இருதரப்பு ஊதியக்குழு - ஆறாவது கூட்டம்

நமது BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு ஊதியக்குழுவின் ஆறாவது கூட்டம் 28-09-2018 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் (தலைமை பொது மேலாளர் - சட்டம்) - CGM - Legal) அவர்கள் தலைமை தாங்கினார்.
இக் கூட்டத்தில்., இருதரப்பு ஊதியக்குழுவின் நிர்வாக தரப்பு மற்றும் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இருதரப்பு ஊதியக்குழுவின் இன்றையக் கூட்டத்தில்., 3-வது ஊதிய மாற்றத்திற்கான ஊதிய விகிதங்கள் இறுதிப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தையில் ஊழியர் தரப்பு., புதிய ஊதிய நிலைகளில் தேக்கநிலையை தவிர்ப்பதற்காக தாங்கள் ஊதிய விகிதங்களை ஆய்வு செய்ததில் NE-4 (19900-56200) மற்றும் NE-5 (21300-59600) ஆகிய ஊதிய விகிதங்களில் தேக்கநிலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டினர். எனவே தேக்கநிலையை தவிர்க்க., இந்த ஊதிய விகிதங்களுக்கு மட்டும் (NE-4 மற்றும் NE-5) ஒரு ஆண்டு உயர்வுத் தொகையை கூடுதலாக வழங்கி அதன் இறுதிநிலை ஊதியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இக் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிர்வாக தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும்., ஊதிய விகிதங்கள் விரைவாக இறுதி செய்யப்பட்டு., உடன்பாடு கையெழுத்திடப்பட்டு DOT-ன் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என ஊழியர் தரப்பு கோரிக்கை விடுத்தது. இதற்கு பதில் அளித்த நிர்வாக தரப்பு., DOT-யின் ஒப்புதலுக்கு அனுப்பக்கூடிய ஊதிய உடன்பாட்டிற்கான ஒப்பந்த கோப்பு உடன்., ஊதிய மாற்றத்தால் ஏற்படக்கூடிய கூடுதல் செலவுகள் மற்றும் படிகள் (Perks and Allowances) மாற்றத்தால் ஏற்படக்கூடிய கூடுதல் செலவுகள் பற்றிய குறிப்பையும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தது. எனவே., அடுத்த இருதரப்பு ஊதியக்குழுவின் கூட்டத்தில் படிகள் திருத்தும் (Perks and Allowances) மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இருதரப்பு ஊதியக்குழுவின் அடுத்த கூட்டம் 09-10-2018 அன்று மாலை 03-30 மணிக்கு நடைபெறும். இக் கூட்டத்தில் படிகள் திருத்தம் (Perks and Allowances) மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.

No comments:
Post a Comment