Monday, 10 September 2018

மத்திய சங்கத்தின் - செய்தி துளிகள்


நமது மத்திய சங்கத்தின் செய்தித் துளிகள்:
  • 05-09-2018 அன்று நமது அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம் அகமது மற்றும் நமது அகில  இந்திய பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங் ஆகியோர் தொலைத்தொடர்பு துறை (DOT)-ன் இயக்குனர் (பொதுத்துறை நிறுவனம் - PSU) அவர்களை சந்தித்து., BSNL ஊழியர்களின்., 3-வது ஊதிய மாற்றத்திற்கான., செலவிடும் திறன் (Affordability) பிரிவில் இருந்து BSNL நிறுவனத்திற்கு விலக்குப் பெறுவதற்கான அமைச்சரவை குறிப்பு., குறித்து விவாதித்தனர். இதற்கு பதில் அளித்த., இயக்குனர் (பொதுத்துறை நிறுவனம் - PSU) அவர்கள் BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு DPE வழிகாட்டுதல் படி கொடுக்கும் (அல்லது) செலவிடும் திறன் விதியில் இருந்து BSNL நிறுவனத்திற்கு விலக்கு அளிக்கலாம் என்ற அமைச்சரவை குறிப்பு., அமைச்சரவைக்கு அனுப்பப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும்., இவ் விவாதத்தில்., BSNL IDA ஓய்வூதியம் வழங்க விளக்கம் கேட்டு., ஓய்வூதிய இலாக்காவிடம் அணுகி உள்ளதாகவும்., BSNL நிறுவனம் ஓய்வூதிய பங்களிப்பாக ரூபாய். 700/- கோடி வழங்கி உள்ளதாகவும்., BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
  • வரைவாளர் (Draughtsman)-க்கான கேடர் பெயர் மாற்றம் சிவில் பகுதி ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு (Telecom) பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கேடர் பெயர் மாற்றம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே., இந்த உத்திரவில் மாற்றம் கோரி., நமது பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங் அவர்கள் 04-09-2018 அன்று GM (Restg)., அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
  • ஊதிய விகிதங்கள் NE-4 முதல் NE-6 வரையில்-ஆன LM (Line Man) உள்ளிட்ட 19 கேடர்களுக்கு Joint Technician என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • தற்காலிக JTO பதவியில் பணியாற்றும் மற்றும் பணியாற்றிய JE ஊழியர்களுக்கு FR 22(1) a (1) அடிப்படையில் ஊதிய நிர்ணயம் தர வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து., BSNL நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்த காரணத்தினால்., தற்காலிக JTO பதவியில் பணியாற்றும் மற்றும் பணியாற்றிய JE ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்., உடனடியாக., இந்த பலன்களை வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
  • BSNL ஊழியர்களின் தற்காலிக பணி நீக்க காலத்தை., BSNL-இன் CDA அடிப்படையில் அல்லது மத்திய அரசு-இன் FR / SR விதிகளின் உத்திரவு அடிப்படையில் கருதப்பட வேண்டும்.
  • JE பதவி உயர்வு தேர்வில் 15% சதவீத பதவிகளை பணி மூப்பு (Seniority) அடிப்படையில் வழங்க வேண்டும் என்று நமது மத்திய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
  • நமது மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் 24., 25-10-2018 ஆகிய தேதிகளில் உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்துவார்-ல் நடைபெற உள்ளது.
  • Sr.TOA (G) கேடருக்கான உறுதித் தேர்வில் (Confirmation) தேர்ச்சி பெறாத ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிட., நமது கோரிக்கையை ஏற்று., நிர்வாகம் உத்திரவு வழங்க உள்ளது.
  • JTO போட்டி தேர்விற்கான காலி இடங்கள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே., விரைவில் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 28-01-2018 அன்று நடைபெற்ற JE தேர்வில் நமது சங்கத்தின் தொடர் முயற்சியால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும்., 0.5% சதவீதம்  என்பதை 1% சதவீதம்-ஆக கணக்கிட்டு பதவி உயர்வு வழங்கிட நமது மத்திய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
  • மாவட்ட மற்றும் மாநில அலுவலகங்களில் உதவி மேலாளர் (Assistant Manager) பதவிகளை உருவாக்கிட., தேசியக்குழுவின் முடிவின்படி 2 நபர்களை கொண்ட குழு அமைத்திட நமது மத்திய சங்கம்., நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளது.
  • மாநில அலுவலகங்களில் PA பதவிகளை நிரப்பிட வலியுறுத்தப் பட்டுள்ளது. பதவிகள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்வு நடத்திட நிர்வாகம் ஏற்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment