Saturday, 29 September 2018

தேசிய தொழிலாளர் கருத்தரங்கம் மற்றும் 
தேசம் தழுவிய வேலை நிறுத்தம்


அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய தொழிலாளர் கருத்தரங்கம் 28-09-2018 அன்று நியூ டெல்லி., மாவ்லங்கர் அரங்கத்தில் நடைபெற்றது. இக் கருத்தரங்கில்., AITUC., INTUC., HMS., CITU., AIUTUC., TUCC., SEWA., AICCTU., LPF மற்றும் UTUC ஆகிய மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கின் தலைமைக்குழுவில் AITUC சார்பாக., தோழர். ராமேந்திரகுமார் தலைமை வகித்தார். பொதுச் செயலர் தோழியர். அமர்ஜித் கவுர் சிறப்புரை ஆற்றினார்.

இக் கருத்தரங்கில்., மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத., தொழிலாளர் விரோத., பொதுத்துறை விரோத கொள்கைகள் மற்றும் பன்னாட்டு நிறுவன., கார்ப்பரேட் நிறுவன ஆதரவு கொள்கைகள் மற்றும் நவீன தாராளமய கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இவ் விவாதத்தில்., மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத., தொழிலாளர் விரோத மற்றும் மானுட விரோத கொள்கைகளை கண்டித்தும்., 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் 2017 நவம்பர் 9., 10 மற்றும் 11 ஆகிய 3 நாட்கள் நாடாளுமன்ற முற்றுகைப் போர் (Mahapadav) நடத்தியும்., மத்திய அரசிடம் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில்., கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்கள் உள்ளிட்ட வேலைநிறுத்த போராட்டங்கள் நடத்திட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (குறிப்பு: 2017 நவம்பர் 9., 10 மற்றும் 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் (Mahapadav) நமது NFTE சங்கமும் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.)

அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கருத்தரங்க முடிவின் படி:
  • 2018 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் முழுவதும் நாடு தழுவிய கருத்தரங்கங்கள் நடத்துவது.
  • 2018 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாயிற்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவது.
  • 2018 டிசம்பர் 17 முதல் 22 வரை நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது.
  • இறுதியாக., 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் தேசம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது.
எனவே...! தோழர்களே...! தயாராவீர்...!
இப்போது இல்லை என்றால்...! 
இனி எப்போதும் இல்லை...!    
உணர்வோடு பங்கு பெறுவோம்...! நம் உரிமைகளை மீட்டெடுப்போம்...!

போராட்ட வாழ்த்துக்களுடன்...! தோழமையுள்ள...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment