ஊதிய மாற்றக்குழுவின் - ஊழியர் தரப்பு கூட்டம்

நமது BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு ஊதியக்குழுவின் ஊழியர் தரப்பு கூட்டம் 25-09-2018 அன்று மாலை 03-00 மணிக்கு டெல்லியில் உள்ள நமது NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில்., நமது NFTE சங்கத்தின் சார்பாக., அகில இந்திய பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம் அகமது., அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர். K.S.சேஷாத்ரி மற்றும் அகில இந்தியப் பொருளர் தோழர். A.ராஜ்மௌலி ஆகியோரும் BSNLEU சங்கத்தின் சார்பாக., அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ., அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர். சுவபன் சக்கரவர்த்தி மற்றும் அகில இந்திய துணைத் தலைவர் தோழர். அனிமேஷ் மித்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள்., ஊதிய மாற்றம் தொடர்பாக., இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். இவ் விவாதத்தில் முக்கியமாக., நிர்வாக தரப்பு முன்மொழிந்த ஊதிய விகிதங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. மேலும்., எந்தந்த ஊதிய விகிதங்களில் தேக்கநிலை உருவாக வாய்ப்பு உள்ளது என கருதப்பட்டதோ...? அதற்கான சான்றுகள் ஏதும்...? இதுவரை., கீழ்மட்ட ஊழியர்களிடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும்., ஊதிய விகிதங்கள் விரைவாக இறுதி செய்யப்பட்டு., உடன்பாடு கையெழுத்திடப்பட்டு DOT-ன் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும்., ஊழியர்களின் படிகள் திருத்தம் (Perks and Allowances) குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஊழியர்களின் ஊதிய விகிதங்களை இறுதி செய்வதற்கு மட்டும் தான் DOT-ன் ஒப்புதல் தேவை என்றும்., ஊழியர்களின் படிகள் (Perks and Allowances) திருத்தத்திற்கு DOT-ன் ஒப்புதல் தேவை இல்லை என்றும்., மேலும்., ஊழியர்களின் படிகள் குறித்து., BSNL நிர்வாகமே முடிவு செய்திட முழு அதிகாரம் உள்ளது என்றும் விவாதிக்கப்பட்டது.
தோழர்களே...! இருதரப்பு ஊதியக்குழுவின் அடுத்த கூட்டம் 28-09-2018 அன்று மாலை 03-30 மணிக்கு நடைபெற உள்ளது. நம்பிக்கையுடன் காத்திருப்போம்...! ஊதிய மாற்றம் உறுதிப்படுத்திட...!
வாழ்த்துக்களுடன்...! தோழமையுள்ள...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.
No comments:
Post a Comment