காத்திருப்பு போராட்டம் மற்றும்
காத்திருந்து - ஆர்ப்பாட்டம்
மாபெரும் வெற்றி...!
நமது BSNL தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் (Tamilnadu Telecom Circle) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2018 ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும்., உடனடியாக., ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும்., NFTE., TMTCLU., BSNLEU மற்றும் TNTCWU மாநில சங்கங்கள்., தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 17-09-2018 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.
இந்நிலையில்., இந்த அறைகூவலின் படி., நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களில் பெரும்பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு 2018 ஆகஸ்ட் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்ட நிலையில்., Housekeeping பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மட்டும்., அதுவும் 2018 ஆகஸ்ட் மாத ஊதியம் மட்டும் வழங்கப்படாத நிலையில்., நமது NFTE மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்கள் 17-09-2018 அன்று சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் (PGM அலுவலகத்தில்)., காத்திருப்பு போராட்டம் - காத்திருந்து ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிட்டு இருந்தது.
இந்த திட்டமிடல் படி., நமது காத்திருப்பு போராட்டம் - காத்திருந்து ஆர்ப்பாட்டம் 17-09-2018 அன்று காலை 11-00 மணிக்கு சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் துவங்கியது. இந்த காத்திருப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து., நமது கண்டன ஆர்ப்பாட்டம் (காத்திருந்து ஆர்ப்பாட்டம்) மதியம் 01-00 மணிக்கு நடைபெற்றது.
இக் காத்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு., NFTE மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ் மற்றும் TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். N.சிவமோகன் ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம் துவக்கி வைத்து., துவக்க உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கை முழக்கத்தை NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். S.கண்ணையன் எழுப்பினார்.
கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். R.மணி., மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.இறைமணி., கே.என். பட்டி கிளைச் செயலர் தோழர். C.அய்யந்துரை., அம்மாப்பேட்டை கிளைச் செயலர் தோழர். K.மகாகாந்தி., TMTCLU மெயின் கிளைச் செயலர் தோழர். S.V.சுரேஷ் பாபு., செவ்வை கிளைச் செயலர் தோழர். S.சக்திவேல் மற்றும் மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். L.அசோக்குமார் ஆகியோர் கோரிக்கை விளக்க உரை ஆற்றினர்.
கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் TMTCLU மாவட்டச் செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர் கண்டன சிறப்புரை ஆற்றினர்.
இறுதியாக TMTCLU மாவட்டப் பொருளர் தோழர். G.செல்வராஜ் நன்றி கூறி காத்திருப்பு போராட்டம் - காத்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். இந்த காத்திருப்பு போராட்டம் - காத்திருந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பரித்தனர்.
இந்த காத்திருப்பு போராட்டம் - காத்திருந்து ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களைத் தொடர்ந்து., நமது முதன்மை பொது மேலாளர் (PGM., Salem) திரு. S.சபீஷ், ITS., அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திட கோரிக்கை விடுத்தோம். நமது கோரிக்கையை ஏற்று., நமது முதன்மை பொது மேலாளர் அவர்கள் 18-09-2018 அன்று காலை 11-30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுத்தார். இதன் அடிப்படையில்., நமது காத்திருப்பு போராட்டம்., நமது மாவட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே., நமது தமிழ் மாநில நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கு தேவையான நிதி ரூபாய். 11 கோடியே 45 லட்சத்தை வழங்கிட வலியுறுத்தி கார்ப்பரேட் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் (முதல் கடிதத்தில்: ரூபாய். 9 கோடி 40 லட்சம் & இரண்டாவது கடிதத்தில் 2 கோடி 5 லட்சம்)., அதே நேரத்தில்., தமிழகம் முழுவதும் மிக எழுச்சியாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்த நிலையில்., கார்ப்பரேட் அலுவலகம் தமிழகத்திற்கு ரூபாய். 9 கோடியே 3 லட்சத்தை (17-09-2018 அன்று மாலை 05-30 மணி அளவில்) நிதியாக ஒதுக்கியது. இந்நிலையில்., நமது மாநில சங்கங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக., மாநில நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விவாதித்த போது., கார்ப்பரேட் அலுவலத்தில் இருந்து ரூபாய். 9.03 கோடி நிதி ஒதுக்கப்பட்டது உண்மை தான் ஆனால்., இந்த நிதி பழுது மற்றும் பராமரிப்பு (Repair and Maintenance)-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்., ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் மாநில நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில்., ஒப்பந்த ஊழியர்களுக்கு 2 மாதம் (2018 ஜூலை மற்றும் 2018 ஆகஸ்ட்) ஊதியம் வழங்காத நிலையில்., ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கு நிதி ஒதுக்காமல் பழுது மற்றும் பராமரிப்பு (Repair and Maintenance)-க்கு நிதி ஒதுக்கி இருப்பது., வன்மையாக கண்டிக்க தக்கது., என்ற அடிப்படையில்., நமது காத்திருப்பு போராட்டம் நாளை-ம் (18-09-2018 அன்றும்) தொடரும் என்றும்., மேலும்., பழுது மற்றும் பராமரிப்பு (Repair and Maintenance)-க்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கு பயன்படுத்திட வேண்டுகோள் விடுப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில்., திட்டமிட்டபடி., நமது காத்திருப்பு போராட்டம் 18-09-2018 அன்று தமிழகம் முழுவதும் துவங்கியது. நமது 2-ஆம் நாள் காத்திருப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து., மாநில நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., நமது கோரிக்கை ஏற்கப்பட்டு., பழுது மற்றும் பராமரிப்பு (Repair and Maintenance)-க்கு ஒதுக்கப்பட்ட நிதியான ரூபாய். 9.03 கோடியை ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கு ஒதுக்கீடு செய்திட மாநில நிர்வாகம் ஒத்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து., நமது காத்திருப்பு போராட்டம் (காலை 11-30 மணி அளவில்) விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில்., நமது சேலம் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி 18-09-2018 அன்று காலை 11-30 மணிக்கு முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத் தரப்பில்., முதன்மை பொது மேலாளர் திரு. S.சபீஷ், ITS., துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) திரு. K.பொன்னுசாமி., துணைப் பொது மேலாளர் (நிதி) திரு. M.முத்துசாமி மற்றும் உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) திரு. C.கந்தசாமி மற்றும் நமது NFTE சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்., மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி மற்றும் மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள்:
- ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் காலதாமதமாக வழங்கப்படுவது குறித்து விவாதித்தோம்., நமது கோரிக்கையின் நியாயம் உணர்ந்த முதன்மை பொது மேலாளர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்., மேலும்., தங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு., பழுது மற்றும் பராமரிப்பு (Repair and Maintenance)-க்கு ஒதுக்கப்பட்ட நிதியை (ரூபாய். 9.03 கோடியை) ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கு ஒதுக்கீடு செய்திட மாநில நிர்வாகம் ஒப்புக்கொண்டது என்றும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பட்டுவாடா நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு பணித்தன்மையின் அடிப்படையில் மறுவகைப்படுத்தப்பட்டு (Re-Categorization) திறனுக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்ற மாநில நிர்வாகத்தின் 24-07-2017 தேதியிட்ட உத்திரவை மேற்கோள் காட்டி., இந்த உத்திரவை நமது சேலம் மாவட்டத்தில் அமுல்படுத்திட வலியுறுத்தி., NFTE மாவட்ட சங்கத்தின் சார்பாக 13-10-2017 அன்று கடிதம் வழங்கியது குறித்து விவாதித்தோம். இக் கோரிக்கையின் நியாயம் உணர்ந்த நமது பொது மேலாளர் அவர்கள் நமது சேலம் மாவட்டத்தில் ஒப்பந்தம் கால நீட்டிப்பில் உள்ளது என்றும்., புதிய ஒப்பந்தத்திற்கான அறிவிப்பு மற்றும் இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும்., இந்த புதிய ஒப்பந்தத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு திறனுக்கேற்ற ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF., ESI முறையாக செலுத்தாமல் இருப்பது., ஒரு சில ஒப்பந்ததாரர்கள் (குறிப்பாக மல்லி பாதுகாப்பு மற்றும் சேவை நிறுவனம்) 2 அல்லது 3 தவணைகளில் ஊதியம் வழங்குவது., 2018 ஏப்ரல் முதல் VDA வழங்காமல் இருப்பது., 19-01-2017 முதல் புதிய ஊதியத்திற்கான நிலுவை (19-01-2017 முதல் 31-03-2017 வரை 61 நாட்களுக்கு) வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். இப் பிரச்சனைகளின் நியாயங்களை உணர்ந்த நமது முதன்மை பொது மேலாளர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கு தேவையான நிதியை பெற்று தந்து., சம்பளப் பட்டுவாடா நடைபெற காரணமாக இருந்த., இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்த மாநில நிர்வாகத்திற்கும்., இந்த நிதியை பெற்றுத் தந்த நமது மாநில சங்கங்களுக்கும்., NFTE மற்றும் TMTCLU சேலம் மாவட்ட சங்கங்களின் சார்பாக., நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.




























































No comments:
Post a Comment