தமிழ் மாநிலக்குழு - விவாதப்பொருள்கள்
24-வது தமிழ் மாநிலக்குழுவில்...! விவாதிப்பதற்காக...!
ஊழியர் தரப்பு சார்பாக...! நாம் எழுப்பியுள்ள...!
பிரச்சனைகள்...............!
ஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள்:
- 23-வது மாநிலக்குழு (RJCM) பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் அமுலாக்கம் பரிசீலனை.
- 3-G வசதிகளை அனைத்து BTS-களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.
- தமிழகம் முழுவதும் உள்ள காலியான இடங்கள் மற்றும் மின்சாரம் (சிக்கனம்) பயன்பாடு குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- BSNL-ல் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் படிவம்-16 (Form-16) வழங்க வேண்டும்.
- Project Vijay (விஜய் திட்டம்) பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை (Incentive) செப்டம்பர் 2017 முதல் வழங்க வேண்டும்.
- IQ-க்களை முறையாக பராமரிப்பு செய்திட வேண்டும்.
- வாடிக்கையாளர் சேவை மையம் (CSC) மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் இடம் (TRC) ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்.
- Sr.TOA (G) கேடருக்கான உறுதித் தேர்வு (Confirmation) மற்றும் தகுதித் தேர்வு நடத்திட வேண்டும்.
- BSNL ஊழியர்களின் வங்கி கடன்களுக்கு காப்பீடு (Insurance) கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- BSNL செல் கோபுரங்களில் மற்ற நிறுவனங்களுக்கு பகிர்வு செய்த பின்., மின்சார கட்டணம் மிக கூடுதலாக வருவதை முழுவதுமாக பரிசீலித்து செலவை கட்டுப்படுத்த வேண்டும்.
- பரிவு அடிப்படை பணிக்கான விண்ணப்பங்கள் மற்றும் பணி நியமனத்தை விரைவு படுத்த வேண்டும்.
- 20-க்கும் குறைவான தொலைபேசி எண்ணிக்கையை கொண்ட தொலைபேசி நிலையங்களை மூடுவது மற்றும் குரூப்ஸ் (Groups) தொலைபேசி நிலையங்களுடன் இணைப்பது மற்றும் ஊழியர்கள் இல்லா தொலைபேசி நிலையங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது.
- BSNL MRS மருத்துவ ரசீதுகள் தேக்கம் மற்றும் அசல் ரசீது (Original Bill) காணாமல் போவது குறித்து மருத்துவக்குழுவை மீண்டும் கூட்டிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ஊழியர்களின் ஓய்வுக்கால பலன்களை தனி நபர் வழக்கு காரணமாக நிறுத்தக் கூடாது என்ற கார்ப்பரேட் அலுவலக உத்திரவை அமுல்படுத்து.
- தவறான ஊதிய நிர்ணயத்தின் காரணமாக ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் கூடுதல் தொகையை பிடித்தம் செய்யக்கூடாது.
- உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 20-05-2009 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கு.
- ஒப்பந்த ஊழியர்கள் தங்களது பணிக் காலத்தில் இறந்தால் சலுகைகள் வழங்கிட வேண்டும்.
- BSNL அலுவலகங்களில் Western Toilet (மேற்கிந்திய முறைப்படி ஓய்வறை - Rest Room) அமைக்க வேண்டும்.
- பெண் ஊழியர்களுக்கு ஓய்வறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் உத்திரவாதம் செய்யப்பட வேண்டும்.

No comments:
Post a Comment