Thursday 9 August 2018

தேசியக்குழுவின் நிலைக்குழு
கூட்டமும் - முடிவுகளும்

council meeting க்கான பட முடிவு

நமது தேசியக்குழுவின் (NJCM) நிலைக்குழு கூட்டம் 08-08-2018 அன்று டெல்லியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஊழியர் தரப்பு உறுப்பினர்களாக உள்ள NFTE மற்றும் BSNLEU சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேசியக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அமுலாக்கம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இவ் விவாதத்தில்., ஊழியர் தரப்பு உறுப்பினர்கள்., 35-வது தேசியக்குழு கூட்ட முடிவுகள் அமுலாக்கத்தில் உள்ள கால தாமதத்தை சுட்டிக்காட்டி தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். இறுதியாக., தேசியக்குழுவின் (NJCM) நிலைக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் - தீர்வுகள் எடுக்கப்பட்டன.

தேசியக்குழுவின் நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - தீர்வுகள்:
  • E-1 ஊதிய விகிதத்தில் ஊழியர்களின் பதவி உயர்வு குறித்து இயக்குனர் குழுவிற்கான குறிப்பு இந்த வார இறுதிக்குள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விடுபட்ட கேடர்களுக்கான கூடுதல் ஒரு ஆண்டு உயர்வுத் தொகை வழங்குவதற்கான குறிப்பு இயக்குனர் குழு கூட்டத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.
  • கேசுவல் ஊழியர்களின் பணிக்கொடை பிரச்சனை CA பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஒப்புதல் கிடைத்த உடன் இயக்குனர் குழுவிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றல் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும்.
  • TOA (G) கேடர்களுக்கான Confirmation மற்றும் Sr.TOA (G)-க்கான பதவி உயர்வு தேர்வுகள் நடத்துவது குறித்து TOA (G) கேடர்களுக்கான Confirmation தேர்வை 31-08-2018 க்கு முன்பாகவும்., Sr.TOA (G)-க்கான பதவி உயர்வு தேர்வை 31-12-2018 க்கு முன்பாகவும் நடத்திட மாநில நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
  • 28-01-2018 அன்று நடைபெற்ற JE தேர்வு முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு இயக்குனர் (மனிதவளம்) ஒப்புதல்-க்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • RTP சேவை காலத்தை., சேவைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்திட DOT-க்கு அனுப்பப்படும்.
  • "On line Exam" இணையத் தேர்வுக்கு ஊழியர்களை தயார் செய்திட 15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.
  • IQ பராமரிப்பு மற்றும் IQ-வை Online (இணையத்தில்)-ல் பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
  • BSNL CDA விதி 2006-ல் விதி 55(A) இணைப்பது குறித்து பரிசீலனை குழு., மாநில மட்டத்தில் குழுவை உருவாக்கிட மற்றும் மறுபரிசீலனை செய்திட வழிகாட்டுதல் கோரப்பட்டுள்ளது.
  • மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் உதவி மேலாளர் (Assistant Manager) பதவிகள் உருவாக்கம் குறித்து குழு அமைக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இலவச சேவை சிம் இணைப்பு வழங்குவதில் பாரபட்சம் நீக்க வேண்டும்.

No comments:

Post a Comment