Friday 10 August 2018

இருதரப்பு ஊதியக்குழு - இரண்டாவது கூட்டம்


நமது BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு ஊதியக்குழுவின் இரண்டாவது கூட்டம் 09-08-2018 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் (தலைமை பொது மேலாளர் - சட்டம்) - CGM - Legal) அவர்கள் தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில் நிர்வாக தரப்பில்:
  • திரு. H.C.பந்த்., தலைமை பொது மேலாளர் (Legal) 
  • திரு. சௌரப் தியாகி., முதுநிலை பொது மேலாளர் (Estt)
  • திருமதி. ஸ்மிதா சௌத்ரி., முதுநிலை பொது மேலாளர் (EF)
  • திரு. A.M.குப்தா., பொது மேலாளர் (SR)
  • திரு. A.K.சின்ஹா., துணைப் பொது மேலாளர் (SR)
ஆகியோரும்

ஊழியர் தரப்பில் - NFTE சங்கம் சார்பாக:
  • தோழர். இஸ்லாம் அகமது., அகில இந்திய தலைவர் - NFTE
  • தோழர். C.சந்தேஷ்வர் சிங்., பொதுச் செயலர் - NFTE
  • தோழர். K.S.சேஷாத்ரி., துணைப் பொதுச்செயலர் - NFTE
மற்றும்

ஊழியர் தரப்பில் - BSNLEU சங்கம் சார்பாக:
  • தோழர். பல்பீர் சிங்., அகில இந்திய தலைவர் - BSNLEU
  • தோழர். P.அபிமன்யூ., பொதுச் செயலர் - BSNLEU
  • தோழர். சுவபன் சக்ரவர்த்தி., து.பொதுச் செயலர் - BSNLEU
  • தோழர். P.அசோகா பாபு., துணைத் தலைவர் - BSNLEU
  • தோழர். அனிமேஷ் மித்ரா., துணைத் தலைவர் - BSNLEU
ஆகியோரும் கலந்து கொண்டனர்

இக் கூட்டத்தில்., புதிய ஊதிய விகிதத்தின் முன்மொழிவை ஊழியர் தரப்பு முன்கூட்டியே நிர்வாகத்திடம் 08-08-2018 அன்று வழங்கி இருந்த நிலையில்., ஊழியர் தரப்பில் கொடுக்கப்பட்ட குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது. இவ் விவாதத்தில்., ஊழியர் தரப்பின் இந்த முன் மொழிவுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது தொடர்பாக ஊழியர் தரப்பில் விளக்கப்பட்டது.

ஆனால்., நிர்வாகத் தரப்பு எந்த ஒரு முன்மொழிவையும் கொண்டு வரவில்லை. மேலும்., நிர்வாகத் தரப்பில் ஊதிய மாற்றம் தொடர்பாக ஒரு துணைக்குழு உருவாக்கப்பட்டு இருப்பதாகவும்., அந்த துணைக்குழு புதிய ஊதிய விகிதம் குறித்த பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இந்த இருதரப்பு ஊதியக்குழு மற்றும் துணைக்குழு தனது பணிகளை வேகமாக செய்யவில்லை என்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் ஊதிய மாற்றத்தை இறுதி செய்வது என்பது மிகவும் சிரமமாகி விடும் என ஊழியர் தரப்பு., நிர்வாகத்திடம் தெரிவித்தது. இந்த இருதரப்பு ஊதியக்குழுவின் அடுத்தக் கூட்டம் 27-08-2018 அன்று நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment