Tuesday 14 August 2018

தோழர். சோம்நாத் சட்டர்ஜி காலமானார்


தோழர். சோம்நாத் சட்டர்ஜி
பிறப்பு: 25-07-1929 - இறப்பு: 13-08-2018

முன்னாள் மக்களவை தலைவர்., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். சோம்நாத் சட்டர்ஜி அவர்கள் 13-08-2018 அன்று தனது 89-வது வயதில் உடல் நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தோழர். சோம்நாத் சட்டர்ஜி 1929-ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி அசாம் மாநிலம் திஸ்பூரில் பிறந்தார். கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞர்-ஆக பணியாற்றினார். 1968-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவில் இடம் பெற்றார். 1971-ஆம் ஆண்டு முதல் 10 முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவராக பணி ஆற்றினார். 14-ஆவது மக்களவையின் தலைவராக (சபாநாயகராக) 5 ஆண்டுகள் 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது பெற்றார்.

தோழர். சோம்நாத் சட்டர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் முழுவதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக., நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.

நம் நாட்டின் நலன்களுக்காகவும்., அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படவும்., மதச்சார்பின்மை கொள்கை காக்கப்படவும் உறுதியான முறையில் போராடி வந்தவர். சமூக மாற்றத்திற்காக., சோசலிச லட்சியக் கொள்கையை ஏற்று., அக் கொள்கை வெற்றிபெற தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மகத்தான தலைவர்.

தோழர். சோம்நாத் சட்டர்ஜி அவர்களது மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும்., கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும்., உழைக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

தோழர். சோம்நாத் சட்டர்ஜி அவர்களின் மறைவிற்கு., NFTE-BSNL சேலம் மாவட்ட சங்கம் சிரம் தாழ்த்தி., செங்கொடி தாழ்த்தி., தனது அஞ்சலியை செலுத்துவதோடு., அவரது பிரிவால் வாடும்., அவரது குடும்பத்தாருக்கும்., பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறது.

ஆழ்ந்த இரங்கல்...! உடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment