Sunday 12 August 2018

நாம் எழுப்பியது வினா...!
எழுந்தது விடை அல்ல...! விரக்தி...!


நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்., மத்திய AUAB கூட்டமைப்பின் அறைகூவல் படி., 24, 25 மற்றும் 26 ஜூலை 2018 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் - தர்ணா போராட்டம் NFTE மற்றும் BSNLEU சங்கங்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு., NFTE சங்கம் மட்டும் தான்., காவல் துறையில் அனுமதி கோரியது. BSNLEU சங்கம் அனுமதி கோரவில்லை (ஆதாரம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் தொடர்புக்கு அஸ்தம்பட்டி காவல் நிலைய எழுத்தர் - கைப்பேசி எண்: 99944-06849) இந்த அடிப்படையில்., NFTE சங்கத்தின் கோரிக்கையை மட்டும்., பரிசீலித்த., அஸ்தம்பட்டி காவல் நிலையம்., சட்டம் மற்றும் ஒழுங்கு காரணங்களை மையப்படுத்தி., நமது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு 24-07-2018 மற்றும் 25-07-2018 ஆகிய 2 நாட்களுக்கு மட்டும் காலை 10-00 மணி முதல் மதியம் 02-00 மணி வரை அனுமதி வழங்கியது. இந்த அனுமதியின் காரணமாக., 4 மணி நேரம் மட்டும் (காலை 10-00 மணி முதல் மதியம் 02-00 மணி வரை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால்., நமது இயக்கத்தின் மரபிற்கு களங்கம் நேர்ந்திடக் கூடும் என்ற அடிப்படையில்., இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை., தர்ணா போராட்டமாக நடத்தினோம். (இது NFTE-ன் மரபுப் பாதை., பொறாமை வேண்டுமானால் பட முடியும்., போட்டி போட முடியாது. இது தேர்தல் களம் கிடையாது., தேர்தலில் வேண்டுமானால் வெற்றிப் பெற முடியும் (அதுவும் கூட அகில இந்திய மட்டத்தில் மட்டும்) மரபுக் களத்தில் மண்டியிடத் தான் முடியும்., தேர்தல் களத்தில் கம்யூனிசம் வீழ்ந்தாலும்., கொள்கைக் களத்தில் வீழ்த்த முடியாத மறவர்கள்., அது சரி., NFTE பேரியக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரிந்தவர்கள்., சங்கத்தின் பெயரை இழந்தவர்கள்., சின்னத்தை இழந்தவர்கள் இது போன்ற சந்தர்ப்பவாதி-களிடம் தொழிற்சங்க மரபை எதிர்பார்க்க முடியுமா...!

3 நாட்கள் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு., காவல் துறையில் அனுமதி பெறுவதற்க்குக் கூட முயற்சி செய்யாதவர்கள்., நமது அலுவலக வளாகத்தில் நடத்துகின்ற நிலையில் கூட., முழு நாள்., முழு நேரமாக குறைந்தபட்சம் காலை 10-00 மணி முதல் மாலை 05-30 மணி வரை (அலுவலக நேரம் வரை)-ஆவது., நடத்திடக்கூடிய போராட்ட குணம் இல்லாதவர்கள்., சுமார் 3 மணி நேரம் மட்டும் (காலை 11-00 மணி முதல் மதியம் 02-00 மணி வரை) உண்ணாவிரதப் போராட்டத்தை., நடத்தினால்., நமது இயக்கத்தின் மரபிற்கு களங்கம் நேர்ந்திடக் கூடும் என்பதைக் கூட அறியாமல்., உண்ணாவிரதப் போராட்டமாக நடத்தினார்கள். இதைவிட சிறப்பு என்ன என்றால் (BSNLEU சேலம் மாவட்ட சங்கம்., தன்னைத் தானே பெருமையாக நினைத்துக் கொண்டு., தன் போராட்டத்தை பெருமையாக நினைத்துக் கொண்டு) 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் 300 தோழர்கள் பங்கேற்றார்கள் என்று தங்களின் இணையத் தளத்தில் பதிவு செய்து இருந்தார்கள். பாவம் தங்களின் 3 மணி நேர உண்ணாவிரதப் பந்தலில்., 100 நாற்காலிகள் தான் இருந்தது என்பதை அறியாதவர்கள். இதை சகித்துக் கொண்ட., சேலம் மாவட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மணக் கேள்வியாக., இருந்ததைத் தான்., NFTE சங்கம் தனது இணையத் தளத்தில் 01-08-2018 அன்று மெய்-ம்...! பொய்-ம்...! (மெய் சிலிர்க்க வைத்த மெய்-ம்...! பொய்த்து போன பொய்-ம்...!) என்ற தலைப்பில் ஒரு விமர்ச்சனத்தை., ஒரு வினாவை எழுப்பியது.

இந்த வினாவிற்கு., விடை தராமல்., விரக்தி-ஆன BSNLEU சேலம் மாவட்ட சங்கம்., தன் மீது வைத்த விமர்ச்சனத்தை தாங்கி கொள்ள முடியாமல்., NFTE சேலம் மாவட்ட சங்கம் வைத்த விமர்ச்சனத்திற்கு., விரக்தி என்று நினைத்துக் கொண்டு (யார் எதுவாக இருக்கிறார்களோ...! அதுவாகத் தான் நினைக்க தோன்றும்...! பாவம் விரக்தியில் BSNLEU...! அதனால் தான் நம்மை விரக்தி என்று நினைக்கிறது) தங்களது இணையத்தளத்தில் 06-08-2018 அன்று விரக்தியின் வெளிப்பாட்டிற்கு பதில்...! என்று., நம் மீது ஒரு விமர்ச்சனத்தை முன் வைத்திருக்கிறது. தொழிற்சங்கத்திற்கு எதற்கு விரக்தி (விரக்தி-க்கு உதாரணம்: விரக்தியின் வெளிப்பாட்டிற்கு பதில்)...! எதற்கு தற்பெருமை...! (தற்பெருமை-க்கு உதாரணம்: 100 நாற்காலிகளில் 300 தோழர்கள்)...! தொழிற்சங்கம் என்றால் விமர்ச்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும்., NFTE பேரியக்கத்தைப் போல., (50-ஆண்டுகள் நீங்கள் வைத்த விமர்ச்சனத்தை தாங்கிக் கொண்டது போல) தொழிற்சங்க நதிக்கரையில் கிடைத்த திரவியம் தான் NFTE...! (நதிக்கரையில் தான் நாகரிகம் தோன்றியது என்பது வரலாறு...!) விமர்ச்சன அமிலங்களால் வரைந்த ஓவியம் தான் NFTE...! அந்த வகையில் எந்த விமர்ச்சனங்களையும் NFTE ஏற்றுக்கொள்ளும்...! இந்த விமர்ச்சனைத்தையும் ஏற்றுக்கொள்கிறது. அதே நேரத்தில்., இந்த விமர்ச்சனத்திற்கு பதில் அளிக்க வேண்டியது NFTE-ன் தார்மீக கடமை என்ற அடிப்படையில்., BSNLEU எழுப்பிய விமர்ச்சனத்திற்கு உரிய விளக்கத்தை தருகின்றோம்., தந்து இருக்கின்றோம்.

இதோ., BSNLEU-வின் விமர்ச்சனத்திற்கு விளக்கம்:

AUAB மத்திய கூட்டமைப்பின் அறைகூவல் படி., நாடுமுழுவதும்., பெரும்பான்மையான இடங்களில் ஒற்றுமையாக., 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து முடிந்து இருந்தாலும்., சேலம் உள்ளிட்ட பெரும் பகுதிகளில் NFTE மற்றும் NFTE-ன் கூட்டணி சங்கங்களோடு., ஒரு சில பகுதிகளில் NFTE கூட்டணி சங்கங்களோடு அதிகாரி சங்கங்களும் (ஆதாரம்: வேலூர் SSA-வில் AIBSNLEA சங்கம்) இணைந்து தனித்து போராடுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து பார்த்தது உண்டா...! நிச்சயம் இருக்காது., திருந்தாதவாதிகள் சிந்தித்து இருக்கமாட்டார்கள்., சிந்தித்து இருந்தால் தான் ஒற்றுமை என்றோ வந்து இருக்கும்., இணைந்து போராடி இருப்போம். ஒற்றுமைக்கும்., இணைந்து போராடுவதற்கும் NFTE என்றுமே தயக்கம் காட்டியது கிடையாது. ஏன்., கடந்த காலங்களில் (2013 முதல் 2016 வரை) நமது சேலம் மாவட்டத்தில் NFTE சங்கம் இணைந்து போராடியது என்பது வரலாறு. அதே நேரத்தில்., தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் BSNLEU சங்கத்தோடு இணையாமல் இருப்பதும் வரலாறு. இனி இணைவதும்., இணைய மறுப்பதும் ஊழியர்களின் நலன் சார்ந்து மட்டுமே அமையும் என்பதும் வரலாறு.

நமது BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தான்., நமக்கும்., நமது இயக்கங்களுக்கும் பெருமிதம் தேடித்தருபவர்கள்., ஏன்...! போராட்டக் களத்தின் வெற்றியைக்கூட தீர்மானிப்பவர்கள்., வேலை நிறுத்தங்களுக்கு நிறைய விலையைக் கொடுத்தவர்கள் அவர்களின் தியாகத்தை BSNLEU சங்கம் வேண்டுமானால் அறிந்திடாமல் இருக்கும்., NFTE சங்கம் என்றுமே அவர்களின் தியாகத்தை போற்றிப் புகழும் என்பது ஊழியர்கள் அறிந்த வரலாறு. ஊழியர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு பதிவிடக் கூடாது., இனியாவது., ஊழியர்களின் நிலை அறிந்து பதிவிட வேண்டும் (100 நாற்காலிகளில் 300 தோழர்கள் என்று பொய்யான பதிவை செய்யக் கூடாது) என்ற அடிப்படையில் BSNLEU சங்கத்தின் பதிவை தான்., NFTE சங்கம் விமர்ச்சனமாக முன் வைத்தது. ஆனால் இந்த விமர்ச்சனத்தை தாங்கிக் கொள்ள முடியாத BSNLEU சங்கம்., தனது இயற்கை குணமான., சிறு பிள்ளை தனத்தை வெளிப்படுத்தும் விதமாக., நமது விமர்ச்சனத்தை ஊழியர்கள் பக்கம் மடைமாற்ற நினைக்கிறது. பாவம் ஊழியர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல்., விரக்தி-ன் உச்சத்தில் BSNLEU.

நமது சேலம் மாவட்டத்தில்., இந்த உண்ணாவிரதம் - தர்ணா போராட்டம் தனித் தனியாக நடைபெற்று இருந்தாலும்., இது ஒரு கூட்டுப் போராட்டம் தான்., ஏற்றுக் கொள்கிறோம். வரலாற்றில் கடைசி வரை., இது ஒரு கூட்டுப் போராட்டமாகவே இருக்க வேண்டும் என்பது தான் NFTE-ன் ஆசை., கடந்த காலத்தை போல., தேர்தல் நெருங்கும் நேரத்தில்., தனி ஒரு சங்கத்தின் சாதனையாக., குறிப்பாக BSNLEU சங்கத்தின் சாதனையாக மாறிவிடக் கூடாது என்பது தான் எங்கள் கேள்வி., ஒரு வேலை இது தான் BSNLEU சங்கத்தின் வர்க்க குணமா...!                           

உண்ணாவிரதப் போராட்டமா...! தர்ணா போராட்டமா...! என்று மாவட்ட சங்கங்கள் முடிவு எடுக்க முடியாது (மாவட்ட சங்கங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவு எடுப்பதற்கு மாவட்ட சங்கத்திற்கு உரிமை உண்டு., அமைப்பு விதிகளில் இடமும் உண்டு)., என்றால் கடந்த காலங்களில்., BSNLEU சங்கம் மத்திய., மாநில சங்கங்களின் அறைகூவல்களில்., ஒரு சில போராட்டங்களை மாவட்டத்தின் சூழ்நிலைகளுக்கு  ஏற்ப நடத்தியது ஏன் (ஆதாரம் 1 மட்டும் : 12-04-2018 அன்று AUAB கூட்டமைப்பு முழுநேர தர்ணாவிற்கு அறைகூவல் விடுத்திருந்தது. ஆனால்., சேலம் மாவட்டத்தில் BSNLEU சங்கம் மாலை நேர தர்ணாவாக மாற்றி போராட்டம் நடத்தியது) ஊழியர்களை ஏமாற்றவா...! அல்லது தனது சங்கத்தை ஏமாற்றவா...! மேலும்., தங்களின் போராட்டம் பற்றி NFTE அறிந்திருப்பது முக்கியம் இல்லை., உங்கள் கூட்டமைப்பில் உள்ள தலைவர்களும்., தோழர்களும் அறிந்திருப்பது தான் முக்கியம். அந்த வகையில்., உங்கள் கூற்றுப்படி., நீங்கள் 17-07-2018 அன்று முடிவு எடுத்து இருந்தால்., ஏன்., உங்கள் முதல் நாள் போராட்டம் எங்கு நடைபெறுகிறது என்று தெரியாமல் அதிகாரிகள் பொது மேலாளர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

உயர் சித்தாந்தத்தில்., வர்க்க ஒற்றுமைக்காக எந்த ஒரு தொழிலாளி நடத்திய போராட்டத்தையும் BSNLEU விமர்ச்சித்ததாக வரலாறு இல்லை என்ற உங்களின் தற்பெருமை கருத்து நகைப்புக்கு உரியது. உங்கள் வரலாறே., மற்றவர்களை., குறிப்பாக NFTE பேரியக்கத்தை., ஒற்றுமை நாயகன் குப்தாவை குறை கூறுவதும்., விமர்ச்சனம் செய்வதும் தான்., இதை தாண்டி என்ன வரலாறு உண்டு. BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஓய்வூதியம் காத்திட., NFTE பேரியக்கம் நடத்திய (6, 7 மற்றும் 8 செப்டம்பர் 2000) போராட்டத்தில் விமர்ச்சனத்தை தவிர உங்கள் பங்கு என்ன...!

உழைக்கும் வர்க்கங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும்., இந்த நேரத்தில்., இதைவிட கொடுமையானது., தனது சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்., அவர்கள் கோரிக்கை மட்டும் நிறைவேற வேண்டும்., மற்ற சங்க உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற கூடாது., அப்படி நிறைவேறக்கூடிய நிலையில் இருந்தாலும்., அதை கெடுக்கக்கூடிய வக்கர சிந்தனையை வளர்க்கக்கூடிய நிலையில்., எப்படி தங்களோடு., வர்க்க ஒற்றுமை வளரும்., தொழிலாளி வர்க்கத்திற்கு யார் வேண்டுமானாலும் தடையாக இருக்கலாம் ஆனால்., தொழிற்சங்கம் மட்டும் தடையாக இருக்கக் கூடாது. இது தொழிற்சங்கத்திற்கு அழகல்ல., இது சிறுபிள்ளை தனத்தின் வெளிப்பாடு., இது தான் BSNLEU சங்கத்தின் பண்பாடு.

தொழிலாளி விரோதக் கொள்கையை கடைபிடித்த எந்த ஒரு தொழிற்சங்க அமைப்பும்., தனி மனிதனும் நிலைத்ததாக வரலாறு இல்லை.

திருத்தல்வாத தலைமை., திருந்தாத தலைமை., BSNLEU தலைமை., NFTE அங்கீகார காலத்தில் போராடி பெற்ற சலுகைகளைக் கூட காத்திட முடியாமல் கோட்டை விட்டது. அதை மீண்டும்., NFTE அங்கீகாரம் பெற்ற பின் மீட்டது. (குறிப்பாக: 78.2 IDA இணைப்பு., 78.2 IDA இணைப்பில் HRA., போனஸ் மற்றும் மாற்றுத்திறனாளிப் படி) என்றால்., நமது ஒன்றுபட்ட போராட்டங்களே காரணம். 01-10-2000-இல் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து போராட முடியாது என்று ஒதுங்கி நின்றவர்களையும் அரவணைத்துக் கொண்டு முதல் ஊதிய மாற்றத்தை பெற்றுத்தந்தவர் தான் NFTE பேரியக்கத்தின் பிதாமகன்., ஒற்றுமை நாயகன் தோழர். O.P.குப்தா அவர்கள். ஒற்றுமையை கட்டியவர்களுக்கு., அதை 50 ஆண்டுகளுக்கு மேலாக காத்தவர்களுக்கு தான்., ஒற்றுமையின் பலமும் தெரியும்., ஒற்றுமையை கட்டுவதில் உள்ள சிரமங்களும் புரியும். ஆனால்., இன்று., ஒற்றுமைக்கு அர்த்தம் தெரியாத ஒரு சங்கம் தன்னைத் தானே ஒற்றுமை நாயகன் என்று பெயர் சூட்டி மகிழ்கிறது. பெயர் சூட்டிக் கொள்வது பெருமை., தன் பெயரை தானே கூப்பிட்டு கொள்வது சிறுமை. அந்த வகையில் யார் பெருமைக்கு உரியவர்...! யார் சிறுமைக்கு உரியவர்...! என்பதிற்கு ஒரு சான்று., அண்மையில்., FNTO மாநில சங்கம் ஊதிய மாற்றம் தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அந்த சுற்றறிக்கையில் பாரா-5-ன் பதிவு: கடந்த காலங்களில் மூத்தத் தலைவர் தோழர். O.P.குப்தா அவர்கள் கட்டிக்காத்த ஒற்றுமை மற்றும் தோழமை தோழர். P.அபிமன்யூ அவர்களிடம் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. (ஆதாரம்: சேலம் மாவட்ட FNTO சங்கத்தின் அறிவிப்பு பலகைகள்)

மெய்மை மெய் சிலிர்க்க வைத்தாலும்., ஒரு சில நேரங்களில் பொய்மையும் மெய் சிலிர்க்க வைப்பது என்பது வேதனையான மெய்மை., யாருக்கு என்பது தான் மிகப் பெரிய கேள்வி...!

இணையத்தள போர் தவிர்த்திட...! இயக்கப் போர் முன்னெடுத்து சென்றிட...! இணைந்த போராட்டங்கள் வென்றிட...! இயக்கத் தோழர்களின் நலன் சார்ந்தே...! இலாக்கா ஊழியர்களின் நலன் சார்ந்தே...! NFTE பேரியக்கம்...! என்றும் பயணிக்கும்...!

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து - திருக்குறள்.

திருக்குறள் விளக்கம்: பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்., ஆனால்., சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

என்றும்...! ஒற்றுமை நலன் விரும்பி...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment