Wednesday 4 July 2018

Sr.TOA பதவி உயர்விற்கான தகுதித்தேர்வு
வாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல்



12-06-2018 அன்று நடைபெற்ற தேசியக்குழு (NJCM) கூட்டத்தில்., Sr.TOA (G) பதவி உயர்விற்கான., தகுதித்தேர்வு (Screening Test) நடத்திட வேண்டும்., என., நமது NFTE மத்திய சங்கம் கோரிக்கை வைத்து விவாதித்தது. மேலும்., இக் கோரிக்கையை வலியுறுத்தி நிர்வாகத்திற்கு கடிதமும் எழுதியது. அதன் அடிப்படையில்., BSNL நிர்வாகம் 02-07-2018 அன்று Sr.TOA (G) பதவி உயர்விற்கான., தகுதித்தேர்வு (Screening Test) நடத்திட., வழிகாட்டும் உத்திரவை வெளியிட்டுள்ளது. உத்திரவு எண்: No. 250-16/2004-Pers/ Estt-III Dated 02-07-2018.

இந்த வழிகாட்டும் உத்திரவில்., BSNL நிர்வாகம்., Sr.TOA (G) பதவி உயர்விற்கான தகுதித்தேர்வு (Screening Test) நடத்திட., ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்., பெரும்பாலான மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில்., Sr.TOA (G) பதவி உயர்விற்கான தகுதித்தேர்வு (Screening Test) நடைபெறவில்லை எனவும்., Sr.TOA (G) கேடருக்கான ஆளெடுப்பு விதியின் சரத்துகளில் பாரா 12-ன் படி 10 +2 கல்வித்துகுதி இல்லாத ஊழியர்களுக்கு தகுதித்தேர்வு (Screening Test) நடத்திட ஏற்பாடு உள்ளது எனவும்., மேலும்., இது குறித்து தனியாக உத்திரவு ஏதும் வெளியிடப்படவில்லை எனவும்., மாநில நிர்வாகங்கள் கார்ப்பரேட் அலுவலக உத்திரவின் படி தனியாக தேர்வு நடத்திக் கொள்ளலாம் எனவும்., தெளிவுபடுத்தப் பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாநில நிர்வாகங்களும் Recruitment Rule of Sr.TOA (G) 2007., Sub-Para 1., 2 & Column 12-ன் படி உடனடியாக Sr.TOA கேடருக்கு தகுதித்தேர்வு (Screening Test) நடத்தலாம் என கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான பாடத்திட்டங்கள் இணைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்., ஊழியர்கள் TOA (G) கேடருக்கான Confirmation தேர்வில் கண்டிப்பாக தேர்வு பெற்று., Confirmation பெற்று இருக்க வேண்டும் எனவும்., TOA (G) கேடரில்., Confirmation தேர்வு நடைபெறாமல்., ஊழியர்கள் தகுதி பெறாமல் விடுபட்டு இருப்பின் அவர்களுக்கான Confirmation தேர்வினை 30.09.2018-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும்., இறுதியாக., Sr.TOA (G) கேடருக்கு., தகுதித்தேர்வு (Screening Test) நடத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் 31.12.2018-க்குள் முடிக்க வேண்டும் எனவும் மாநில நிர்வாகங்களை கார்ப்பரேட் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment