Friday 3 August 2018

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் உடன்...!
AUAB தலைவர்கள் சந்திப்பு - ஓர் பார்வை...!


நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களை BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (AUAB) தலைவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று டெல்லி., பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. M.B.ராஜேஷ் அவர்கள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். அதோடு., மத்திய அமைச்சர் உடன் நடைபெற்ற விவாதத்திலும் பங்கு பெற்றார்.

இக் கூட்டத்தில்., NFTE அகில இந்திய துணைப் பொது செயலர் தோழர்.  K.S.சேஷாத்ரி., BSNLEU பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ., SNEA பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின்.,  AIBSNLEA பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய்., AIGETOA பொதுச் செயலர் தோழர். ரவி ஷில் வர்மா., BSNLMS பொதுச் செயலர் தோழர். சுரேஷ்குமார்., BSNL ATM பொதுச் செயலர் தோழர். S.D.சர்மா மற்றும் TEPU அகில இந்திய துணைப் பொது செயலர் தோழர். J.விஜயகுமார் ஆகியோர் பங்கு பெற்றனர்.

24-02-2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்கள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., AUAB தலைவர்களிடம் அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து தங்களது வருத்தத்தை AUAB தலைவர்கள் தெரிவித்தனர். மேலும்., கடந்த 5 மாதங்களில்., உறுதிமொழிகளின் அமுலாக்கம் தொடர்பாக., மத்திய அமைச்சரோ., தொலைத்தொடர்பு செயலரோ இதுவரை., ஒரு கூட்டத்தைக் கூட நடத்த வில்லை என்பதையும் AUAB தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் உடன் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்:
  • 3-வது ஊதிய மாற்றம் தொடர்பான செலவிடும் திறன் (Affordability) பிரிவில் இருந்து BSNL நிறுவனத்திற்கு விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனால்., இதுவரை., தொலைத்தொடர்பு துறை (DOT)., 3-வது ஊதிய மாற்றத்திற்கான., செலவிடும் திறன் (Affordability) பிரிவில் இருந்து BSNL நிறுவனத்திற்கு விலக்குப் பெறுவதற்கான அமைச்சரவை குறிப்பை தயாரிப்பதற்கான பணிகளை துவங்க வில்லை.
  • BSNL ஊழியர்களின்., ஊதிய விகிதத்தின் (Scale of Pay - உம்: NE-1 7760-13320) இறுதி நிலை ஊதியத்திற்கு மாறாக., மத்திய அரசாங்கத்தின் உத்திரவுப் படி., ஊழியர்கள் வாங்கும் அடிப்படை ஊதியத்தின் (Basic Pay) அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பை., BSNL நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என மத்திய அமைச்சர் தொலைத்தொடர்பு செயலருக்கு வழிகாட்டினார். ஆனால்., இது குறித்து தொலைத்தொடர்பு துறை., இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • BSNL ஓய்வூதியர்களுக்கு., ஓய்வூதிய மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர்., தொலைத்தொடர்பு செயலருக்கு 24-02-2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வழிகாட்டினார். ஆனால்., இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.
  • BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனால்., இதுவரை BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கப்படவில்லை.
மேற்கண்ட விவாதங்களுக்கு பின்., BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றை வழங்குவது என்பது அரசாங்கத்தின் கைகளில் உள்ளது என்றும்., விரைவில் வழங்கப்படும் என்றும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்கள் தெரிவித்தார். மேலும்., ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., மற்றும் ஓய்வூதிய பங்களிப்பு ஆகியவை குறித்து 03-08-2018 அன்று தொலைத்தொடர்பு செயலருடன் விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும்., BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  தங்கள் கோரிக்கைகளை எழுப்பும் அதே நேரத்தில்., BSNL நிறுவனத்தின் வருவாயையும் தாங்கள் ஈட்டித்தர வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். மிகக் கடுமையான விலைக் குறைப்பில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு கடுமையான போட்டியை தாங்கள் கொடுத்து வருவதாக AUAB தலைவர்கள் பதில் அளித்தனர். இக் கூட்டத்திற்கு., அனுமதி வழங்கி., பிரச்சனைகளை விவாதித்த., மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுக்கு., கேரள மாநிலம் பாலக்காடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. M.B.ராஜேஷ் அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.

இத்தகைய கூட்டத்தினை ஏற்றுக் கொண்டு., பிரச்சனைகளை விவாதித்த., மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுக்கும்., அதே போல இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த., கேரள மாநிலம் பாலக்காடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. M.B.ராஜேஷ் அவர்களுக்கும் AUAB தலைவர்கள் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment