Friday, 14 September 2018

திருச்செங்கோடு கிளை மாநாடு மற்றும்
பணிநிறைவு பாராட்டு விழா


நமது திருச்செங்கோடு கிளையின்., 6-வது கிளை மாநாடு மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய இருபெரும் விழா 08-09-2018 சனிக்கிழமை அன்று திருச்செங்கோடு தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில்., தோழர். குப்தா அரங்கில் மிக எழுச்சியாக துவங்கியது.

திட்டமிட்ட நிகழ்வுப்படி., மாலை 05-00 மணிக்கு துவங்கிய கிளை மாநாட்டிற்கு கிளைத்தலைவர் தோழர். P.சுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக., நமது சங்கக் கொடியை கிளை துணைத் தலைவர் தோழர். A.விஜயகுமார் விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.

தியாகிகள் ஸ்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்., கிளைச் செயலர் தோழர். K.சதாசிவம் மற்றும் கிளைச் செயலர் (பொறுப்பு) தோழர். S.கணேசன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். திருச்செங்கோடு கிளைத் தோழர். A.ரஞ்சித்குமார் அஞ்சலி உரை ஆற்றினார்.

மாநாட்டை துவக்கி வைத்து., மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் துவக்க உரை நிகழ்த்தினார்.

மாநாட்டை வாழ்த்தி., TMTCLU மாவட்ட செயலர் தோழர். M.இசையரசன்., நாமக்கல் நகர கிளைச் செயலர் தோழர். V.மாதேஸ்வரன்., நாமக்கல் ஊரக கிளைச் செயலர் தோழர். K.கணேசன்., பள்ளிப்பாளையம் கிளைச் செயலர் தோழர். V.கோபால்., குமாரபாளையம் கிளைச் செயலர் தோழர். C.லோகநாதன்., வேலூர் கிளைச் செயலர் தோழர். S.வேணுகோபால்., ராசிபுரம் கிளைச் செயலர் தோழர். M.அருள்மணி., நாமகிரிப்பேட்டை கிளைச் செயலர் தோழர். R.குணசேகரன் மற்றும் சங்ககிரி கிளைச் செயலர் தோழர். N.மாதையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி., மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்., மாவட்ட அமைப்பு செயலர் தோழர். S.R.செல்வராஜ்., மாவட்ட உதவி செயலர்களான தோழர்கள். K.அம்மையப்பன்., M.தனபால்., P.சுப்ரமணி.,  G.இறைமணி., மாவட்ட துணைத் தலைவர்களான தோழர்கள். B.ராஜமாணிக்கம்., P.தேவா மற்றும் TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மாநாட்டு சிறப்புரை ஆற்றினார். நிறைவாக., மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன் நிறைவு பேரூரை ஆற்றினார்.

மாநாட்டு நிகழ்வான., பொருளாய்வுக்குழுவில் செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வில்...! கீழ்க்கண்ட தோழர்கள்...!
ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்...!

கிளைத் தலைவர்: தோழர். A. ரஞ்சித்குமார், JE., திருச்செங்கோடு.
கிளைச் செயலர்: தோழர். S. கணேசன், TT., திருச்செங்கோடு.
கிளைப் பொருளர்: தோழர். P.N. இளங்கோ, AOS (TG)., திருச்செங்கோடு.

கிளை மாநாட்டின் ஒரு பகுதியாக திருச்செங்கோடு கிளையில் பணி ஆற்றி ஓய்வு பெற்ற கிளைச் செயலர் தோழர். K.சதாசிவம் மற்றும் கிளைத் தலைவர் தோழர். P.சுப்ரமணியம் ஆகியோருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இப் பணிநிறைவு பாராட்டு விழாவில் மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன் மற்றும் மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் ஆகியோர் தோழர்களை வாழ்த்தி கௌரவித்தனர்.

இறுதியாக., கிளை தணிக்கையாளர் தோழர். P.குணசேகரன் நன்றி கூற., இரவு 08-30 மணிக்கு திருச்செங்கோடு கிளை மாநாடு மற்றும் பணிநிறைவு பாராட்டு விழா இனிதே முடிவுற்றது.

தோழமையான உபசரிப்பு., அறுசுவை சைவ மற்றும் அசைவ உணவு., அற்புதமான விருந்தோம்பல்., தெருவெங்கும் செங்கொடி தோரணம் மற்றும் பதாகைகள் என சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த திருச்செங்கோடு வரவேற்புக்குழுத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் சேலம் மாவட்ட சங்கத்தின் நன்றி பாராட்டுக்கள்.











































































தோழமையான உபசரிப்பு., அறுசுவை சைவ மற்றும் அசைவ உணவு., அற்புதமான விருந்தோம்பல்., தெருவெங்கும் செங்கொடி தோரணம் மற்றும் பதாகைகள் என சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த திருச்செங்கோடு வரவேற்புக்குழுத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் சேலம் மாவட்ட சங்கத்தின் நன்றி பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment