விலைவாசிப்புள்ளி உயர்வு - IDA எதிர்பார்ப்பு
2018 ஜூலை மாதத்தில் விலைவாசிப்புள்ளி நுகர்வோர் விலை குறியீட்டு எண் (Consumer Price Index) இதுவரை இல்லாத அளவிற்கு 291 புள்ளிகளில் இருந்து 301 புள்ளியாக 10 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
அக்டோபர் மாத IDA-வைக் கணக்கிட ஜூன்., ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களின் விலைவாசிப்புள்ளிகள் - நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள் (Consumer Price Index) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆகஸ்ட் மாத விலைவாசிப்புள்ளியைப் பொறுத்து அக்டோபர் மாத IDA உயர்வு தெரிய வரும்.
ஆகஸ்ட் மாதம் விலைவாசிப்புள்ளி வீழ்ச்சி அடைந்தால் கூட அக்டோபர் மாதம் (01-10-2018 முதல்) IDA குறைந்தபட்சம் 6% சதவீதத்திற்கு மேல் உயரும் என்றும் ஆகஸ்ட் மாதம் விலைவாசிப்புள்ளி உயர்ந்தால்., உயர்விற்கு ஏற்றவாறு., அக்டோபர் மாதம் (01-10-2018 முதல்) IDA 6% சதவீதம் முதல் 8% சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

No comments:
Post a Comment