் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை (NE-1 ஊதிய விகிதம் 7760 - 13200) அதாவது 7760-ஐ X 2.4 ஆல் பெருக்கினால் வரும் தொகையான (ரூபாய். 18,624 @ ரூபாய் 18,600) ரூபாய். 18,600-ஐ., NE-1-இன் குறைந்தபட்ச ஊதியமாக முன் வைத்தது.
ஊழியர் தரப்பின் முன் மொழிப் படி:
NE-1 எனப்படும் RM மற்றும் குரூப் டி ஊழியர்களின் தற்போதைய ஊதிய விகிதமான 7760 - 13200 என்பது 19590 - 69800 என உயர்த்தப்பட வேண்டும் என்பது ஊழியர் தரப்பின் முன் மொழிவு. எனவே., நிர்வாகத்தின் இந்த முன் மொழிவு., ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என சுட்டிக்காட்டிய ஊழியர் தரப்பு இதனை ஏற்றுக் கொள்ளாமல்., ஊதிய விகிதத்தின் பெருக்கல் காரணி என்பது 2.4 என்பதற்கு பதிலாக குறைந்தபட்சம் 2.44-ஆகவாவது இருக்க வேண்டும் என்றும்., அந்த அடிப்படையில்., NE-1 (RM மற்றும் குரூப் டி ஊழியர்கள்)-இன் குறைந்தபட்ச ஊதிய விகிதம் அதாவது 7760-ஐ X 2.44 ஆல் பெருக்கினால் வரும் தொகையான (ரூபாய். 18,934-ஐ முழுமையாக்கி ரூபாய். 19,000) ரூபாய். 19,000-த்தை., NE-1-இன் குறைந்தபட்ச ஊதியமாக கட்டமைக்க வேண்டும் என்று வாதிட்டனர். மேலும்., அனைத்து ஊதிய விகிதத்தின் (NE-1 முதல் NE-12 வரை) குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கிட பெருக்கல் காரணியாக 2.44 என்பதை அடிப்படையாக வைக்க வேண்டும் என்றும் ஊழியர் தரப்பு வலியுறுத்தினர். இதனை பரிசீலிப்பதாக நிர்வாக தரப்பு உறுதி அளித்துள்ளது.
3-வது ஊதிய மாற்றத்தில் தேக்க நிலை ஏற்படாமல் இருக்க., ஊதிய விகிதத்தின் கால அளவை 43 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் ஆலோசனை வைக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பதில் அளித்த நிர்வாக தரப்பு., ஊழியர்களின் தேக்கநிலை காரணமாக., ஊதிய விகிதத்தின் அதிகபட்ச ஊதியத்தை (Maximum of Pay Scale) உயர்த்துவதால்., ஓய்வூதிய பங்களிப்பில் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என தங்களது கருத்தை தெரிவித்தது. இக் கருத்திற்கு பதில் அளித்த ஊழியர் தரப்பு., 3-வது ஊதிய மாற்றத்திற்கு பின்., எந்த ஒரு ஊழியரும்., ஊதிய தேக்க நிலையை அடைந்து விடாமல் இருப்பதற்கு தேவையான கால அளவு இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தை., 10-09-2018 அன்று நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் விவாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இருதரப்பு ஊதியக்குழுவின் பேச்சு வார்த்தை மிக தாமதமாக செல்வது குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். மேலும்., இதே தாமதத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றால் ஊதிய மாற்றத்தை விரைவில் முடிக்க முடியாது என்று தெரிவித்த., ஊழியர் தரப்பு. இன்னும்., குறைந்த கால இடைவெளியில் இருதரப்பு ஊதியக்குழுவின் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment