Thursday 2 August 2018

தமிழ் மாநிலச் சங்கத்தின் - ஊதியக்குழு
கூட்டமும் - பரிந்துரைகளும்



நமது NFTE-BSNL  தமிழ் மாநிலச் சங்கத்தின் ஊதியக்குழு கூட்டம் 30-07-2018 அன்று சென்னை கிரீம்ஸ் சாலை., தலைமை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில்  உள்ள நமது NFTE-BSNL மாநில சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தோழர். P.காமராஜ் தலைமை ஏற்க., முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R.பட்டாபிராமன் கூட்டத்தை வழி நடத்தினார். இக் கூட்டத்தில்., மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன்., அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S.பழனியப்பன்., மாநிலப் பொருளர் தோழர். L.சுப்பராயன்., மாநில உதவிச் செயலர் தோழர். G.S.முரளிதரன்., நமது சேலம் மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் நமது கூட்டணி சங்கங்களின் சார்பில் TEPU மாநிலச் செயலர் தோழர். K.கிருஷ்ணன் மற்றும் SEWA-BSNL., CGM அலுவலக மாவட்டச் செயலர் தோழர். ஓம் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில்., கீழ்க்கண்ட பரிந்துரைகளை மத்திய சங்கத்திற்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது:
  • 01-01-2017 முதல் பணப்பலனுடன் கூடிய ஊதிய மாற்றம்.
  • அதிகாரிகளுக்கு இணையாக (அதிகாரிகளுக்கு கொஞ்சமும் குறைவின்றி) 15% சதவீத ஊதிய நிர்ணயம்.
  • 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய். 9,000/- என திருத்தி அமைக்கப்பட்டதைப் போன்று., நமது குறைந்தபட்ச ஊதிய நிலையான NE-1-ன் ஆரம்ப நிலை ஊதியம் 18,000/- ரூபாய்-க்கு மேல் இருக்க வேண்டும். அப்போது தான் 01-01-2016 முதல் DoP&T உத்திரவின்படி நடப்பில் உள்ள NE-1 முதல் NE-6 வரை-ஆன ஊதிய நிலைகளில் உள்ள BSNL ஓய்வூதியர்களும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் பலனைப் பெற முடியும்.
  • ஊழியர்களின் தேக்கநிலையை கலைவதற்கு நமது ஊதியக்குழு புதிய ஊதிய நிலைகளின் இறுதி ஊதிய விகிதத்தினை நீண்ட இடைவெளியில் (Span) பெற வலியுறுத்த வேண்டும். அனைத்து (NE-1 முதல் NE-12 வரை) புதிய ஊதிய நிலைகளின் இறுதி நிலை ஊதியம்., (அதாவது: நடப்பு இறுதி நிலை ஊதியம் (உம்: NE-1 7760 - 13320) 13320 + 119.5% சதவீதம் + 15% ஊதிய நிர்ணயம் + 8 ஆண்டு உயர்வுத் தொகை (26% சதவீதம்) என கணக்கிட வேண்டும். இதன் மூலம் ஊதிய தேக்கநிலை ஏற்படாமல் தடுக்க முடியும்.
  • தற்போது உள்ள., ஊதிய நிலைகள்-ஆன NE-1 மற்றும் NE-2 ஆகிய ஊதிய நிலைகளை NE-3 உடன் இணைக்கப்பட்டு ஊதிய நிலை NE-3-ஐ ஆரம்ப ஊதிய நிலையாக அமைத்தால் குரூப்-டி ஊழியர்களின் தேக்க நிலையை கலைய முடியும்.
  • தற்போது உள்ள., ஊதிய நிலை NE-8-ஐ (6550-185-9325 - 12520-23440) ஊதிய நிலை NE-9 உடன் (7100-200-10100 - 13600-25420) இணைப்பதன் மூலம் NEPP பதவி உயர்வுக் கொள்கையின் படி 7100-இல் இருந்து 6550-க்கு குறைக்கப்பட்டு தேக்கநிலையில் உள்ள ஊழியர்களை பாதுகாக்க முடியும்.
  • தற்போது நடப்பில் உள்ள 12 ஊதிய நிலைகளுக்குப் பதிலாக 9 ஊதிய நிலைகளே போதுமானது.
  • Perks and Allowance படிகள் மாற்றம் குறித்து தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் இருக்கலாம்., அதற்காக அலவன்சுகளை உயர்த்துவது குறித்து குரல் எழுப்பாமல் இருக்க முடியாது. 3 அல்லது 4 அலவன்சுகளை உயர்த்திப் பெறுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான படி.
  • தொலைபேசி பழுதுகளை சரி செய்வதை ஊக்குவிக்க பெட்ரோல் படிகள் போல மிதிவண்டி பராமரிப்பு படியையும் உயர்த்த வேண்டும்.
  • போக்குவரத்துப்படி.
  • போக்குவரத்துப்படி உள்ளிட்ட ஒரு சில படிகளை விலைவாசிப் புள்ளியுடன் இணைத்து அதன் அடிப்படையில் உயர்த்தி வழங்க வேண்டும்.
  • ஊதியமாற்றம் தொடர்பாக DPE நிறுவனத்தின் வழிகாட்டுதலைப் பெற பிரதமர் அலுவலகம்., DPE அலுவலகம் ஆகியவற்றை அணுகிய மத்திய சங்கத்தின் தனிப்பட்ட முயற்சிகளை இவ் ஊதியக்குழு பாராட்டுகிறது.
  • ஊழியர்களுக்கான DPE வழிகாட்டுதல் வெளியான பிறகு நமது NFTE சங்கம் BSNL நிர்வாகத்தினை உரிமையோடு அணுகி., தொலைத்தொடர்பு துறையின் (DOT) கவனத்தை நமது பக்கம் திருப்பியது. நமது NFTE சங்கத்தின் முயற்சியால் மட்டுமே., ஊதியக்குழு அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. ஊதியமாற்றக் கூட்டுக்குழுவினை அமைக்க நமது சங்கம் தொடர்ந்து பாடுபட்டது., வெற்றியும் அடைந்தது. 2-வது ஊதிய மாற்றத்தின் போது ஊதியக் கூட்டுக்குழு அமைக்கப்படவே இல்லை. நிர்வாகம் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு மட்டுமே அமைக்கப்பட்டது. BSNLEU சங்கத் தோழர்கள் அதில் உறுப்பினர்களாக இடம் பெறவில்லை. ஆகவே., ஊதியக்குழு அமைக்கப்பட்டது நமது சங்கத்தின் மிகப்பெரும் சாதனை ஆகும்.
  • 19-07-2018 அன்று ஊதிய மாற்றத்திற்கான கூட்டுக்குழுவை அமைத்திட நிர்வாகம் தனது உத்திரவை வெளியிட்டது. அதில்., நாம்., சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஊதியக்குழு அமைக்கப்பட்டது., ஆனால்., ஊதியக்குழுவிற்கான வழிகாட்டுதல் ஏதும் வழங்கப்படவில்லை. ஊதியக்குழு அமைக்கப்பட்டதின் நோக்கமே., "ஊதிய நிலைகளை - ஊதிய விகிதங்களை கட்டமைக்க மட்டும் தான்" என்பதை இக் கடிதத்தின் மூலமாக ஊகித்துக்கொள்ள முடியும். இந்த ஊதியக்குழு ஊதிய நிலைகளை கட்டமைக்க மட்டுமே உருவானதேயன்றி., ஊதிய மாற்றத்தின் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் தலையிட முடியாது என்பதையே காட்டுகிறது.
  • இந்த ஊதியக்குழுவிற்கு., ஊதிய பேச்சுவார்த்தை தொடர்பான அனைத்து தரப்பு அதிகாரம் உள்ளதா., என்பதை., அறிந்திட., தமிழ் மாநில ஊதியக்குழு விரும்புகிறது. ஊதியக்குழுவால்., ஊதிய நிலைகளை கட்டமைப்பதைத் தவிர வேறு ஏதும் செய்திட முடியாது என சொல்லப்படுகிறது. இது குறித்து., நிர்வாகத்தரப்பிடம் இருந்து விளக்கம் பெறப்பட வேண்டும்.
  • ஊதியக்குழு 20-07-2018 அன்று கூடிய போது., விவாதங்களில் ஊழியர் தரப்பு DPE நிறுவனத்தின் 24-11-2017 வழிகாட்டுதலில்., பாரா-2 (iii) என சரியாக தனது சந்தேகங்கள் குறித்த விளக்கத்தை கேட்டது. இக் கூட்டத்தின் குறிப்பு 27-07-2018 அன்று வெளியிடப்பட்டது. ஆனால்., இக் குறிப்பில்., பாரா-3 என பதிவு செய்யப் பட்டுவிட்டது. இந்த தவறான பதிவை., நமது சங்கம் திருத்திட வேண்டும் எனவும்., எதிர் வரும் காலங்களில்., கூட்டத்தின் குறிப்புகள் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளிடம் காண்பிக்கப்பட்டு தவறுகள் இல்லாமல் வெளியிடப்பட வேண்டும்.
  • மேற்படி., கூட்டத்தின் குறிப்பில் பாரா-4 என்பது DPE OM Dated பாரா-2 (VI) என சரியாக பதிவு செய்யப்பட்டது. ஆனால்., பாரா-2 (iii) பதிவில் இது நடக்கவில்லை.
  • பாரா-2 (VI) -ல் கீழ்க்கண்ட பதிவுகளை இணைகின்றோம்:
  • தமிழக ஊதியக்குழு கருதுவது என்னவென்றால் DPE OM தேதி 24-11-2017 பாரா- 2(I)-ல் குறிப்பிடப்பட்ட "கொடுதிறன் மற்றும் நிதிதிறன்" ஆகியவை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து மத்திய சங்கம் குரல் எழுப்ப வேண்டும்.
  • கடந்த ஊதியக்குழு போனஸ் குறித்து விவாதித்தது. போனஸ் கோரிக்கை-ம் தற்போது எழுப்பப்பட்டு., மத்திய அரசின்., முடிவின் படி குறைந்தபட்ச போனஸ் பெறப்பட வேண்டும்.
  • BSNL பதவி உயர்வு கொள்கையில்., அதிகாரிகளுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்படுவது போல்., ஊழியர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
  • பொதுத்துறை நிறுவனங்களால் முறைப்படுத்தப்பட்ட பஞ்சப்படி அடிப்படையிலான ஊதிய நிர்ணயம் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுபவர்களுக்கு ஆனது. நம்மை போன்று 10 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுபவர்களுக்கு அல்ல.

    No comments:

    Post a Comment