AUAB கூட்டமைப்பின் கூட்டமும்...! முடிவுகளும்...!
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (AUAB) கூட்டம் 23-08-2018 அன்று டெல்லியில்., BSNLMS சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., AIGETOA பொதுச் செயலர் தோழர். ரவி ஷில் வர்மா தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில்., NFTE சார்பாக., பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., துணைப் பொதுச் செயலர் தோழர். K.S.சேஷாத்ரி மற்றும் அகில இந்தியப் பொருளர் தோழர். A.ராஜ்மௌலி ஆகியோரும் BSNLEU சார்பாக பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ மற்றும் துணைப் பொதுச் செயலர் தோழர். சுவபன் சக்கரவர்த்தி ஆகியோரும் SNEA சார்பாக பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின்., AIGETOA சார்பாக பொதுச் செயலர் தோழர். ரவி ஷில் வர்மா., BSNLMS சார்பாக பொதுச் செயலர் தோழர். சுரேஷ்குமார் மற்றும் அகில இந்திய தலைவர் தோழர். மல்லிகார்ஜுனா ஆகியோரும் BSNL ATM சார்பாக உதவி பொதுச் செயலர் தோழர். ரேவதி பிரசாத்., BSNLOA சார்பாக துணைப் பொதுச் செயலர் தோழர். H.P.சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில்., கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிர் இழந்த மக்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வுக்கு பின்., AUAB தலைவர்களின் தீவிர ஆலோசனை மற்றும் விவாதத்திற்கு பிறகு., கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
AUAB கூட்டமைப்பின் முடிவுகள்:
- கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக., BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒருநாள் அடிப்படை ஊதியத்தை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்திட நமது CMD-க்கு கடிதம் எழுதுவது. மேலும்., ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ஊதியத்தை., நேரடியாக., கேரள முதல் அமைச்சர் பேரழிவு நிவாரண நிதிக்கு அனுப்புவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
- ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதியப் பங்களிப்பு மற்றும் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக., தொலைத்தொடர்பு செயலர் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திட., ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திடுமாறு., நமது CMD அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. (குறிப்பு: இம் முடிவின் அடிப்படையில் AUAB தலைவர்கள் 24-08-2018 அன்று நமது CMD அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்)
- ஓய்வூதியப் பங்களிப்பு தொடர்பாக மந்திரிசபை செயலர் (Cabinet Secretary)-க்கு கடிதம் எழுதுவது என முடிவு எடுக்கப்பட்டது.
- BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்-க்கு கடிதம் எழுதுவது என முடிவு எடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment