Tuesday, 11 September 2018

இருதரப்பு ஊதியக்குழு - நான்காவது கூட்டம்

Image result for committee meeting

நமது BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு ஊதியக்குழுவின் நான்காவது கூட்டம் 10-09-2018 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் (தலைமை பொது மேலாளர் - சட்டம்) - CGM - Legal) அவர்கள் தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில்., இருதரப்பு ஊதியக்குழுவின் நிர்வாக தரப்பு மற்றும் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இருதரப்பு ஊதியக்குழுவின் இன்றைய கூட்டத்தில் (10-09-2018 அன்று நடைபெற்ற இருதரப்பு ஊதியக்குழுவின் நான்காவது கூட்டத்தில்)., நிர்வாக தரப்பு உறுப்பினர்கள்., துவக்கத்தில் இருந்தே., ஊழியர்களுக்கு பாதகமான., எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும்., BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான பொருத்தும் சூத்திரத்தை (Fitment Formula-வை) பொறுத்த வரை 0% சதவீதம் அல்லது 5% சதவீதத்தை மட்டுமே தொலைத்தொடர்பு துறை (DOT) ஏற்றுக் கொள்ளும் என்றும்., 15% சதவீத பொருத்தும் சூத்திரத்தை (Fitment Formula-வை) DOT (தொலைத்தொடர்பு துறை) ஏற்றுக் கொள்ளாது என்றும் தெரிவித்தனர். இதற்கு ஊழியர் தரப்பு., 15% சதவீதத்திற்கு குறைவான பொருத்தும் சூத்திரத்தை (Fitment Formula-வை) நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என உறுதியாக கூறி விட்டனர்.

மேலும்., ஊழியர் தரப்பு எந்த ஒரு ஊதிய விகிதத்தில் உள்ள (NE-1 முதல் NE-12 வரை) ஊழியர்களுக்கும் தேக்கநிலை (Stagnation) ஏற்படாத வகையில் ஊதிய விகிதத்தின் குறைந்தபட்ச ஊதியத்திற்கும்., அதிகபட்ச ஊதியத்திற்கும் இடையே தேவையான அளவிற்கு நீண்ட கால அளவை கொண்டதாக (43 ஆண்டுகள்) புதிய ஊதிய விகிதம் இருக்க வேண்டும் என கடந்த மூன்று கூட்டங்களிலும் உறுதியாக தெரிவித்தனர். இதற்கு நிர்வாக தரப்பு., ஊதிய விகிதத்தின் அதிகபட்ச ஊதியத்தை (Maximum of Pay Scale) உயர்த்துவதால்., ஓய்வூதிய பங்கீட்டை தேவை இல்லாமல்., BSNL நிறுவனம் அதிக அளவில் செலுத்த வேண்டிய நிலை வரும்., இதை தவிர்க்க., ஊதிய விகிதத்தின் இடைவெளியை முடிந்த வரை குறைக்க வேண்டும் என வாதிட்டனர். இதற்கு ஊழியர் தரப்பு தனது எதிர்ப்பை தெரிவித்தது. மேலும்., அதிகாரிகளுக்கு., ஓய்வூதிய பங்கீட்டை அதிகமாக செலுத்திட தயாராக இருக்கும் நிர்வாகம் ஊழியர்களுக்கு செலுத்துவதில் மட்டும் ஏன் இவ்வளவு கவலை கொள்ள வேண்டும் என கடுமையாக வாதிட்டனர்.

உடனடியாக., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் அவர்கள் தலையிட்டு., ஊதிய மாற்றத்தில் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும்., இக் கூட்டத்தில்., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் அவர்களின் வழிகாட்டுதல் படி., நிர்வாக தரப்பின் புதிய ஊதிய விகிதங்கள் குறித்த முன்மொழிவை., ஊதியக்குழுவின் செயலர் திரு. A.M.குப்தா (பொது மேலாளர் - ஊழியர் உறவு) அவர்கள் முன்மொழிந்தார்.

நிர்வாக தரப்பின் புதிய ஊதிய விகிதங்கள் - முன்மொழிவு:
(இத்துடன் ஊழியர் தரப்பின் முன்மொழிவு-ம் இணைக்கப்பட்டுள்ளது)


இருதரப்பு ஊதியக்குழுவின் அடுத்த கூட்டம் 14-09-2018 அன்று மாலை 03-30 மணிக்கு நடைபெறும்.

குறிப்பு: இக் கூட்டத்திற்கு முன்பாக., 3-வது ஊதிய மாற்றத்திற்கான., புதிய ஊதிய விகிதங்கள் குறித்த நிர்வாகத்தின் இந்த முன்மொழிவை., விவாதித்து இறுதி செய்வதற்கான ஊழியர் தரப்பு கூட்டம் 11-09-2018 இன்று மாலை 03-00 மணிக்கு நடைபெறும்.

No comments:

Post a Comment