BSNL கோபுரங்கள் குத்தகைக்கு...!
நடந்தது......! என்ன......!
ITI நிறுவனத்தின் செயலர் திருமதி. S. சண்முக பிரியா அவர்கள் 30-08-2018 அன்று மும்பை பங்கு சந்தை நிறுவனத்தின் செயலாளர் அவர்களுக்கும்., தேசிய பங்கு சந்தை நிறுவனத்தின் மேலாளர் அவர்களுக்கும்., BSNL நிறுவனத்தின் செல் கோபுரங்களை நிர்வகித்து பராமரிக்கும் பணி தொடர்பாக கடிதம் எழுதினார்.
இக் கடிதத்தின் படி:
உத்தரப்பிரதேசம் (கிழக்கு)., உத்தரப்பிரதேசம் (மேற்கு)., உத்தர்காண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள BSNL நிறுவனத்தின் 6945 செல் கோபுரங்களை நிர்வகித்து பராமரிக்கும் பணியை எங்களது ITI நிறுவனத்திற்கு 10 ஆண்டுகளுக்கு AWO முறையில் வழங்கி (AWO - Advance Work Order) BSNL நிர்வாகம் உத்திரவு வெளியிட்டுள்ளது. இப் பணிக்கு., BSNL நிறுவனம்., ITI நிறுவனத்திற்கு 6633.56/- கோடி ரூபாய்-ஐ வழங்கும்.
இந்த பணியை நலிவடைந்த பொதுத்துறை நிறுவனமான., ITI (Indian Telephone Industries Limited) நிறுவனத்திற்கு தான் வழங்கப்படுகிறது என்பதால் தொழிற்சங்கங்கள் எதிர்க்கவும் இயலாது.
அதே நேரத்தில்., நம் BSNL நிறுவனத்தை பாதுகாக்க...! நம் கோபுரங்களை பாதுகாக்க...! நம் முன் நிற்கும் கேள்விகள்., சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை முன் வைத்துள்ளோம்...?
நலிவடைந்த ITI நிறுவனத்தை., BSNL நிறுவனத்துடன் இணைப்பதையே தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது., BSNL நிறுவனத்தின் 6633.56/- கோடி ரூபாய்-ஐ (BSNL நிறுவனம் நட்டத்தில் உள்ள நிலையில்) ITI நிறுவனத்திற்கு வாரி வழங்கி உள்ள., DOT மற்றும் BSNL நிறுவனங்களின் உள் நோக்கம் என்ன...?
இந்த முடிவு எடுப்பதற்கு முன்பு அனைத்து சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா...? குறைந்தபட்சம் தகவல்-ஆவது தெரிவிக்கப்பட்டதா...?
தற்போது., கோபுர பராமரிப்பு மற்றும் அதன் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுள்ள நமது ஊழியர்களின் நிலை மற்றும் எதிர்காலம் என்ன...?
பராமரிப்பு பணி என்பது கூட ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. Sales and Marketing of Passive Infrastructure என்றால் நமது கோபுரங்களை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் உரிமை ITI நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதின் உள் நோக்கம் என்ன...?
BTCL (BSNL Tower Corporation Limited) என்ற தனி Tower Corporation-ஐ எதிர்த்து நாம் போராடி வரும் நிலையில்., ஒட்டுமொத்த கோபுரத்தையும் குத்தகைக்கு விடுவதின் மூலம் மறைமுகமாக தனது நோக்கத்தை ஆளும் பாஜக அரசாங்கம் நிறைவேற்றி விட்டது.
ITI., நமது Passive Infrastructure-களை., Jio உள்பட எந்த நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் வாடகைக்கு விடலாம்., சந்தைப்படுத்தலாம்.
எந்த ஒரு ஒப்பந்தத்திலும் (Tender) ஒரு பகுதி அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற விதியை., முதலில்., இந்த 4 மாநிலங்களில் நிறைவேற்றி விட்டதின் மூலம் மீதி மாநிலங்களில் உள்ள கோபுரங்களை தனியாருக்கு தாராளமாக குத்தகைக்கு விட முடியும்.
Jio., Airtel மற்றும் Idea ஆகிய நிறுவனங்கள் வேறு பெயர்களில் கூட., குத்தகைக்கு எடுப்பார்கள். இந் நிறுவனங்களுக்கு., கரும்பையும் கொடுத்து தின்பதற்கு கூலியும் கோடிக்கணக்கில் (நமது BSNL நிறுவனத்தின் நிதியில்) கொட்டி அழ வேண்டும்.
Tower Corporation செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே., நமது கோபுரங்கள் அனைத்தும் தனியார் கையில்...?
நாம் Role Back Tower Corporation (கோபுர நிறுவனத்தை...! திரும்பப் பெறு...!) என்று தொடர்ந்து போராடுவோம்...! வெற்றி பெறுவோம்...!

No comments:
Post a Comment