ஊழியர் தரப்பு - ஊதியக்குழு அறிக்கை
நமது BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு ஊதியக்குழுவின் 2-வது கூட்டம் (2-வது சுற்று பேச்சுவார்த்தை) 09-08-2018 இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்நிலையில்., ஊதிய மாற்றம் தொடர்பாக 02-08-2018 அன்று NFTE மற்றும் NFTE-ன் கூட்டணி சங்கங்கள் கூடி விவாதித்தன. மேலும்., 03-08-2018 அன்று NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் கூடி விவாதித்தன.
அதன் அடிப்படையில்., கீழ்க்கண்ட புதிய ஊதிய விகிதங்களை., நமது கோரிக்கையாக., ஊழியர் தரப்பு., 08-08-2018 அன்று இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் அவர்களிடம் சமர்ப்பித்து உள்ளது.
நமது கோரிக்கையின் அடிப்படையில்:
- குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்: ரூபாய். 19,590/-
- அதிகபட்ச அடிப்படை ஊதியம்: ரூபாய். 39,990/-
01-01-2017 முதல் 3-வது ஊதிய மாற்றத்திற்கான ஊழியர் தரப்பு கோரிக்கை:
வ.எண் பழைய ஊதிய விகிதம் 01-01-2017 முதல் புதிய ஊதிய விகிதம்
(2-வது ஊதிய மாற்றம்) (ஊழியர் தரப்பு கோரிக்கை)
1. NE-1 7760 - 13200 19590 - 69800
2. NE-2 7840 - 14700 19790 - 70500
3. NE-3 7900 - 14880 19950 - 71110
4. NE-4 8150 - 15340 20580 - 73450
5. NE-5 8700 - 16840 21970 - 78320
6. NE-6 9020 - 17430 22770 - 81160
7. NE-7 10900 - 20400 27520 - 98220
8. NE-8 12520 - 23440 31610 - 112700
9. NE-9 13600 - 25420 34330 - 122340
10. NE-10 14900 - 27850 37620 - 134100
11. NE-11 16370 - 30630 39980 - 139980
12. NE-12 16390 - 33830 39990 - 139990
இந்த அடிப்படையில் ஊழியர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நிர்வாகத்தின் நிலை என்ன என்பது., இன்றைய பேச்சுவார்த்தையில் தெரிய வரும்.
No comments:
Post a Comment